Posts

நற்பிட்டிமுனை ஆயுள்வேத வைத்திய சாலை அதன் சொந்தக் கட்டிடத்தில் இயங்க கோரி ஆர்ப்பாட்டம்

Image
கல்முனை, நற்பிட்டிமுனை ஆயுர்வேத வைத்தியசாலையை அதற்குரிய நிரந்தர கட்டிடத்தில் மீண்டும் திறக்குமாறு கோரி மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய காரியாலயத்திற்கு முன்னால் இன்று திங்கட்கிழமை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அல்கரீம் நெசவாளர் மற்றும் கைத்தொழில் சமூக அபிவிருத்தி அமைப்பின் ஏற்பாட்டில் அதன் தலைவர் சி.எம்.ஹலீம் தலைமையில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கோஷங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளுடன் இளைஞர்கள் பலர் பங்கேற்றிருந்தனர். இதன்போது மேற்படி அமைப்பின் தலைவர் சி.எம்.ஹலீம் கருத்து தெரிவிக்கையில்; “கடந்த 2014 ஆம் ஆண்டு தெயட்ட கிருள்ள திட்டத்தின் கீழ் நற்பிட்டிமுனையில் இருபது இலட்சம் ரூபா நிதியொதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட கட்டிடத்தில் மிகவும் சிறப்பாக இயங்கி வந்த ஆயுர்வேத வைத்தியசாலை கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருக்கிறது. தற்போது அவ்வைத்தியசாலை எங்கு இயங்குகிறது என்பது கூட பொது மக்களுக்கு அறிவிக்கப்படவில்லை. இது தொடர்பில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர், மாகாண ஆயுர்வேத வைத்திய ஆணையாளர் மற்றும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் ப

நற்பிட்டிமுனையில் வறிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்து உயர்தரப் பரீட்சையில் சாதனை படைத்த மாணவனுக்கு புகழாரம்

Image
நற்பிட்டிமுனையை சேர்ந்த இஸ்மாயில் முகம்மது ஜெஸான்  உயர்தரப் பரீட்சையில் விஞ்ஞானப் பிரிவில் 03 A பெற்று மாவட்டத்தில்  07வது  இடத்தையும் அகில இலங்கை ரீதியில் 439 வது  இடத்தையும் பெற்று  பிறந்த மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ளார் . நற்பிட்டிமுனை லாபிர் வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியை  கற்ற இவர் உயர் கல்வியை மருதமுனை அல் -மனார்  மத்திய கல்லூரியில் கற்றார் . வறிய  குடும்பத்தில் பிறந்து வளர்ந்து மண்ணுக்கு பெருமை சேர்த்த  இவரை  நற்பிட்டிமுனை  அல் -கரீம் நெசவாளர் மற்றும் கைத்தொழில் சமூக சேவை அமைப்பினால் பாராட்டி கெளரவித்து  பரிசு வழங்கிய நிகழ்வு மாணவனின் இல்லத்தில் இன்று நடை பெற்றது . சமூக சேவை அமைப்பின் தலைவர் சி.எம்.ஹலீம் தலைமையில் நடை பெற்ற  நிகழ்வில் முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சி.எம்.முபீத் ,சமூகசேவை அமைப்பின் செயலாளர் யு.எல்.பாயிஸ் .நற்பிட்டிமுனை லாபிர் வித்தியாலய ஆசிரியர் எம்.எல்.அஷ்ரப் உட்பட மாணவனின் பெற்றோரும் ,அவரது உறவினர்களும் கலந்து கொண்ட நிகழ்வில்   மாணவன் ஜெஸானுக்கும் அவரது பெற்றோருக்கும்  பாராட்டு தெரிவித்து பரிசும் வழங்கி வைக்கப் பட்டது.

