நற்பிட்டிமுனை அல்-அக்சா மாணவத் தலைவர் விழா

நற்பிட்டிமுனை அல்-அக்சா மகா வித்தியாலய  மாணவத் தலைவர்களுக்கான  நியமனக் கடிதம் மற்றும் சின்னம் சூட்டும் விழா என்பன இன்று கல்லூரி ஆராதனை மண்டபத்தில் நடை பெற்றது. 
கல்லூரி அதிபர் எம்.எல்.ஏ.கயூம் தலைமையில் இடம் பெற்ற வைபவத்தில்  கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.டி.தௌபீக் பிரதம அதிதியாகவும் ,கல்முனை  போலிஸ் நிலைய நிருவாக பொறுப்பதிகாரி எம்.ஐ.வாஹிட் கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டனர் 
கடந்த காலத்தில் சீரழிந்த இப்பாடசாலை எனது காலத்தில் சிறந்த நிலைக்கு வர வேண்டும் .அதற்க்கு மாணவர்களாகிய நீங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் .எமது பாடசாலைக்கு  இருந்து வரும் அவப் பெயர் நீங்க வேண்டும்.








போட்டுவி தொடக்கம் மருதமுனை வரைக்கும் நற்பிட்டிமுனை அல்-அக்சா மகா வித்தியாலய சாதனை  பறை சாற்றப்பட்டுள்ளது. இவ்வரலாறு மீண்டும் புதுப்பிக்கப்படவேண்டும் என அதிபர்  கயூம் கூறினார்.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்