மழைகாலம் ஆரம்பித்துள்ளதால் டெங்கு நோய் குறித்து கூடிய கவனம்
145 பேர் இறந்துள்ளதாக அமைச்சு தகவல் இடைப்பருவப் பெயர்ச்சி மழையுடன் மீண்டும் டெங்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய்ப் பிரிவு கூறியது. கடந்த 10 மாத காலத்தில் நாடுபூராவும் 20,753 டெங்கு நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டதுடன் மேலும் 145 பேர் டெங்கு நோயினால் இறந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. கடந்த ஜுலை மாதத்திலே கூடுதலான டெங்கு நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டதோடு குறித்த மாதத்தில் 4781 பேர் அடையா ளங்காணப்பட்டனர். ஆனால் கடந்த காலத்தில் நாடுபூராவும் மேற்கொள்ளப்பட்ட டெங்கு ஒழிப்பு வாரம் காரணமாக டெங்கு பரவுவது பெருமளவு தடுக்கப்பட்டது. ஆனால் நாட்டில் அநேகமான பகுதிகளில் மீண்டும் மழை ஆரம்பித்துள்ளதையடுத்து மீண் டும் டெங்கு பரவும் அபாயம் ஏற்பட் டுள்ளது. இது குறித்து கவனமாக இருக்குமாறு சுகாதார அமைச்சு பொது மக்களை கோரியுள்ளது. டெங்கு காரண மாக மேல் மாகாணத்திலே அதிகமான வர்கள் இறந்துள்ளனர். 58.1 வீதமானவர்கள் இப்பகுதியில் இறந்துள்ளனர்.