Posts

Showing posts from January, 2012

ஆசனப் பட்டியணியாது வாகனம் செலுத்தின் அதே இடத்தில் அபராதம்

Image
சட்டத்திருத்தத்திற்கு பணிப்பு ஆசனப்பட்டி அணியாமல் வாகனங்களைச் செலுத்தும் சாரதிகளிடமும், முன் ஆசனத்தில் பயணம் செய்பவர்களிடமும் உடனுக்குடன் அபராதம் விதிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர துரித நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பொலிஸ் மா அதிபருக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். தற்போது ஆசனப்பட்டி அணியாது வாகனங்களைச் செலுத்துகின்ற சாரதி களுக்கும், முன் ஆசனத்தில் பயணம் செய் கின்றவர்களுக்கும் எதிராக அதே இடத்தில் அபராதம் விதிக்கப்படாது நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படுகின்றது. இவ்விடயம் தொடர்பாக ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்கள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களின் செய்திப் பொறுப்பாளர்கள் சந்திப்பின் போது பத்திரிகை ஆசிரியர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இச் சமயம் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷ அவர்கள் தொலைபேசி ஊடாகப் பொலிஸ் மா அதிபருடன் தொடர்பு கொண்டு இவ்விடயம் தொடர்பாக கேட்டறிந்தார். இச் சமயம் பொலிஸ் மா அதிபர், “ஆசனப் பட்டி அணியாது பயணிக்கின்ற சாரதி களிடமும், முன் ஆசனத்தில் பயணம் செய்கின்றவர்களிடமும் அதே இடத்தில் அபராதம் வ...

2010 இல் க.பொ.த. சா/தர பரீட்சையில் 9 ஏ பெற்றதன் மூலம் உம்றா செல்லும் வாய்ப்பு

Image
சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலத்தில் கல்வி பயிலும் அப்துல் றஹீம் றஷாத் அஹமட் எதிர்வரும் 2012.01.24 அன்று உம்றா கடமையை நிறைவேற்ற புனித மக்கமா நகர் செல்லவுள்ளார். இவர் சம்மாந்துறை ஜமாலியா வித்தியாலய அதிபர் எம்.ஏ.அப்துல் றஹீம், ஆசிரியை எம்.ஏ.றாஷிதா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வர் ஆவார். இவர் 2010ம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் 9 ஏ பெறுபேற்றை பெற்று சித்தியடைந்துள்ளார். இதனை கௌரவிக்கும் முகமாக 2011.12.11ல் கொழும்பு ஸாஹிறா கல்லூரியின் அப்துல் கபூர் மண்டபத்தில்  எம்.ஈ.பி.எஸ். அமைப்பினரால் நடாத்தப்பட்ட பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டு சான்றிதழ்கள், பரிசில்கள், பாராட்டுக்களை பெற்றதோடு புனித உம்றா கடமையை நிறைவேற்றுவதற்கான ஏழு நாள் இலவச பிரயாண டிக்கட்டையும் பெற்றுக்கொண்டார். மேலும், இலங்கையில் இருந்து இவ்விலவச உம்றா பயணத்தை மேற்கொள்ளும் வாய்ப்பினை ஆறு மாணவர்கள் பெற்றதோடு எமது பிரதேசத்தில் இவருக்கு மட்டுமே இவ்வாய்ப்பு கிடைக்கப்பெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.

நற்பிட்டிமுனை தார் இப்னு மஸ் ஊத் அஹதியா பாட சாலையின் வருடாந்த சான்றிதழ் வழங்கும் விழா

Image
நற்பிட்டிமுனை தார் இப்னு மஸ் ஊத் அஹதியா பாட சாலையின் வருடாந்த சான்றிதழ் வழங்கும் விழா ஞாயிற்று கிழமை (29 ) நற்பிட்டிமுனை அல்-அக்ஸா மகாவித்தியாலயத்தில் கல்லூரி பணிப்பாளர் மௌளவில் ஏ.எல்.நாசீர் கனி தலைமையில் நடை பெற்றது. இந்த நிகழ்வில் கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீரா சாஹிப்  பிரதம அதிதியாகவும் மாநகர சபை உறுப்பினர்களான நற்பிட்டிமுனை கிராமத்தை சேர்ந்த எம்.எல் .சாலிதீன் ,ஏ.எச்.எச்.எம்.நபார் ,அம்பாறை மாவட்ட அஹதியா பாட சாலை சம்மேளன தலைவர் எம்.ஐ.பைசால் மற்றும் ஞான தாரகை எம்.ஐ.இப்ராஹீம் வைத்தியர் உட்பட பலர் கலந்து கொண்டனர் . மாணவ ,மாணவிகளின் திறன்கள் இங்கு அரபு,தமிழ், ஆங்கில மொழிகளில் வெளிக்காட்டப் பட்டதுடன் பிரதம அதிதியாக கலந்து கொண்ட மாநகர முதல்வர் பொன்னாடை போத்தி கௌரவிக்கப் பட்டார்.

