சுமனரத்ன, ஞானசார தேரர்களை உடனடியாக கைது செய்க! விஜயதாஸ - ஹிஸ்புல்லாஹ் இடையே சபையில் கடும் வாதம்



நாட்டின் சமாதானம் - அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயற்பட்டு வரும் பொதுபலசேனா பொதுச் செயலாளர் ஞானசார தேரர் மற்றும் மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி அம்பிடிய சுமனரத்ன தேரர் ஆகியோரை உடனடியாக கைது செய்ய வேண்டும் அல்லது அவர்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் வலியுறுத்தினார். 
இதற்கு மறுப்பளித்து உரையாற்றி நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ, அவ்வாறு உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியாது எனவும் இந்த விடயம் தொடர்பில் சமரசப் பேச்சுக்கள் நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டார். இதனால் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வுக்கும் - அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவுக்கும் இடையில் சபையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது. 
தொடர்ந்தும் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர்,
ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலை நாங்கள் வரவேற்கின்றோம். நீங்கள் இந்த விடயம் தொடர்பில் முன்னெடுக்கும் விடயங்களை நாங்கள் பாராட்டுகின்றோம். ஆனால், இந்த கலந்துரையாடலின் பின்பும் முஸ்லிம்களை மனவேதனைக்கு உட்படுத்தும் வகையில் பொதுபல சேனா பொதுச் செயலாளர் ஞானசார தேரர் உரையாற்றியுள்ளார். அவ்வாறாயின் இந்த கலந்துரையாடலில் என்ன பயன். ஆகவே, இதற்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும். நீங்கள் நீதி அமைச்சர் இதனைக்கட்டுப்படுத்த வேண்டுமாயின் சட்டத்தை அமுல்படுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்க வேண்டும். - என கடுமையாக தெரிவித்தார். 

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்