மாவனல்லை ஸாஹிராவுக்கு பஸ் அன்பளிப்பு!


புதிய மூன்று மாடிக்கட்டடத்துக்கும் 
அமைச்சர் கபீர் அடிக்கல் நட்டிவைப்பு

(நஸீஹா ஹஸன்)

நாட்டின் முன்னணி முஸ்லிம் தேசிய பாடசாலையான மாவனல்லை ஸாஹிராக் கல்லூரியின் "ஸாஹிரா 2020| திட்டத்தின் கீழ் பல்வேறு அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் பாடசாலையின் நீண்டநாள் தேவையாக இருந்த பஸ் கொள்வனவு மற்றும் நவீன வசதிகள் கொண்ட மூன்று மாடிக் கட்டடத் தொகுதி என்பன தற்போது பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. 
கல்லூரிக்குத் தேவையான பஸ்ஸை மாவனல்லை, தனாகம பகுதியைச் சேர்ந்த ஹாஜியானி கே.எம்.நபீஸா உம்மா என்பவர் கொள்வனவு செய்து அன்பளிப்புச் செய்துள்ளார். 
4.2 மில்லியன் ரூபா பொறுமதியான குறித்த பஸ் வண்டியை உத்தியோகபூர்வமாகக் கையளிக்கும் நிகழ்வு கடந்த வியாழக்கிழமை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. 
இதன்போது பஸ்ஸ{க்கான சாவி கல்லூரி அதிபர் சட்டத்தரணி எம்.எம்.எம்.ஜவாட் (நளீமி)யிடம்  கையளிக்கப்பட்டது. 
இந்நிகழ்வில், ஐ.தே.க. பொதுச் செயலாளரும், அமைச்சருமான கபீர் ஹாஷீம், முன்னாள் சிரேஷ்ட அமைச்சர் அதாவுட செனவிரத்ன, கல்லூரி பழைய மாணவர் சங்கம், கல்லூரி அபிவிருத்திக் குழு, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர். 
இதேவேளை, கல்லூரியின் எதிர்காலத் தேவை கருதி பழைய கட்டடங்கள் அகற்றப்பட்டு புதிய மாடிக்கட்டடங்களை நிர்மாணிக்கும் அதிபர் ஜவாட்டின் திட்டத்தின் கீழ்  அண்மையில் அகற்றப்பட்ட கல்லூரியின் பழைய கட்டடத்துக்கு மாற்றீடாக  அவ்விடத்தில் மேலதிக கணினி அறை மற்றும் வாசிகசாலை போன்ற நவீன வசதிகளைக் கொண்ட மூன்றுமாடிக் கட்டடத் தொகுதிக்கான அடிக்கல் நட்டுவைக்கும் நிகழ்வும் குறித்த தினம் அமைச்சர் கபீர் ஹாஷிமின் பங்குபற்றலுடன் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்