காணாமல் போன கல்முனை மீனவர்களை மீட்பதற்கு பிரதி அமைச்சர் ஹரீஸ் மாலை தீவு பயணம்

Image
காணாமல் போய் இன்னும் கண்டுபிடிக்கப்படாமல் உள்ள நான்கு மீனவர்கள் உள்ளிட்ட இயந்திரப் படகினை மாலைதீவு  கடற்பரப்பில் தேடுவதற்கான நடவடிக்கை எடுப்பதற்கும் மாலைதீவு  அரசின் பாதுகாப்பில் உள்ள மீனவர்கள் இருவரையும் ஆழ்கடல் இயந்திரப் படகினையும் மீட்பதற்கும் அந்நாட்டு உயர் அதிகாரிகளை சந்திப்பதற்கு  விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர்  சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் நாளை (7) சனிக்கிழமை அதிகாலை மாலைதீவு பயணமாகிறார். கல்முனை பிரதேசத்திலிருந்து மீன் பிடிக்க கடலுக்குச் சென்று காணமல் போன இரண்டு ஆழ்கடல் மீன்பிடி இயந்திரப் படகுகள் மற்றும் 6 மீனவர்களுள் இரண்டு மீனவர்கள் மற்றும் ஒரு இயந்திரப் படகு என்பன மாலை தீவில் கரையொதுங்கி தற்போது அவர்கள் மாலைதீவு அரசின் பாதுகாப்பில் உள்ளனர். ஏனைய நான்கு மீனவர்கள் உள்ளிட்ட இயந்திரப்படகு மாலைதீவு கடற்பரப்பில் தத்தழிப்பதாக தகவல் கிடைத்துள்ளது. மேற்குறித்த விடயம் தொடர்பாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் நாளை அதிகாலை மாலைதீவு நாட்டுக்கு பயணிக்கவுள்ளார். இவ்விஜயத்தின்போது அந்நாட்டு அரச உயர் அதிகாரிகளை சந்தித்து மாலைதீவு அரசின் பாதுகாப்பில் உள்ள இரண

கல்முனை வலயக்கல்வி அலுவலக முகாமைத்துவத்துக்குப் பொறுப்பான பிரதிக் கல்வி பணிப்பாளராக உமர் மௌலானா நியமனம்

Image
சம்மாந்துறை வலயக்கல்விப்பணிமனையில் நிருவாகத்திற்குப்பொறுப்பான பிரதிக்கல்விப்பணிப்பாளராக சேவையாற்றிய டாக்டர் எம்.எஸ்.எஸ்.எம்.உமர்மௌலானா கல்முனை வலயத்திற்கு இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ளார் . கடந்த முதலாம் திகதி கடமைகளை பொறுப்பேற்ற  பிரதிக்கல்வித் பணிப்பாளர்    டாக்டர் எம்.எஸ்.எஸ்.எம்.உமர்மௌலானா கல்முனை வலய  கல்விப்  பணிப்பாளர் எம்.எஸ்.அப்த்துல்  ஜலீல் அவர்களால்   முகாமைத்துவத்துக்குப்  பொறுப்பான  பிரதிக் கல்விப்  பணிப்பாளராக நியமிக்கப் பட்டுள்ளார் . அதன் பிரகாரம்  அவர் தம் கடமைகளை 01.01.2017 அன்று   பொறுப்பேற்றார் 

அம்பாறை மாவட்ட புத்தாண்டு வழிபாடு

Image
நல்லாட்சி அரசாங்கத்தின் இரண்டாவது ஆண்டு பூர்த்தி விழாவில் உதயமாகியுள்ள 2017ஆண்டை வரவேற்று அம்பாறை மாவட்ட இந்து ஆலயங்கள் தோறும் வழிபாடுகள் இடம் பெற்றன. நற்பிட்டிமுனை அம்பலத்தடி வினாயகர் ஆலயத்தில் நடை பெற்ற பூஜை வழிபாட்டில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பேராசிரியர் எம்.இராஜேஸ்வரன் கலந்து கொண்டு வழிபட்டார். நல்லாட்சி அரசாங்கத்தின் இரண்டாவது ஆண்டு பூர்த்தி விழாவில் உதயமாகியுள்ள புத்தாண்டில் நாட்டில் அனைத்து இனத்தவர்களும் நிரந்தர அமைதி பெற்று வாழ அனைவரும் பிரார்த்திக்க வேண்டும் என அவர்  தெரிவித்தார்.  

உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டின் பொன்விழா

Image
( அஸீம் கிலாப்தீன்) உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டின் பொன்விழா கொழும்பு இலங்கை மன்ற மண்டபத்தில் விபுலாநந்தா அரங்கில் தற்போது இடம்பெற்றது  இந்நிகழ்வில் இரண்டாம் நாள் நிகழ்வில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும் கைத்தொழில் வர்த்தக அமைச்சர் றிஷாட் பதியுத்தீன் , மீள்குடியேற்ற இராஜாங்க ஹிஸ்புல்லாஹ் மற்றும் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் அமீர் அ லி ஆகியோர் கலந்து சிறப்பித்துக்கொண்டனர் . இந்நிகழ்வில் ஆய்வுக் கோவை , சிறப்பு மலர் வெளியீடு மற்றும் பேராளர்கள் கொளரவிப்பு நிகழ்வுகளும் இடம்பெற்றது.

