ஒபாமாவின் ஆலோசகர் இஸ்ரேல் விரைவு



ஈரான் அணு ஆயுதங்கள் தயாரித்து வருகிறது என அமெரிக்கா, மேற்குலக நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதனை ஈரான் மறுத்து வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் நடந்த தாய்லாந்து தலைநகர் பாங்காங் குண்டுவெடிப்பு தாக்குதல்களுக்கு ஈரான் தான் காரணம் என இஸ்ரேல் குற்றம் சாட்டுகிறது.
இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர்மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான டொம் டோனிலோன் அவசர பயணமாக நேற்று இஸ்ரேல் புறப்பட்டு சென்றார். அங்கு அவர் 2 நாட்கள் தங்கி இருந்து ஈரான், சிரியா விவகாரம் குறித்து முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.
ஈரான் நாடு சமீபத்தில் அணு உலையில் யுரேனியம் செறிவூட்டலை தொடங்கி விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவித்தது என்றாலும் அணு உலை விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த தயார் என்றும் இந்த நாடு அறிவித்துள்ளது.
இது அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளை சற்று நிதானிக்க வைத்துள்ளது.
இஸ்ரேல் நாட்டின் வடகிழக்கு எல்லையில் அமைந்துள்ள சிரியாவில் உள்நாட்டு கலவரம் தீவிரம் அடைந்து வருகிறது. எனவே ஈரான், சிரியா நாடுகளின் பிரச்சினைகள் குறித்து அமெரிக்க சிறப்பு தூதர் ஆலோசிப்பார் என தெரிகிறது.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்