உள்ளூராட்சித் தேர்தல்கள் திருத்தச் சட்டமூலம் 5ஆம் திகதி பாராளுமன்றம் வருகின்றது


உள்ளூராட்சி தேர்தல்கள் திருத்தச் சட்டமூலம் எதிர்வரும் 5ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது என்று மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி சபை அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லா தெரிவித்துள்ளார்
மக்களுக்கு மேலும்பல நன்மைகளை செய்துகொடுக்கும் வகையிலும், ஏற்கனவே காணப்பட்ட சில குறைபாடுகளை நிவர்த்தி செய்தும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எதிர் வரும் 5ஆம் திகதி கூடவுள்ள பாராளுமன்றத்தில் இந்தத் திருத்தச்சட்டமூலம் கொண்டுவரப்படும்.ஏற்கனவே இருந்த விருப்பு வாக்கு முறைமை சீர்ப்படுத்தப்பட்டு, அதற்குப் பதிலாக தொகுதி முறைமை கொண்டு வரப்படவுள்ளது. இதன் ஊடாக விருப்பு வாக்குகளினால் ஏற்படுகின்ற மோதல்கள் மற்றும் ஏனைய பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என்று தெரிவித்துள்ளார் விரிவாக
உள்ளூராட்சித் தேர்தல் திருத்தச் சட்டமூலத்தினால் சிறுபான்மை மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என முஸ்லிம் அமைப்புகளும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட்ட பல அமைப்புகள் கடந்த வருடம் 12 மனுக்களை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர் அந்த வழக்குகள் இருந்த நிலையில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் அரசியலமைப்புக்கு உட்பட்டது என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளதாக பாராளுமன்றில் கடந்த வருடம் நவம்பர் 16 ஆம் திகதி சபாநாயகர் சமல் ராஜபக்ஷ் தெரிவித்தார் பின்னர் உள்ளூராட்சி சபை தேர்தல் திருத்தச் சட்டமூம் இந்த வருடம் ஜனவரி மாதம் 4 ஆம் திகதி பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் விவாதம் ஒத்திவைக்கப்பட்டது அந்த ஒத்திவைக்கப்பட்ட தேர்தல் திருத்தச் சட்டமூலமே மீண்டும் பாராளுமன்றத்தில் எதிர் வரும் 5ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

காத்தான்குடி நகர சபை முன்னாள் உறுப்பினர் சலீம் உட்பட இருவர் விபத்தில் பலி