காரைதீவு சந்தியில் இருந்த பள்ளிவாசல் மீண்டும் நிர்மாணம்

Image
 ஹகீம் சம்பந்தன் பேச்சு  சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலுக்கு சொந்தமான காரைதீவு முச்சந்தி தைக்கா விவகாரத்திற்கு சுமூகமானதும் தீர்வு காண்பது தொடர்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸும்  தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் பேச்சு வார்த்தையொன்றை செய்துள்ளது. 1831ஆம் ஆண்டு தொடக்கம் குறித்த இடத்தில் அமைந்திருந்த காரைதீவு முச்சந்தித் தக்கியா முப்பது ஆண்டுகளாக யுத்த சூழ்நிலையில் சேதமாகி, காணப்படுகிறது. இந்த விவகாரம் பற்றி காரைதீவு பிரதேச சபையின் கவனத்திற்கு கொண்டு வந்து, அப்பிரதேசத்திலும் அதற்கு அண்மையிலும் வாழும் தமிழ், முஸ்லிம் சமூகங்களின் நல்லெண்ணத்தை பேணி சுமூகமான தீர்வை காண நடவடிக்கைகள் இருதரப்பிலும் எடுப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது . இந்த சந்திப்பு பாராளுமன்ற பிரமுகர் அறையில் இடம்பெற்றுள்ளது அதில் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ரி. ஹஸ அலி, எச்.எம்.எம்.ஹரீஸ், முத்தலீப் பாவா பாரூக், கல்முனை மாநகர சபை பிரதி மேயர் சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் ஆகியோரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு சார்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேம சந...

மார்பகத்தை பெரிதுபடுத்தும் போலி சிலிக்கன் ஜெல் நிறுவனர் கைது

Image
மார்பகத்தை பெரிதுபடுத்துவதற்காக பயன்படுத்தப்படும் போலியான சிலிக்கன் ஜெல்லை உற்பத்தி செய்த பி.ஐ.பி. நிறுவனத்தின் தலைவர் ஜீன் கிளல்ட் மெஸ் என்பவர் பிரான்ஸில் கைது செய்யப்பட்டுள்ளார். சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் இந்த சிலிக்கன் ஜெல்லை பயன்படுத்தி 65 நாடுகளைச் சேர்ந்த 400,000 க்கும் மேற்பட்ட பெண்கள் தமது மார்பகங்களை பெரிது படுத்திக் கொண்டுள்ளனர். எனினும் இவ்வாறு மார்பகத்தை பெரிது படுத்திக் கொண்டவர்கள் அதனை அகற்றும்படி பிரான்ஸ் உட்பட பல நாடுகளும் தமது நாட்டு பிரஜைகளிடம் கோரியுள்ளனர். இந்நிலையிலேயே இந்த நிறுவனத்தின் உரிமையாளரான 72 வயது மெஸ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் முன்னர் இறைச்சி விற்பனையாளராக செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தாய்சேய் நலன்புரி நிலையங்கள் கல்முனை நட்பிட்டிமுனையில் திறந்துவைப்பு

Image
கமநெகும வேலைத்திட்டத்தின் கீழ் விரிவாக்கம் செய்யப்பட்ட கல்முனை மற்றும் நற்பிட்டிமுனை தாய்சேய் நலன்புரி நிலையங்கள் திறப்பு விழா இன்று புதன்கிழமை நடைபெற்றது. கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி எம்.எஸ்.இப்றாலெப்பை தலைமையில் இடம்பெற்ற இந்த இரு நிகழ்வுகளுக்கும் பிரதம அதிதியாக திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் கல்முனை தொகுதி அபிவிருத்தி குழு தலைவருமான எச்.எம்.எம்.ஹரீஸ் கலந்து கொணடார். சுமார் 20 இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீட்டில் இந்த வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வில்  மாநகர சபை உறுப்பினர்களான நபார்,பரகத்,சமீர்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரிநூற்றாண்டு விழா

