கிழக்கு மாகாணசபையின் 2012ம் வருடத்திற்கான நிதிப்பிரகடனம் ஏகமானதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
நேற்று (25.10.2011) கிழக்கு மாகாண சபைஅமர்வு சபை தவிசாளர் எச்.எம்.பாயிஸ் தலமையில் இடம்பெற்றது. இச் சபையமர்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனினால் சபைத் தீர்மானத்திற்காக 2012ம் வருடத்திற்கான நிதிப்பிரகடனம் முன்வைக்கப்பட்ட போது சபை ஏகமானதாக ஏற்றுக் கொண்டது.
பதினேழாயிரத்து இருநூற்று அறுபத்தெட்டு மில்லியன் (17268) பெறுமதி ஒதுக்கீட்டுக்கான வரவு செலவுத்திட்டத்தினை சபையில் சமர்ப்பிப்பதற்கான நிதிப்பிரகடனத்தினை ஏகமானதாக ஏற்றுக்கொண்டார்கள்.
ஜனநாயக சோசலிச குடியரசின் தமிழ் பேசும் மக்களுக்கு எழுத்துமூலமாக கிடைத்துள்ள மாகாணசபை முறைமையினூடாக கடந்த 3வருடங்களாக புதிதாக உதையமான கிழக்கு மாகாணசபை மூலம் பல உட்கட்டமைப்பு அபிவிருத்திப் பணிகள் வலுப்பெறுவதும் வீதி, பாலம், பாடசாலைகளென பல அபிவிருத்திப்பணிகள் முன் வைக்கப்பட்டு வரும் நிலையில் 2011ம் வருடத்தில் ஏனைய துறைகளை விட கல்வித்துறைக்கு கூடுதலான நிதி ஒதுக்கப்பட்டது போல் 2012ம் வருடமும் கல்வித் துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்படுமென எதிர்பாக்கப்படுகின்றது.
Comments
Post a Comment