காதலி இறந்த செய்தியைக் கேள்வியுற்ற காதலன் தூக்கிட்டு தற்கொலை செய்து
கொண்ட சம்பவமொன்று இன்று மாலை வேளையில் மத்தியமுகாம் பொலிஸ்
பிரிவிற்குட்பட்ட 4ஆம் கிராமத்தில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு தூக்கிட்டு
தற்கொலை செய்து கொண்டவர் எல். மதன் எனும் 23 வயதுடைய இளைஞர் என அடையாளம்
காணப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, இவர்களது காதலுக்கு
பெற்றோர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து காதலி கே. சுமித்தா (வயது-21)
என்பவர் நேற்றைய தினம் நஞ்சருந்தி ஆபத்தான நிலையில் மத்திய முகாம்
வைத்தியசாலயில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கல்முனை
ஆதார வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டார்.
இவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சை பயனின்றி இறந்து போன செய்தியைக்
கேள்வியுற்றதுமே காதலன் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து
கொண்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மத்தியமுகாம்
பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
Comments
Post a Comment