Image
மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரி எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் கொண்டாடவிருக்கும் பாடசாலையின் நூற்றாண்டு விழா தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விளக்கம் அளிக்கும் அமர்வு நேற்று பாடசாலையின் மண்டபத்தில் இடம்பெற்றது. 'அபிவிருத்தியை நோக்கிய பயணத்தில் அல்மனாரில் நூற்றாண்டு விழா' என்ற தலைப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அம்பாறை மாவட்டத்தைச்  சேர்ந்த ஊடகவியலாளர்கள், பாடசாலையின் உத்தியோகத்தர்கள், பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். இப்பாடசாலையின் அதிபர்  எஸ்.எம். எம்.எஸ். உமர்மௌலானா தலைமையில் இடம்பெற்ற இவ் அமர்வில் அல்மனார் மத்திய கல்லூரியினால் வெளியிடப்பட்ட 'அல்மனார் நியூஸ்' என்ற கை ஏட்டின் முதலாவது பிரதி அல்மனார் மத்திய கல்லூரியின் அதிபர் டாக்டர் எஸ்.எம். எம்.எஸ். உமர்மௌலானாவினால் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் தலைவர் மீரா எஸ்.ஸ்ஸடீனிடம் கையளிக்கப்பட்டது,

வடக்கு கிழக்கு காணி பதிவு உத்தரவு வாபஸ்!

Image
 -சட்ட மா அதிபர் திணைக்களம்- வடக்கு கிழக்கு காணிகளை பதிவு செய்யும் உத்தரவு வாபஸ் பெற்றுக்கொள்ளப்படும் என சட்ட மா அதிபர் திணைக்களம் நீதிமன்றில் அறிவித்துள்ளது. வடக்கு கிழக்கைச் சேர்ந்த காணி உரிமையாளர்கள் தங்களை மீள் பதிவுசெய்து கொள்ள வேண்டுமென உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 20ம் திகதிக்கு முன்னதாக இந்த பதிவுநடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நடவடிக்கையை உடனடியாக ரத்து செய்யுமாறு தமி;ழ்த் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் மேன்முறையீட்டு நீதிமன்றில்மனுவொன்றை தக்கல் செய்திருந்தார். இந்த மனு தொடர்பான விசாரணைகளில் கலந்து கொண்ட சட்ட மா அதிபர்திணைக்களம்- குறித்த உத்தரவு வாபஸ் பெற்றுக் கொள்ளப்படும் என நீதிமன்றில்அறிவித்துள்ளது. வடக்கு கிழக்கு காணி உரிமையாளர்கள் தங்களை பதிவு செய்து கொள்ளுமாறு அரசாங்கம்சுற்று நிருபம் ஒன்றை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. மேன்முறையீட்டு மனு நீதவான் ஸ்ரீஸ்கந்தராஜா மற்றும் நீதவான் தீபாலிவிஜேசுந்தர ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. க...

கல்முனை மாநகர சபையினால் நவீன மயப்படுத்தப் பட்ட திண்மக் கழிவு முகாமை

Image
கல்முனை மாநகர சபையினால் நவீன மயப்படுத்தப் பட்ட திண்மக் கழிவு முகாமைத்துவத்தை நடை முறைப்படுத்த கல்முனை மாநகர சபையும் ஐரோப்பிய ஒன்றியத்தின் யூநோப்ஸ் நிறுவனமும் இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பான சந்திப்பு மாநகர் முதல்வர் சிராஸ் மீராசாகிப் தலைமையில் இடம் பெற்றது.  இச்சந்திப்பில் யூநோப்ஸ் அதிகாரிகளும்  மாநகர ஆணையாளர்,கணக்காளர்.பொறியியலாளர் உட்பட உத்தி யோகதர்களும் கலந்து கொண்டனர்.

கல்முனை குடும்பஸ்தரின் சடலத்தை ஒப்படைப்பதில் ஆஸ்பத்திரிகள் அசமந்தம்!

