Posts

கல்முனை மக்கள் வங்கியின் பொன்விழா கொண்டாட்டங்கள்

Image
 மக்கள் வங்கி ஆரம்பிக்கப்பட்டு 50 வது வருட நிறைவை முன்னிட்டு இன்று நாட்டிலுள்ள 338 வங்கி கிளைகளிலும் பொன் விழாக் கொண்டாட்டங்கள் இடம்பெற்றன. கல்முனை மக்கள் வங்கி கிளை ஏற்பாடு செய்த நிகழ்வு இன்று காலை 8.30 மணிக்கு கல்முனை மக்கள் வங்கி கிளை முகாமையாளர் எம்.ஐ.எம்.பதுறுதீன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ரி.ஹஸனலி, பைசால் காசிம், கல்முனை மாநகர முதல்வர் இஸட்.எம்.மசூர் மௌலானா உட்பட முன்னாள் வங்கி முகாமையாளர்கள், பாடசாலை அதிபர்கள், வாடிக்கையாளர்கள், மதத்தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இந்து, பௌத்த, இஸ்லாம், கிறிஸ்தவ மதத்தலைவர்களின் ஆசிர்வாதத்துடன் நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன், 50 பலூன்களும் வானில் பறக்கவிடப்பட்டன. இதிலுள்ள ஒரு பலூனில் பணவவுச்சர் இணைத்து அனுப்பப்பட்டுள்ளது. இதனைப் பெறுபவர் நாட்டிலுள்ள எந்தவொரு வங்கிக் கிளையிலும் சமர்ப்பித்து பணத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். இன்றைய தினம் வாடிக்கையாளர்கள் 50 பேருக்கு கடன் தொகைக்கான காசோலைகளும் வழங்கப்பட்டன.

நற்பிட்டிமுனை அல்-அக்சா மாணவத் தலைவர் விழா

Image
நற்பிட்டிமுனை அல்-அக்சா மகா வித்தியாலய  மாணவத் தலைவர்களுக்கான  நியமனக் கடிதம் மற்றும் சின்னம் சூட்டும் விழா என்பன இன்று கல்லூரி ஆராதனை மண்டபத்தில் நடை பெற்றது.  கல்லூரி அதிபர் எம்.எல்.ஏ.கயூம் தலைமையில் இடம் பெற்ற வைபவத்தில்  கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.டி.தௌபீக் பிரதம அதிதியாகவும் ,கல்முனை  போலிஸ் நிலைய நிருவாக பொறுப்பதிகாரி எம்.ஐ.வாஹிட் கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டனர்  கடந்த காலத்தில் சீரழிந்த இப்பாடசாலை எனது காலத்தில் சிறந்த நிலைக்கு வர வேண்டும் .அதற்க்கு மாணவர்களாகிய நீங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் .எமது பாடசாலைக்கு  இருந்து வரும் அவப் பெயர் நீங்க வேண்டும். போட்டுவி தொடக்கம் மருதமுனை வரைக்கும் நற்பிட்டிமுனை அல்-அக்சா மகா வித்தியாலய சாதனை  பறை சாற்றப்பட்டுள்ளது. இவ்வரலாறு மீண்டும் புதுப்பிக்கப்படவேண்டும் என அதிபர்  கயூம் கூறினார்.

கல்முனை தமிழ்ப் பிரதேச கிராமங்களின் குறை நிறை பற்றி ஆராய்வு

Image
Print this கல்முனை (தமிழ் பிரிவு) பிரதேச செயலகத்தின் முதலாவது பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. பிரதேச செயலாளர் கே. லுவநாதன் தலைமையில் இடம் பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அம்பாறை மாவட்டப் பாhளுமன்ற உறுப்பினர் பீ. பியசேன , மாநகர சபை உறுப்பினர்கள், பொலிஸ் உயர் அதிகாரிகள், பிரதேசத்திலுள்ள திணைக்களங்களின் தலைவர்கள் உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தின்போது தமிழ்ப் பிரதேச செயலகப் பிரிவின் கீழுள்ள கிராமங்களில் காணப்படும் குறைபாடுகள், அவற்றிற்கான தீர்வுத்திட்டங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