நுரைச்சோலை வீட்டுத்திட்டம் எகமுது கம்மான வாக மாறினாலும் ஆச்சரியமில்லை.

Image
தேசிய ஜனநாயக மக்கள் கூட்டமைப்பின் தலைவர் கலாநிதி எஸ்.எல்.றியாஸ் இலங்கையில் மனித குலத்திற்கெதிரான பாரிய யுத்தம் முடிவுக்கு வந்த விட்டது. இருந்தாலும் புகை நின்ற பாடில்லை. அது மீண்டுமொரு காட்டுத்தீயினை உருவாக்குமா? என்ற அச்சம் எம்மை விட்டபாடுமில்லை. அதுபோலத்தான் இந்த நாட்டில் இடம்பெற்ற இயற்கை அனர்த்தமான சுனாமி தாக்கமும் ஆகும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த இழப்பிற்கு தக்க நிவாரணம் கிடைத்ததா? என்பது ஒரு புறமிருக்க சிலருக்கு அது தங்கச் சுனாமியாகவே அன்று இருந்தது. மக்களின் உயிரிலும் இரத்தத்திலும் காட்டுமிராண்டி அரசியல் செய்தவர்களே இன்றும் அதிகாரத்தில் இருப்பது இந்த நாட்டுக்கு கிடைத்த பெரும் துரதிஸ்டமாகும் என தேசிய ஜனநாயக மக்கள் கூட்டமைப்பின் தலைவர் கலாநிதி எஸ்.எல்.றியாஸ் ஊடகங்களுக்கு தெரிவித்தார்  அட்டாளைச்சேனையை மையமாக கொண்டியங்கும் மனித எழுச்சி நிறுவனமும் காணி உரிமைக்கான அம்பாரை மாவட்ட செயலணியும்  சேர்ந்து  மேற்கொண்ட நுரைச்சோலை வீட்டுத்திட்டம் தொடர்பான ஆய்வறிக்கையினை அக்கரைப்பற்று உதவி பிரதேச செயலாளரிடம் உத்தியோகபூர்வமாக கையளித்த பின்னர் ஊடகங்களுக்கு இந்த தகவலை வெளியிட்ட

இஸ்லாத்துக்கு எதிரான பிரசாரங்களை அரசு தடுக்காவிட்டால் முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் ஏந்துவதை தவிர்க்க முடியாது!

Image
நாடாளுமன்றத்தில் ஹிஸ்புல்லாஹ் ஆவேசம்  இஸ்லாத்துக்கு எதிராக இனவாதிகள் மேற்கொண்டு வரும் பிரசாரங்களினால் முஸ்லிம் இளைஞர்கள் மிகுந்த மனவேதனையுடன் இருப்பதாகவும், நல்லாட்சி அரசாங்கம்  இவ்வாறான இனவாத செயற்பாடுகளை தடுக்காவிட்டால் முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் ஏந்துவதை தவிர்க்க முடியாது போகும் என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.  முஸ்லிம் சமய அலுவல்கள் மற்றும் தபால் சேவைகள் அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதம் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.  அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது:-  பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் உள்ளிட்ட பலர் இஸ்லாம், அல்குர்ஆன் மற்றும் அல்லாஹ் தொடர்பாக  மிகவும் கீழ்த்தரமான – கேவலமான பிரசாரங்களை செய்து வருகின்றனர். இந்த விடயம் தொடர்பில் முஸ்லிம் அலுவல்கள் அமைச்சு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இனவாதம் பேசுபவர்களை கைது செய்ய வேண்டும் அல்லது அவர்களை கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி மு

சுமனரத்ன, ஞானசார தேரர்களை உடனடியாக கைது செய்க! விஜயதாஸ - ஹிஸ்புல்லாஹ் இடையே சபையில் கடும் வாதம்

