நற்பிட்டிமுனையில் வறிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்து உயர்தரப் பரீட்சையில் சாதனை படைத்த மாணவனுக்கு புகழாரம்


நற்பிட்டிமுனையை சேர்ந்த இஸ்மாயில் முகம்மது ஜெஸான்  உயர்தரப் பரீட்சையில் விஞ்ஞானப் பிரிவில் 03 A பெற்று மாவட்டத்தில்  07வது  இடத்தையும் அகில இலங்கை ரீதியில் 439 வது  இடத்தையும் பெற்று  பிறந்த மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ளார் .

நற்பிட்டிமுனை லாபிர் வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியை  கற்ற இவர் உயர் கல்வியை மருதமுனை அல் -மனார்  மத்திய கல்லூரியில் கற்றார் .

வறிய  குடும்பத்தில் பிறந்து வளர்ந்து மண்ணுக்கு பெருமை சேர்த்த  இவரை  நற்பிட்டிமுனை  அல் -கரீம் நெசவாளர் மற்றும் கைத்தொழில் சமூக சேவை அமைப்பினால் பாராட்டி கெளரவித்து  பரிசு வழங்கிய நிகழ்வு மாணவனின் இல்லத்தில் இன்று நடை பெற்றது .

சமூக சேவை அமைப்பின் தலைவர் சி.எம்.ஹலீம் தலைமையில் நடை பெற்ற  நிகழ்வில் முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சி.எம்.முபீத் ,சமூகசேவை அமைப்பின் செயலாளர் யு.எல்.பாயிஸ் .நற்பிட்டிமுனை லாபிர் வித்தியாலய ஆசிரியர் எம்.எல்.அஷ்ரப் உட்பட மாணவனின் பெற்றோரும் ,அவரது உறவினர்களும் கலந்து கொண்ட நிகழ்வில்   மாணவன் ஜெஸானுக்கும் அவரது பெற்றோருக்கும்  பாராட்டு தெரிவித்து பரிசும் வழங்கி வைக்கப் பட்டது.



Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்