விரைவில் 90 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள்

Image
339 உள்ளூராட்சி சபைகளில் 245 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் அண்மையில் நடைபெற்றன .நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் மற்றும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி,  சில சபைகளின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டமை ஆகிய காரணங்களால் 90 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்படவில்லை. உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் 2010 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பின் பிரகாரம் நடத்த தேர்தல் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார் விரிவாக இவற்றில் 67 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களை ஜுலை மாதமளவில் நடத்துவதற்கு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும். ஏனைய உள்ளூராட்சி சபைகளுக்கான தேல்தல் தெரிவிக்கப்படுவது போன்று  ஜூன் மாத இறுதியில் நடத்தப்பட மாட்டாது எனவும் அறிய முடிகின்றது. எஞ்சிய தேர்தல்கள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்ட 38 உளளூராச்சி மன்றங்களின் வேட்பு மனுக்கள் நீதி மன்ற தீர்ப்பின் ஊடாக மீண்டும் ஏற்றுகொள்ளப்பட்டுள்ளது

நாவிதன்வெளி விவசாயிகளுக்கு துரிதமாக உரமானியத்தை வழங்க கோரிக்கை

Image
அம்பாறை மாவட்டத்திலுள்ள சவளக்கடை கமநல சேவை நிலையத்தின் கீழ் வேளாண்மைச் செய்கையில் ஈடுபட்டு வரும் தமிழ், முஸ்லிம் விவசாயிகளுக்கு இதுவரை அரசினால் வழங்கப்படும் உரமானியம் வழங்கப்படவில்லையென கவலை தெரிவிக்கப்படுகின்றது. விதைப்பு வேலைகள் முடிவுற்று இரண்டு, மூன்று வாரங்கள் கடந்து விட்ட நிலையிலும், களை நாசினி விசிறிய நிலையிலும் இவ்வாறு உரமானியம் வழங்கப்படாதுள்ளதால் வேளாண்மைச் செய்கையில் பாரிய வீழ்ச்சி ஏற்படலாமென விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனர். கடந்த முறை ஏற்பட்ட வெள்ளம் காரணமாகவும் இப்பிரதேச விவசாயிகள் நஷ்டத்தை எதிர்நோக்கியிருந்தனர். இம்முறை சவளக்கடை கமநல சேவை நிலையத்தின் கீழ் 8500ற்கு மேற்பட்ட ஏக்கர்களில் வேளாண்மைச் செய்கை மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது. உரிய அதிகாரிகள் இப்பிரதேச விவசாயிகளுக்கு துரிதமாக உரமானியத்தை பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டுமென கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

காதலி இறந்த செய்தி கேட்டு காதலனும் இறந்தான்

Image
காதலி இறந்த செய்தியைக் கேள்வியுற்ற காதலன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவமொன்று இன்று மாலை வேளையில் மத்தியமுகாம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 4ஆம் கிராமத்தில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டவர் எல். மதன் எனும் 23 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து காதலி கே. சுமித்தா (வயது-21) என்பவர் நேற்றைய தினம் நஞ்சருந்தி ஆபத்தான நிலையில் மத்திய முகாம் வைத்தியசாலயில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கல்முனை ஆதார வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டார். இவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை பயனின்றி இறந்து போன செய்தியைக் கேள்வியுற்றதுமே காதலன் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மத்தியமுகாம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

கல்முனை பிரதேசத்தில ஒரு வார காலத்தினுள் இடம்பெற்ற வாகன விபத்துக்கள்

Image
 கல்முனை பிரதேசத்தில ஒரு வார காலத்தினுள் வாகன விபத்துக்கள்  பல இடம் பெற்றுள்ளன. விபத்துகளை சில காட்சிகள்

கல்முனை கடலில் படகு அமிழ்ந்து சேதமடைந்துள்ளது

Image
கல்முனை மாளிகைக்கா டு கடலில் படகு அமிழ்ந்து சேதமடைந்து ள்ளது. மீனவர்களால் படகு கரைக்கு எடுத்து வரப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணவருடாந்த விளையாட்டுப்போட்டிகல்முனையில்