Image
நாட்டின் சமாதானம் - அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயற்பட்டு வரும் பொதுபலசேனா பொதுச் செயலாளர் ஞானசார தேரர் மற்றும் மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி அம்பிடிய சுமனரத்ன தேரர் ஆகியோரை உடனடியாக கைது செய்ய வேண்டும் அல்லது அவர்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் வலியுறுத்தினார்.  இதற்கு மறுப்பளித்து உரையாற்றி நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ, அவ்வாறு உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியாது எனவும் இந்த விடயம் தொடர்பில் சமரசப் பேச்சுக்கள் நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டார். இதனால் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கும் - அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவுக்கும் இடையில் சபையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது.  தொடர்ந்தும் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர், ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலை நாங்கள் வரவேற்கின்றோம். நீங்கள் இந்த விடயம் தொடர்பில் முன்னெடுக்கும் விடயங்களை நாங்கள் பாராட்டுகின்றோம். ஆனால், இந்த கலந்துரையாடலின் பின்பும் முஸ்லிம்களை மனவேதனைக்கு உட்படுத்தும் வகையி

சிரேஷ்ட ஊடவியலாளர் பி.எம்.எம்.ஏ.காதர் மருதமுனை “சைல்ட் பெஸ்ட்”ஆங்கிலக் கல்லூரியினால் கௌரவிப்பு

Image
மருதமுனையைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடவியலாளர் பி.எம்.எம்.ஏ.காதரின் ஊடக சேவையைப் பாராட்டி மருதமுனை “சைல்ட் பெஸ்ட”ஆங்கிலக் கல்லூரி ஏற்பாடு செய்த கௌரவிப்பு நிகழ்வு வெள்ளிக்கிழமை(02-12-2016)மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரியில் நடைபெற்றது. இதில் முன்னாள் கிழக்கு மாகாண மேல் நீதி மன்ற நீதிபதி சட்டத்தரணி எம்.எஸ்.எம்.ஜெமீல் பொன்னாடை போர்த்த கல்லூரியின் தலைவரும்.தென்கிழக்குப் பல்கலைக்கழக ஆங்கில மொழிப்பிரிவின் தலைவருமான கலாநிதி ஏ.எம்.எம்.நவாஸ் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தார். நிகழ்வில் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஏ.எல்.எப்.றஹ்மான்,சத்திர சிகிச்சை நிபுணர் டொக்டர் சித்தீக் ஜெமீல்,தென்கிழக்குப் பல்கலைக்கழக பொறியில் பீட பீடாதிபதி எஸ்.எம்.ஜூனைதீன். ஹபீப் வங்கியின் கல்முனைக் கிளை முகாமையாளர் ஏ.எல்.அன்வர்டீன்,அதிபர் ஏ.ஆர் நிஃமத்துல்லா ஆகியோருடன் பலர் கலந்து கொண்டனர்.

தமிழ் முஸ்லிம் ஊடகவியலாளர்களை தரக்குறைவாக பேசிய மட்டக்களப்பு மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய தேரரின் நடவடிக்கை ஊடகவியலாளர்களை அடக்கு முறைக்குள்ளாக்கும் நடவடிக்கையாகும்.

Image
“கடந்த 03.12.2016 அன்று மட்டக்களப்பு மங்களராமய பௌத்த விகாரைக்கு முன்னாள் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது செய்தி சேகரிக்கச் சென்ற தமிழ், முஸ்லிம் ஊடகவியலாளர்களை குறிப்பாக காத்தான்குடி மீடியா போரத்தின் உறுப்பினரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான எம்.எஸ்.எம். நூர்தீனுக்கு மட்டக்களப்பு மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமணரத்தின தேரர் நடந்துகொண்ட விதம் தொடர்பில் காத்தான்குடி மீடியா போரம் தமது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றது. ஊடகவியலாளர்களின் பணி மகத்தானதாகும். ஊடகவியலாளர்கள் யுத்த காலத்திலும், கடந்த ஆட்சியிலும் தமது உயிரை பணயம் வைத்து செய்தி சேகரித்த காலம் போன்றே இந்த நல்லாட்சியிலும் அச்சுறுத்தல் இருக்கின்றது என்பதை தேரரின் நடவடிக்கை காட்டுகின்றது. பத்திரிகையாளர்கள் சமூக நலனுக்காக நடுநிலைமையாக இருந்து செயற்படுபவர்கள். தமது ஊடக பணியை பக்கம் சாராது, பத்திரிகை தர்மம் பேணி பல்வேறு சிரமங்களுடன் பணிபரிபவர்கள். இனவாதங்களை பேசி மக்களிடையே இனக்குரோதத்தையும் குழப்பங்களையும் அமைதியாக வாழும் மட்டக்களப்பு வாழ் தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களுக்கிடையே வன்முறைகளை கட்டவிழ்த்துவிடும் யாராக இ

மாவனல்லை ஸாஹிராவுக்கு பஸ் அன்பளிப்பு!