Image
உயிர் பிரிந்த பின்னரும் உடலுக்கு நிம்மதியில்லை; ஆஸ்பத்திரியில் மரணித்த ஒருவரின் சடலத்தை உறவினர்கள் எடுத்துச் செல்வதற்கு ஆஸ்பத்திரி உயர் அதிகாரிகளிடம் கெஞ்சி மன்றாடி வரம் கேட்கும் கேவலமான நிலை கல்முனையில் ஏற்பட்டுள்ளது. கல்முனை வடக்கு ஆஸ்பத்திரி, கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த ஆஸ்பத்திரி இரண்டுமே இந்தப் பிரதேசத்தில் சகல வசதிகளுடன் இயங்கும் ஆஸ்பத்திரிகள். என்றாலும், இங்கு பணியாற்றுகின்ற ஒருசில உயர் அதிகாரிகளின் அசமந்தப் போக்கினால், மாரடைப்பால் இறந்த ஒருவரது சடலம் இரண்டு ஆஸ்பத்திரிகளிலும் அலைமோதி அல்லல் பட்டது. மனிதாபிமானமும் மனித உணர்வும் இல்லாத அதிகாரிகளால் காலை 7 மணி யளவில் மரணித்த ஒரு வரின் சடலம் இரவு ஆகியும் உறவினர்க ளிடம் கையளிக்க முடி யாத நிர்வாகச் சீர்கேடு மேற்படி இரு ஆஸ்பத் திரிகளிலும் மிகத் தாரா ளமாகவே இருக்கிறது. கடந்த 17ம் திகதி இங்கு நடந்த சம்பவம் உறவினர்களை மாத்திரமல்ல, சாதாரண மக்களையும் கொதிப்படையச் செய்யும். கல்முனையைச் சேர்ந்த செல்வக்குமார் (37 வயது) என்பவர் திடீர் நோய்வாய்ப்பட்டு கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்லும் போது மாரடைப்ப...

பொத்துவில் பிரதேச செயலாளராக தௌபீக் நியமனம்

Image
பொத்துவில் பிரதேச செயலாளராக எம்.ஐ.எம்.தௌபீக் நியமிக்கப்பட்டுள்ளார். பொத்துவில் பிரதேச செயலாளராக கடமையாற்றிய யூ.எல்.எம்.நியாஸ் இலங்கை வெளிநாட்டு சேவைக்கு தெரிவுசெய்யப்பட்டு வெளிவிவகார அமைச்சுடன்இணைக்கப்பட்டதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கே இவர் நியமிக்கப்பட்டுள்ளார். கல்முனையை பிறப்பிடமாகவும், சாய்ந்தமருதை வசிப்பிடமாகவும் கொண்ட தௌபீக், 2003ஆம் ஆண்டு இலங்கை நிர்வாக சேவைக்குள் உள்வாங்கப்பட்டார். இதனையடுத்து நிந்தவூர், சாய்ந்தமருது மற்றும் சம்மாந்துறை ஆகிய பிரதேச செயலகங்களில் உதவி பிரதேச செயலாளராக இவர் கடமையாற்றியுள்ளார்.

நுவரெலியாவில் ஐஸ் கட்டி மழை!

Image
நுவரெலியா மாவட்டத்தில் இன்று  காலை ஆலங்கட்டி மழை (ஐஸ் கட்டி மழை)பெய்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. நுவரெலியா மாவட்டத்தில் ஆகக்குறைந்தளவான 3.8 பாகை செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகியுள்ளது. அண்மைக் காலங்களில் இலங்கையில் பதிவான மிகக் குறைவான வெப்பநிலையாக இது கருதப்படுகிறது. இதேவேளை- நாட்டின் பல பகுதிகளிலும் இன்னும் சில நாட்களுக்கு குளிர் காலநிலையை எதிர்பார்க்க முடியும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு $றியுள்ளது.

உயிர் ஆபத்து கல்வி, எங்கே அரசியல் வாதிகள் அதிகாரிகள் ?

Image
கல்முனை கல்வி வலயத்திலுள்ள பாண்டிருப்பு நாவலர் வித்தியாலயத்தின் பாடசாலைக் கட்டடத் தின் மேற்கூரையின் ஒரு பகுதி கீழே உடைந்து விழுந்துள்ள நிலையில் மாணவர்கள் கல்வி கற் கும்  அவலத்தையே படத்தில் காண்கின்றீர்கள் . 