Image
கிழக்கு மாகாண சுகாதார ,விளையாட்டு அமைச்சின் ஏட்பாட்டில் கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களம் நடாத்தும் மாவட்டங்களுக்கான வருடாந்த விளையாட்டுப்போட்டி இன்று கல்முனையில் இடம்பெற்றது. கபடி மற்றும் கிரிக்கட் போட்டிகள் கல்முனை ச்ந்தான்கேணி, பற்றிமா மைதானங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . இன் நிகழ்வில் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்கள்களை சேர்ந்த   இளைசர்களும் யுவதிகளும் கலந்து கொண்டனர் .

வீடு கொடுத்தோருக்கு பாராட்டு

Image
சுனாமியினால் பாதிக்கப்பட்ட மாளிகைக்காடு மக்களுக்கான வீடமைப்பு உதவிகளை செய்து தந்த எஹெட் நிறுவனத்தின் பணிப்பாளர் அவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று மாலை கரைவாகுவட்டை எஹெட் வீட்டுத்திட்டத்தில் நடைபெற்றது. எஹெட் வீட்டுத்திட்ட தலைவர் எம்.எஸ்.அலியார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு - கல்முனை கரித்தாஸ் எஹெட் நிறுவனத்தின் பணிப்பாளர்களான  வண.பிதா.பேராசிரியர் ரீ.எஸ்.சில்வஸ்ட்ர் பிரதம அதிதியாகவும் வண.பிதா.கிரைட்டன் அவுட்ஸ்கோன் விஷேட அதிதியாகவும் கலந்து கொண்டதுடன் காரைதீவு பிரதேச செயலாளர் எஸ்.இராமகிருஷ்ணன் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் மற்றம் ஊர் பிரமுகர்களும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் இக்கிராம மக்கள் நன்றியுடன் நினைவுச்சினனமும் வழங்கி கௌரவித்ததுடன் வீடுகளுக்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

மு.கா அரசியல் விவகாரப் பணிப்பாளராக ஹரீஸ் நியமிப்பு

Image
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் விவகாரப் பணிப்பாளராகவும், அதிஉச்சபீட உறுப்பினராகவும் அம்பாறை மாவட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின், 23வது பேராளர் மாநாடு வவுனியா நகர சபை மர்ஹீம் நூர்தீன் மசூர் அரங்கில் அண்மையில் நடைபெற்றது.

மீனவர் கூட்டுறவு சங்கத்தின் மாவட்ட அலுவலகமும் மீனவர் தொலை தொடர்பு மத்திய நிலையமும் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது

அம்பாறை மாவட்ட ஆழ் கடல் மீன் பிடி இயந்திர படகு உரிமையாளர்  மீனவர் கூட்டுறவு சங்கத்தின்  மாவட்ட அலுவலகமும்  மீனவர் தொலை தொடர்பு மத்திய நிலையமும் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன பிரதம அதிதியாக கலந்து கொண்டு திறந்து வைத்தார். இதில் பாராளுமன்ற உறுப்பினர்களும்,கிழக்கு மாகாண அமைச்சர் மற்றும் உறுப்பினர்களும் கல்முனை மாநகர முதல்வரும் கலந்து கொண்டனர்.

மே 31ம் திகதிக்கு முன் தேர்தல் நடைபெறலாம்?

Image
இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள வடக்கு கிழக்கு மாகாணங்கள் உள்ளிட்ட சில உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் பெரும்பாலும் எதிர்வரும் மே மாதம் 31ம் திகதிக்கு முன்னர் நடத்தப்படலாமென தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 2009ம் ஆண்டின் வாக்காளர் பட்டியலில் மே 31ம் திகதிக்குப் பின்னர் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டியுள்ளதால் அதற்கு முன்னர் தேர்தல் நடத்தப்படலாம் என தேர்தல்கள் செயலகத்தின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார். இதேவேளை, நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளின் தீர்ப்பு எதிர்வரும் மே மாதம் 5ம் திகதி வழங்கப்படவுள்ளது. இந்த நிலையில் அதன் பின்னர் தேர்தல் நடத்தப்படக் கூடுமென நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