Image
புதிய மூன்று மாடிக்கட்டடத்துக்கும்  அமைச்சர் கபீர் அடிக்கல் நட்டிவைப்பு (நஸீஹா ஹஸன்) நாட்டின் முன்னணி முஸ்லிம் தேசிய பாடசாலையான மாவனல்லை ஸாஹிராக் கல்லூரியின் "ஸாஹிரா 2020| திட்டத்தின் கீழ் பல்வேறு அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்தவகையில் பாடசாலையின் நீண்டநாள் தேவையாக இருந்த பஸ் கொள்வனவு மற்றும் நவீன வசதிகள் கொண்ட மூன்று மாடிக் கட்டடத் தொகுதி என்பன தற்போது பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.  கல்லூரிக்குத் தேவையான பஸ்ஸை மாவனல்லை, தனாகம பகுதியைச் சேர்ந்த ஹாஜியானி கே.எம்.நபீஸா உம்மா என்பவர் கொள்வனவு செய்து அன்பளிப்புச் செய்துள்ளார்.  4.2 மில்லியன் ரூபா பொறுமதியான குறித்த பஸ் வண்டியை உத்தியோகபூர்வமாகக் கையளிக்கும் நிகழ்வு கடந்த வியாழக்கிழமை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.  இதன்போது பஸ்ஸ{க்கான சாவி கல்லூரி அதிபர் சட்டத்தரணி எம்.எம்.எம்.ஜவாட் (நளீமி)யிடம்  கையளிக்கப்பட்டது.  இந்நிகழ்வில், ஐ.தே.க. பொதுச் செயலாளரும், அமைச்சருமான கபீர் ஹாஷீம், முன்னாள் சிரேஷ்ட அமைச்சர் அதாவுட செனவிரத்ன, கல்லூரி பழைய மாணவர் சங்கம், கல்லூரி அபிவிருத்திக் குழு, ஆசிரியர்கள்

நற்பிட்டிமுனை ஹிஜா கல்லூரியின் O/L தின விழா

Image
நற்பிட்டிமுனை கிராமத்தின்  கல்வி நிலையை  பாதுகாத்து வரும்  ஹிஜா  கல்லூரியின் O/L தின விழா செவ்வாய்க்கிழமை (29)  நற்பிட்டிமுனை  அல் -அக்ஸா  மகா வித்தியாலய  ஆராதனை மண்டபத்தில் நடை பெறவுள்ளது . கல்லூரியின் அதிபர் W.ஐயூப்கான்  தலைமையில் நடை பெறவுள்ள  நிகழ்வில் நற்பிட்டிமுனை  உலமா சபை தலைவரும்  கல்முனை அல் -ஹாமியா அரபுக் கல்லூரி  அதிபருமான மௌலவி ULA. கபூர்  பிரதம அதிதியாகவும் கெளரவ அதிதிகளாக ALM.இப்ராஹீம் ,A.ஆப்துல்  கபூர் ஆகியோரும், விசேட அதிதிகளாக  ஓய்வு பெற்ற  நிருவாக உத்தியோகத்தரும்  நற்பிட்டிமுனை  முஸ்லிம்களின்  வரலாற்று நூல் ஆசிரியருமான S.அஸீஸூல்லாஹ் , ஆசிரிய ஆலோசகர் YAK.தாஸீம் , முகாமைத்துவ உதவியாளரும்  , ஊடகவியலாளருமான U.முகம்மது இஸ்ஹாக் ஆகியோரும்  விசேட அழைப்பாளர்களாக ஆசிரியர்களான IM.ஸூபி ,AA.நிமைரி ,KLA.கபூர்,CM.பலாஹி ,NM.சர்ஹான், மெளலவி ARM.ஜஹூபர் ஆகியோருடன்  கெளரவிப்புக்கான மாணவர்களான MIM.இஸ்பாக் ,MSM.சபீத் ,MF.சஷினி ,MS.அஸ்கா,ASF.ஷமா ,R.ஜஸானா ,S.நிருத்தனா  ஆகியோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்  

சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளராக சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் நியமனம்

Image
(எம்.எம்.ஜபீர்) சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளராக பதவியுயர்வு பெற்று பத்தரமுல்லையிலுள்ள அமைச்சில் எதிர்வரும் 1ம் திகதி உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார். நிர்வாகத்துறையில் சிரேஷ்ட அதிகாரியான இவர் 1995 ஆண்டு நிர்வாக சேவை போட்டிப் பரீட்சையில் சித்திபெற்று கிழக்கு மாகாண காணி ஆணையாளர் அலுவலகத்தில் உதவி ஆணையாளராக பணியாற்றினார்.அக் காலப்பகுதியில் குடிவரவு -குடியகல்வு திணைக்களத்தில் உதவி கட்டுப்பாட்டாளராக நீண்ட காலம் கடமையாற்றினார்.அத்துடன் உதவி கட்டுப்பாட்டாளராக கடமையாற்றிய காலப்பகுதியில் சுவிஸ்சர்லாந்திலுள்ள ஜெனீவா தூதரகம்,கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு -குடியகல்வு திணைக்களத்திலும் உதவி கட்டுப்பாட்டாளராகவும் செயற்பட்டார்.பின்னர் விஞ்ஞான தொழிநுட்ப அமைச்சில் உதவி செயலாளராக பணியாற்றினார். அரச தகவல் திணைக்கள பிரதிப்பணிப்பாளராக சில காலம் பணிபுரிந்த நேரம் இவர் சாய்ந்தமருதுக்கு பிரதேச செயலாளராக நியமனம் பெற்று சுமார் 10 வருடங்கள் கடமையாற்றினார். சுனாமியால் பாதிக்கப்பட்ட சாய்ந்தமருது மக

பொருட்கள்வி லை அதிகரித்தால் முறையிடலாம்

Image
கொண்டாட்ட காலம் ஆரம்பித்துள்ளதையடுத்து, ஒரு சில பொறுப்பற்ற வர்த்தகர்களால் வாடிக்கையாளர்கள் ஏமாற்றப்படுவதாக, பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகார சபைக்கு பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக அதன் தலைவர் ஹசித திலகரத்ன தெரிவித்தார். எனவே, இவ்வாறானவர்களை கண்காணிக்கும் வகையில், உடனடி சுற்றிவளைக்கும் பிரிவொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், வாடிக்கையாளர்களை பாதுகாக்கும் பொருட்டு அவர்களை தெளிவூட்டும் வகையிலான, நடமாடும் விளிப்பூட்டல் பிரிவொன்றையும் அமைத்துள்ளதாக தெரிவித்தார். இதேவேளை, விழாக்கால வேளையில்  முறைப்பாடுகளை மேற்கொள்ள விசேட முறைப்பாடு சேவையையும் ஆரம்பித்துள்ளதாக அவர் தெரிவித்தார். கைத்தொழில் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் அறிவுரைக்கமைய இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், பின்வரும் தொலைபேசிகளின் மூலம் பொதுமக்கள் தங்கள் முறைப்பாடுகளை மேற்கொள்ளலாம் என அவர் மேலும் தெரிவித்தார். மாகாணம்        தொலைபேசி இலக்கம் மேல்        0771088914/0771088907 தென்        0771088903 வடக்கு     0771088914 ஊவா

முன்பள்ளி ஆசிரியர்களின் சேவையும் பாராட்டப் படவேண்டியதே!!

