தனி அலகு அங்கீகாரமும் அதிகாரப் பகிர்வுமே தீர்வு


மு.கா.. செயலாளர் ஹஸன் அலி எம்.பி.
சிறுபான்மைச் சமூகங்கள் வாழும் பிரதேசங்களைத் தனித்தனி அலகுகளாக அங்கீகரித்து அதிகாரங்கள் பகிர்ந்தளிக் கப்படுவதே இனப்பிரச்சினைக்கான தீர்வாக அமையும் என சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என முஸ்லிம் காங்கிரசின் செயலாளர் நாயகம் ஹசன் அலி தெரிவித்தார்.
இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாக முன்வைத்த யோசனைத் திட்டங்களில் இதனைப் பல தடவைகள் குறிப்பிட்டிருந்த தாகவும் ஹசன் அலி வாரமஞ்சரிக்கு வழங்கிய விசேட பேட்டியில் இவ்வாறு கூறினார்.
சிறுபான்மைச் சமூகங்கள் தனித்தனி சமூகங்களாக அடையாளப்படுத்தப்பட்டு, கெளரவிக்கப்பட்டு அரசாங்கம் அவர்களுக்கும் அதிகாரத்தில் பங்கைக் கொடுக்க வேண்டும் என்றும், உலகின் பல நாடுகளில் இந்தக் கொள்கை கடைப்பிடிக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பல்வேறு தடவைகள் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாகக் குறிப்பிட்ட ஹசன் அலி, இரு சமூகத்திற்கும் ஒரு தேவை ஏற்படவேண்டுமாயின் இரண்டு சமூகமும் உடன்பாடொன்றுக்கு வரவேண்டிய தேவைப்பாடு உள்ளது என்றும் கூறினார்.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்