விரைவில் 90 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள்



339 உள்ளூராட்சி சபைகளில் 245 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் அண்மையில் நடைபெற்றன .நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் மற்றும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி,  சில சபைகளின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டமை ஆகிய காரணங்களால் 90 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்படவில்லை.
உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் 2010 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பின் பிரகாரம் நடத்த தேர்தல் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார் விரிவாக
இவற்றில் 67 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களை ஜுலை மாதமளவில் நடத்துவதற்கு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும். ஏனைய உள்ளூராட்சி சபைகளுக்கான தேல்தல் தெரிவிக்கப்படுவது போன்று  ஜூன் மாத இறுதியில் நடத்தப்பட மாட்டாது எனவும் அறிய முடிகின்றது. எஞ்சிய தேர்தல்கள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்
வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்ட 38 உளளூராச்சி மன்றங்களின் வேட்பு மனுக்கள் நீதி மன்ற தீர்ப்பின் ஊடாக மீண்டும் ஏற்றுகொள்ளப்பட்டுள்ளது இதன் பிரகாரம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 3 வேட்பு மனுக்கள், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 33 வேட்பு மனுக்கள், ஐக்கிய தேசிய கட்சி 2 வேட்பு மனுக்கள் என்பனவே மீண்டும் ஏற்று கொள்ளப்படவுள்ளது.

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

தமிழ்த்தினப் போட்டியில் பாவோதலில் சுஷ்மிக்கா முதலிடம்