ஏ380: உலகில் மிகப்பெரிய விமானம் கட்டுநாயக்கவில் அவசர தரையிறக்கம்

Image
உலகிலேயே மிகப்பெரிய விமானமான எ380 எயார்பஸ் நேற்று கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. எமிரேட்ஸ்சுக்கு சொந்தமான இந்த பாரிய எயார்பஸ் அவுஸ்திரேலியாவிலிருந்து துபாய்க்கு செல்லும் வழியில் இடை நடுவே எரிபொருள் தேவைகாரணமாக நேற்று அதிகாலை 4.20 மணியளவில் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. எ380 எயார்பஸ் இலங்கையில் தரையிறக்கப்பட்டபோது அதில் 487 பயணிகளும் அவர்களுக்கு மேலதிகமாக 30 விமான சிப்பந்திகளும் இருந்ததாக சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்தது. உலகிலேயே மிகப்பெரிய விமானம் எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக இலங்கையில் தரையிறக்கப்பட்டுள்ள தென்றால் அதற்கான அனைத்து வசதிகளை யும் ஏற்பாடுகளையும் எமது கட்டுநாயக்க விமான நிலையம் கொண்டுள்ள தென்பதன் பிரதிபலிப்பே இதுவென்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பியன்கர ஜயரத்ன தெரிவித்தார். அத்துடன், விமான போக்குவரத்துக்கு எமது இலங்கை சிறந்த தொரு கேந்திர நிலையமாகவுள்ள தென்பதற்கு இது சிறந்ததொரு எடுத்துக்காட்டெனவும் அவர் தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான இரு நாள் செயலமர்வு

Image
  உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான இரு நாள் செயலமர்வு இன்று திங்கட்கிழமை அக்கரைப்பற்றில் ஆரம்பமானது. புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு  பயிற்சி வழங்கும் உள்ளளூராட்சி மாகாண சபைகள் அமைச்சின் வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கை உள்ளளூர் ஆளுகை நிறுவகம் இதனை ஏற்பாடு செய்துள்ளது. கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.உதயக்குமார் தலைமையில் நடைபெற்று வரும் இச்செயலமர்வின் அங்குரார்ப்பண நிகழ்வில் உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா, கிழக்கு மாகாண முதலமைச்சர் எஸ். சந்திரகாந்தன், உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சின் செயலாளர் டாக்டர் நிஹால் ஜயசிங்க உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கல்முனை மற்றும் அக்கரைப்பற்று மாநகர சபைகள் உள்ளிட்ட 20 உள்ளூராட்சி மன்றங்களின் 200 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். தமிழ் மொழி மூல இச்செயலமர்வு அக்கரைப்பற்று அதாவுல்லா அரங்கிலும் சிங்கள மொழி மூலமான செயலமர்வு அக்கரைப்பற்று தொழில்நுட்ப கல்லூரியிலும் இடம்பெற்று வருகின்றன.

சுனாமி வீடுகளை கையளிக்குமாறு மருதமுனைமக்கள் ஆர்ப்பாட்டம்

Image
கல்முனை, மருதமுனை பிரதேசத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட 178 குடும்பங்களுக்கு மேட்டுவட்டை பிரதேசத்தில் அமைக்கப்பட்ட வீடுகளை வழங்குமாறு கோரி பாதிக்கப்பட்ட மக்கள் கல்முனை பிரதேச செயலகத்தின் முன்னால் இன்று திங்கட்கிழமை காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்ததில் பாதிக்கப்பட்ட மருதமுனை பிரதேசத்தில் 178 குடும்பங்களுக்கு இன்று 7 வருடங்களாகியும் வீடுகள்; வழங்கப்படாதுள்ளன. இவர்களுக்காக மேட்டுவட்டை பிரதேசத்தில் அரசாங்கத்தினால் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ள போதிலும் அவை இதுவரை கையளிக்கப்படாத நிலையில் உள்ளன.  அத்துடன், இவ்வீடுகளுக்கு மின்சாரம், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் எவையும் செய்யப்படாது பூட்டிய நிலையில் இவ்வீடுகள் உள்ளன. வீடுகள் உள்ளபோதிலும் அவற்றில் குடியிருக்க முடியாது பல்வேறு அசௌகரியங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.  தங்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட வீடுகளை தருமாறு கோரி கல்முனை பிரதேச செயலகத்தின் முன்னால் பாதிக்கப்பட்ட மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து, பிரதேச செயலாளர் எம்.எம்.நெவ்பல் இத...

கல்முனை மாநகர சபை உத்தியோகத்தர்கள் சத்திய பிரமாணம்

Image
கல்முனை மாநகர சபையில் கடமை புரியும் உத்தியோகத்தர்கள் அரச நியதிக்கமைய இன்று காலை ஒன்பது மணிக்கு  மாநகர ஆணையாளர் ஜே.எம்.லியாகத் அலி முன்னிலையில் சத்தியபிரமாணம் செய்தனர்.