Image
முன்பள்ளி ஆசிரியர்களின் சேவையும் பாராட்டப் படவேண்டியதே  என  மருதமுனை கலாச்சார மண்டபத்தில் நேற்று நடை பெற்ற  கிட்ஸ் வேர்ல்ட் முன்பள்ளி மாணவர்களின்  வருடாந்த கலை நிகழ்வில் கெளரவ அதிதியாக கலந்து கொண்ட ஊடகவியலாளரும் கல்முனை வலயக் கல்விப்  பணிமனையில் கடமையாற்றுகின்ற சிரேஷ்ட முகாமைத்துவ உதவியாளருமான நளீம் எம் பதூர்டீன் தெரிவித்தார். முன்பள்ளி ஆசிரியை திருமதி தஸ்னீம் பானு பௌஸ்  தலைமையில் நடை பெற்ற  பாலர் கலை விழாவில்  தொடர்ந்து  நளீம் எம் பதூர்டீன் உரையாற்றுகையில்  கடந்த காலங்களில் முன்பள்ளி பற்றிய தேடல் காணப்படவில்லை. இன்று இது பற்றிய தேடல் அதிகரிக்கப்பட்டு முன்பள்ளிகள் அலங்கரிக்கப்பட்டு  வருகின்றன . இது காலத்தின் தேவையாகும்  பாலர்களின் பல திறமைகளை இனங்காண்பதற்கும் அத்திறமைகளுக்கு சரியான அத்திவாரத்தையிட்டு அரங்கேற்றுவதற்கும் நல்ல பழக்க வழக்கங்களை மேம்படுத்துவதற்கும் ஏற்ற இடமாகவும் தரம் ஒன்றுக்கு  மாணவர்களை தயார் படுத்தும் இடமாகவும் இன்று முன் பள்ளிகள் திகழ்கின்றன . இதனால்தான்   இன்று அரசின் கவனமும் இதன்பால்   ஈர்க்கப் பட்டு வருகின்றன . வீடுகளில் களியோடு விளையாடிய பிள்ள

புதிய அரசியல் கட்சியான ஶ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் முதல் ஊடக சந்திப்பு

Image
ஜீ.எல். பீரிஸ் தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் முதலாவது ஊடகச் சந்திப்பு இன்று இடம்பெற்றது. பத்தரமுல்லையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் கட்சி காரியாலயத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. மலர் மொட்டு சின்னத்தைக் கொண்ட ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு தலைவராக முன்னாள் அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் செயற்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சந்திப்பில் அக்கட்சியின் தலைவர் ஜீ.எல். பிரிஸ் கலந்து கொண்டிருந்தார் என்பதோடு, கட்சியின் முதலாவது உறுப்புரிமையை முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்போது கருத்து தெரிவித்து அக்கட்சியின் தலைவர் ஜீ.எல். பீரிஸ், தமது கட்சியில், முதல் கட்டமாக 100 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான உறுப்புரிமைய அட்டைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தங்களது கட்சியின் உறுப்புரிமை வழங்கும் நடவடிக்கை, நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டதாக பசில் ராஜபக்‌ஷ  தெரிவித்தார்.

குருநாகல் , தல்ககஸ்பிடிய மாணவி பேச்சுப் போட்டியில் முதலிடம்

Image
அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற சிங்கள மொழி மூலம் நடைபெற்ற பேச்சிப் போட்டியில் குருநாகல் , தல்ககஸ்பிடிய அல் அஷ்ரக் மஹா வித்தியாலய மாணவி பாத்திமா இம்ரா இம்தியாஸ் முதலாம் இடத்தைப் பெற்றுக்கொண்டார். இம்மாணவி தல்கஸ்பிடியைச் சேர்ந்த ஆர்.எம். இம்தியாஸ் சம்சத் பேகம் ஆகியோரின் செல்வப் புதல்வியுமாவார். 

ஊடகவியலாளரின் புதல்வருக்கு அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனம் பாராட்டு

Image
கல்முனை வலயக் கல்வி  அலுவலக  சிரேஷ்ட முகாமைத்துவ உதவியாளர் நளீம் எம்.பதூர்டீன் ஆசிரியை மிஹ்றூனா ஆகியோரின்   புதல்வரான  ,     பதூர்டீன் மிஷால் அஹமட்  172 புள்ளிகளைப்  பெற்று  இவ்வருடம் தரம் ஐந்து  புலமைப் பரிசில் பரீட்சையில்  சித்தியடைந்துள்ளார் . அம்பாறை மாவட்ட  ஊடகவியலாளர் சம்மேளனத்தின்  நிருவாக சபை உறுப்பினரான  நளீம் எம்.பதூர்டீன் அவர்களின் புதல்வர் மருதமுனை அல் -ஹம்றா வித்தியாலய மாணவரான . இவரை  அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனமும் வாழ்த்துகின்றது. அத்துடன்  பயிற்றுவித்த ஆசிரியர்களையும் ,நிருவாகத்தையும் பாராட்டுகின்றோம் 

