இலங்கையிலுள்ள உள்ளுராட்சி சபைகளின் கீழ் உள்ள பகுதிகளை அபிவிருத்தி செய்வதற்கு சவூதி அரேபியா இணக்கம்
இலங்கையிலுள்ள உள்ளுராட்சி சபைகளின் கீழ் உள்ள பகுதிகளை அபிவிருத்தி செய்வதற்கு சவூதி அரேபியா இணக்கம் தெரிவித்துள்ளதாக மகளிர் விவகார பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.
அண்மையில் சவூதி அரேபியாவுக்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்ட பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லா அங்கு மாகாணசபை, உள்ளுராட்சி அலுவல்கள் அமைச்சர் மன்ஸூர் பின் முதீப் பின் அப்துல் அஸீஸைச் சந்தித்தார். அச்சந்திப்பிலேயே இலங்கையிலுள்ள உள்ளுராட்சி சபைகளை அபிவிருத்தி செய்வதற்கு அவர் இணக்கம் தெரிவித்தார்.
அச்சந்திப்பின்போது சவூதி அரேபியாவின் சமூகஇ மகளிர் விவகார அமைச்சர் கலாநிதி யூசுப் பின் அல் உதைமின்இ சவூதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் ஜவாத் ஆகியோரும் பிரசன்னமாகி இருந்த்தாக பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லா குறிப்பிட்டார்
Comments
Post a Comment