சிரேஷ்ட ஊடவியலாளர் பி.எம்.எம்.ஏ.காதர் மருதமுனை “சைல்ட் பெஸ்ட்”ஆங்கிலக் கல்லூரியினால் கௌரவிப்பு



மருதமுனையைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடவியலாளர் பி.எம்.எம்.ஏ.காதரின் ஊடக சேவையைப் பாராட்டி மருதமுனை “சைல்ட் பெஸ்ட”ஆங்கிலக் கல்லூரி ஏற்பாடு செய்த கௌரவிப்பு நிகழ்வு வெள்ளிக்கிழமை(02-12-2016)மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரியில் நடைபெற்றது.
இதில் முன்னாள் கிழக்கு மாகாண மேல் நீதி மன்ற நீதிபதி சட்டத்தரணி எம்.எஸ்.எம்.ஜெமீல் பொன்னாடை போர்த்த கல்லூரியின் தலைவரும்.தென்கிழக்குப் பல்கலைக்கழக ஆங்கில மொழிப்பிரிவின் தலைவருமான கலாநிதி ஏ.எம்.எம்.நவாஸ் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தார்.
நிகழ்வில் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஏ.எல்.எப்.றஹ்மான்,சத்திர சிகிச்சை நிபுணர் டொக்டர் சித்தீக் ஜெமீல்,தென்கிழக்குப் பல்கலைக்கழக பொறியில் பீட பீடாதிபதி எஸ்.எம்.ஜூனைதீன். ஹபீப் வங்கியின் கல்முனைக் கிளை முகாமையாளர் ஏ.எல்.அன்வர்டீன்,அதிபர் ஏ.ஆர் நிஃமத்துல்லா ஆகியோருடன் பலர் கலந்து கொண்டனர்.


Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்