நியம நேரத்தை பரவச்செய்தல்

Image
  இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 1945 ஆம் ஆண்டின் 35 ஆம் இல. அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் சட்டத்திற்கிணங்க, தேசிய நேர மற்றும் மீடிறன் நியமங்கள், அளவீட்டு அலகுகள் மற்றும் நியமங்கள் சேவைகள் திணைக்களத்தின் தேசிய ஆய்வு கூடத்தினால் பேணப்படுகின்றன. இலங்கையின் நியம நேரமானது ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரத்திற்கு ( UTC ) துன்னதாக 5 மணித்தியாலங்கள் 30 நிமிடங்களாகும். ஒருங்கிணைக்கப்படட சர்வதேச நேரம் என்பது ( UTC ) சர்வதேச நிறைகள் மற்றும் அளவீடுகள் பணியகத்தினால் தீர்மானிக்கப்பட்டு 1945 ஆம் ஆண்டின் 35 ஆம் இல. அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் சட்டத்தின் பிரிவு 6 இன் கீழ் இவங்கையில் பேணப்படுகின்ற நேரத்தினையும் குறிக்கின்றது. ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரம் ( UTC ) நேரத்திற்கான சட்ட அடிப்படையில் நிறைகள் மற்றும் அளவீடுகளின் சர்வதேச பணியகத்தினால் பரிந்துரை செய்யப்பட்ட சர்வதேச நேர அளவீடாகும்.இம்முறையானது கடிகார சுழற்சியினைப் பயன்படுத்தி அளவிடப்படுகின்றது. ஒருங்கிணைக்கப்பட்ட உலக நேரத்தின் சர்வதேச நியமமானது பாரிசிலுள்ள நிறைகள் மற்றும் அள

கல்முனை ஸாஹிரா, மஹ்மூத் கல்லூரி மாணவர்கள் வரலாற்று சாதனை

Image
கல்முனையின் பிரபல பாடசாலைகளான ஸாஹிரா தேசியக் கல்லூரி, மஹ்மூத் மகளிர் கல்லூரிகளிலிருந்து க.பொ.த உயர்தரம் பயில்வதற்கு 433 பேர் தகுதி பெற்று கல்முனை வலயத்திலும் தேசிய ரீதியில் முஸ்லிம் பாடசாலைகளுக்கிடையிலும் சாதனை படைத்துள்ளது. அண்மையில் வெளியிடப்பட்ட க.பொ.த. சாதரணதர பரீட்சை முடிவுகளின்படி மஹ்மூத் மகளிர் கல்லூரியில் தமிழ் மொழி மூலம் 4 மாணவிகளும் ஆங்கில மொழி மூலம் 2 மாணவிகளுமாக 6 மாணவிகள் 9 பாடங்களிலும் “ஏ’ தரச்சித்தியையும் கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரியில் ஒரு மாணவனும் அதிதிறமைச் சித்திகளைப் பெற்றுள்ளனர் கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் தமிழ் மொழி மூலம் ஏ.ஏ.எப்.இன்சிராஹ், எம்.ஐ.எப்.ஸஹானா, எம்.எச்.எப்.நுஸ்ரா பானு, எம்.ஐ.எம்.எப்.அப்ஸானா அபாப், எஸ்.ஐ.எம்.எப்.நுப்லா, ரீ.எச்.ஆர்.ஆகானி, ஆகிய மாணவிகளும் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியில் எம்.எப்.அஹமட் றிபாத் என்ற மாணவனுமே சகல பாடங்களிலும் அதிதிறமைச் சித்தி பெற்றுள்ளனர். கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் 96 வீதமான மாணவிகள் சித்தியடைந்திருப்பதுடன், 273 மாணவிகள் உயர்தரம் கற்கத் தகுதிபெற்றுள்ளதுடன்