புத்தர் சிலைகளும் சிறுபான்மைவரலாற்றுக் கட்டுரையாளர் ஏ.எம்.பறக்கத்துள்ளாஹ் யினரின் எதிர்காலமும்

Image
வரலாற்றுக்  கட்டுரையாளர் ஏ.எம்.பறக்கத்துள்ளாஹ்  இலங்கை நாட்டில் பௌத்தர்கள் பெரும்பான்மையினராக வாழ்ந்துவருகின்றார்கள் என்ற விடயம் அனைவரும் அறிந்த விடயமாக இருக்கிறது. ஆதலால் இதனை மீண்டும் அழுத்தமாக சொல்லவேண்டிய தேவையில்லை. கடந்த சில ஆண்டுகாலமாக முஸ்லிம்கள் மீது பௌத்த இனவாதக்குழுக்கள் முஸ்லிம்களைக் குறிவைத்து தமது தீவிரவாதச் செயற்பாடுகளைக் கட்டவிழ்த்துவிட்டு வருகின்றது. இலங்கை சிங்களவர்களின் நாடு என அழுத்திச் சொல்லும் அதேவேளை முஸ்லிம்களை இந்நாட்டைவிட்டு துரத்துவோம் அல்லது அழித்தொழிப்போம் எனவும் துவச வார்த்தைகளைக் கொண்டு காயப்படுத்தி வருகின்றார்கள்.  உண்மையில் இலங்கை சிங்களவர்களின் நாடு அல்ல. இது சிங்களவர்கள்இ தமிழர்கள்இ முஸ்லிம்கள்இ கிறிஸ்தவர்கள்இ இந்தியத் தமிழர்கள்இ மலேஇ பேகர் மற்றும் ஏனைய மதத்தவர்கள் என பல்லினம் வாழும் ஒரு நாடாகும். இப்பல்லினத்தவர்களில் பௌத்தர்கள் பெரும்பான்மையினர் என்பதே உண்மையாக இருக்கின்றது. பௌத்தர்கள் பெரும்பான்மை என்பதால் இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பில் பௌத்த மதத்திற்கு முதன்மை தானம் வழங்கி கௌரவப்படுத்தியுள்ளது. இம்முதன்மைத் தான

கல்முனை இலங்கை வங்கியில் பண வைப்பு தன்னியக்க இயந்திர சேவை (CDM) ஆரம்பம்

Image
40 வருடங்களுக்கு  முற்பட்ட கல்முனை  இலங்கை வங்கி கிளை கட்டிடம்  புனரமைப்பு செய்யப் பட்டு  நவீன வசதிகளுடன்  இயங்க ஆரம்பித்துள்ளது. 35ஆயிரம்  வங்கி வாடிக்கையாளர்களுடன் இயங்கும் கல்முனை  இலங்கை வங்கி கிளை கல்முனை பிரதேசத்தில்  வாடிக்கையாளர்களின்  நன்மை கருதி 24 மணி நேரமும்  இயங்கக் கூடிய வகையில் பணபரிமாற்ற  சேவையும்  முதல் தடவையாக  கல்முனை பிரதேசத்தில்  பண வைப்பு தன்னியக்க  இயந்திர சேவையும்    (CDM) இலங்கை வங்கி கிளையில்   இன்று  (10) ஆரம்பித்து வைக்கப் பட்டது. கல்முனை  இலங்கை வங்கி கிளை முகாமையாளர்  எம்.ஏ.சத்தாரின்  வழி காட்டலில் பண வைப்பு தன்னியக்க  இயந்திர சேவை ஆரம்ப விழா  முகாமையாளர் ஐ.எம். முனவ்வர் தலைமையில் ஆரம்பித்து வைக்கப் பட்டன .அம்பாறை மாவட்டப்  பிராந்திய முகாமையாளர்  ஜீ.ஏ.எல்.ரத்னஜீ  மற்றும் பிரதம முகாமையாளர்  ஜெ.எம்.ஜீ.பண்டார  ஆகியோர்  அதிதிகளாக கலந்து கொண்டு  இயந்திரத்தை  திறந்து ஆரம்பித்து வைத்தனர்.  பணம் மீள பெறும்  இயந்திரம் (ATM) கல்முனை வங்கி கிளையில் மேலதிகமாக  இரண்டு   பொருத்தப்  பட்டு இயங்கவுள்ளதுடன்,  கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலை வளாகத்தில்