கோடாபய ராஜபக்க்ஷயின் வழிகாட்டலில் தேசிய மாணவர் படையணி


தேசிய மாணவர்கள்  படையணியின் மூலம் உயர் படிப்பினைகளை பாடசாலையிலிருந்து சமூகத்திற்கு கொண்டு செல்வோம்  என்ற தொணிப்பொருளில் பாடசாலை வளாகங்களில் 2011 ஒக்டோபர் 5ஆம் திகதி காலை 9.30 மணியளவில் 2011ஆம் ஆண்டுக்கான பாடசாலை சிரமதான அலங்கார  வேலைத்திட்டம் ஆரம்பமாகி தற்போது நடைபெற்று வருகிறது.  இதன் அடிப்படையில் கல்முனை அல்-மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற சிரமதான நிகழ்வைப்படத்தில் காணலாம்.

இந்நிகழ்வு பாதுகாப்புச் செயளாலர் கோடாபய ராஜபக்க்ஷயின் வழிகாட்டலில் தேசிய மாணவர் படையணியின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் காமினி ஜயசுந்தர தலைமையில் கல்வி அமைச்சு இணைந்து கடல், வான், தரை ,பொலிஸ் வாத்திய மாணவர்கள் படை ஆண், பெண் குழுக்களின் பங்குபற்றலுடன் இந்நிகழ்வு இடம்பெற்று வருகிறமை குறிப்பிடத்தக்கதாகும்.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்