அரச உத்தியோகத்தர்கள் தங்கள் சேவைக்காலத்தில் மக்களுக்கு சிறந்த சேவையாற்ற வேண்டும்
கல்முனை பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.கனி (பி.எம்.எம்.ஏ.காதர்) தங்கள் சேவைக்காலத்தில் பொது மக்களுக்கு சிறந்த சேவையை வழங்க வேண்டிய பொறுப்பும் கடமையும் ஒவ்வொரு அரச உத்தியோகத்தருக்கும் இருக்கின்றது இதுதான் அரச சேவையின் நோக்கமுமாகும்.அவ்வாறு பொது மக்களுக்கு சிறந்த சேவையை வழங்கிமைக்காக ஏ.ஆர்.எம்.சாலிஹ் இன்று பாரட்டப்படுவதையிட்டு மனமகிழ்ச்சியடைகின்றேன் என கல்முனைப் பிரதேச செயலாளர் எம்.எச்.முகம்மட் கனி தெரிவித்தார். மருதமுனை கலை இலக்கியப் பேரவையின் ஏற்பாட்டில் கல்முனை பிரதேச செயலக சமுர்த்திப் பிரிவின் சிரேஷ்ட தலைமைப் பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ் சமுர்த்திப் பயனாளிகளுக்கு ஆற்றிவரும் சேவையைப் பாராட்டி கௌரவித்த நிகழ்வு அண்மையில் மருதமுனை கலாச்சார மத்திய நிலைய மண்டபத்தில் நடைபெற்றது.இங்கு விஷேட விருந்தினராக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். பேரவையின் ஸ்தாபகர் பி.எம்.எம்.அப்துல் காதர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கௌரவ விருந்தினராக அம்பாறை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் சந்துருவன் அனுருத்த,சமூர்த்தி சங்கப் பணிப்பாளர் எஸ்.எஸ்.பரீரா ஆகியோரும...