இடி, மின்னலுடன் மழை பெய்யும் அறிகுறி
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அடுத்து சில தினங்களுக்கு இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்று வானிலை அவதான நிலையத்தின் வானிலைப் பொறுப்பாளர் டி. ஏ. ஜயசிங்க ஆராய்ச்சி நேற்றுத் தெரிவித்தார்.
இந்தக் காலப் பகுதியில் சில பிரதேசங்களில் கடும் மழையும் பெய்ய முடியும் எனவும் அவர் கூறினார்.
இடி, மின்னலுடன் மழை பெய்யும் வேளைகளில் கடும் காற்றும் வீசக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை இக்காலப் பகுதியில் இடிமின்னல் தீவிரமாக இருக்கும்.
அதனால் அவற்றின் பாதிப்பு களிலிருந்து தவிர்ந்து கொள்ளுவதிலும் ஒவ்வொருவரும் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
இதன் காரணத்தினால் இடி, மின்னலுடன் மழை பெய்யும் போது வீடுகளில் மின்சாரப் பொருட்களைப் பாவிப் பதையும், திறந்தவெளிகளில் நடமாடு வதையும், நீராடுவதையும், உடற் பயிற்சி களில் ஈடுபடுவதையும் உயர்ந்த மரங்களில் நிற்பதையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் இவர் கேட்டுக் கொண்டார்.
Comments
Post a Comment