தனி அலகு அங்கீகாரமும் அதிகாரப் பகிர்வுமே தீர்வு

Image
மு.கா.. செயலாளர் ஹஸன் அலி எம்.பி. சிறுபான்மைச் சமூகங்கள் வாழும் பிரதேசங்களைத் தனித்தனி அலகுகளாக அங்கீகரித்து அதிகாரங்கள் பகிர்ந்தளிக் கப்படுவதே இனப்பிரச்சினைக்கான தீர்வாக அமையும் என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என முஸ்லிம் காங்கிரசின் செயலாளர் நாயகம் ஹசன் அலி தெரிவித்தார். இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாக முன்வைத்த யோசனைத் திட்டங்களில் இதனைப் பல தடவைகள் குறிப்பிட்டிருந்த தாகவும் ஹசன் அலி வாரமஞ்சரிக்கு வழங்கிய விசேட பேட்டியில் இவ்வாறு கூறினார். சிறுபான்மைச் சமூகங்கள் தனித்தனி சமூகங்களாக அடையாளப்படுத்தப்பட்டு, கெளரவிக்கப்பட்டு அரசாங்கம் அவர்களுக்கும் அதிகாரத்தில் பங்கைக் கொடுக்க வேண்டும் என்றும், உலகின் பல நாடுகளில் இந்தக் கொள்கை கடைப்பிடிக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பல்வேறு தடவைகள் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாகக் குறிப்பிட்ட ஹசன் அலி, இரு சமூகத்திற்கும் ஒரு தேவை ஏற்படவேண்டுமாயின் இரண்டு சமூகமும் உடன்பாடொன்றுக்கு வரவ

உள்ளூராட்சித் தேர்தல்கள் திருத்தச் சட்டமூலம் 5ஆம் திகதி பாராளுமன்றம் வருகின்றது

Image
உள்ளூராட்சி தேர்தல்கள் திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் 5ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது என்று மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி சபை அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லா தெரிவித்துள்ளார் மக்களுக்கு மேலும்பல நன்மைகளை செய்துகொடுக்கும் வகையிலும், ஏற்கனவே காணப்பட்ட சில குறைபாடுகளை நிவர்த்தி செய்தும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எதிர் வரும் 5ஆம் திகதி கூடவுள்ள பாராளுமன்றத்தில் இந்தத் திருத்தச்சட்டமூலம் கொண்டுவரப்படும்.ஏற்கனவே இருந்த விருப்பு வாக்கு முறைமை சீர்ப்படுத்தப்பட்டு, அதற்குப் பதிலாக தொகுதி முறைமை கொண்டு வரப்படவுள்ளது. இதன் ஊடாக விருப்பு வாக்குகளினால் ஏற்படுகின்ற மோதல்கள் மற்றும் ஏனைய பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என்று தெரிவித்துள்ளார் விரிவாக உள்ளூராட்சித் தேர்தல் திருத்தச் சட்டமூலத்தினால் சிறுபான்மை மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என முஸ்லிம் அமைப்புகளும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட்ட பல அமைப்புகள் கடந்த வருடம் 12 மனுக்களை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர் அந்த வழக்குகள் இருந்த நிலைய

கல்முனை மாநகர ஆணையாளராக நியாஸ் நியமனம்

கல்முனை மாநகர ஆணையாளராக எம்.ஏ.எம். நியாஸ் நியமனம் செயப்பட்டுள்ளார்.  மூதுரை சேர்ந்த இவர் மூதூர் ,கிண்ணிய ,ஓட்டமாவடி  பிரதேச செயலாளராகவும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் மற்றும் ஆட்பதிவு திணைக்களத்தின் பிரதி ஆணையாளராகவும் பதவி வகித்த இலங்கை நிருவாக சேவை முதலாம் வகுப்பு அதிகாரியுமாவார்.

கல்முனையில் தபால் வாக்களிப்பு

Image
நடை பெறவுள்ள  உள்ளூராட்சி தேர்தலுக்கான தபால் வாக்களிப்பு இன்று கல்முனை பிரதேசத்தில் நடை பெற்றது . கல்முனை பொலிஸ் நிலையத்தில்  நிலைய பொறுப்பதிகாரி சிரான் பெரேரா தலைமையில் வாக்களிப்பு இடம் பெற்றது