இந்த நாட்டின் ஜனாதிபதி கிழக்கு முதலமைச்சரா?????-மாகாண சபை உறுப்பினர் வீரசிங்கவுக்கு குழப்பம்
இந்த
நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவா இல்லை கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ்
நசீர் அஹமட்டா என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் டப்ளியூ டி வீரசிங்க கேள்வியெழுப்பியுள்ளார்.
நாட்டின்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பௌத்த விஹாரைகளை கட்டுவதற்கு அனுமதியளித்துள்ள
நிலையில் பௌத்தசாசன அமைச்சரும் அதற்கு
தேவையான உதவிகளை வழங்கி வருகையில் கிழக்கு
மாகாண முதலமைச்சர் மாணிக்க மடுவில் விஹாரைக்கட்டக் கூடாது எனவும் அதனை தடுக்க
எவ்வாறு முற்படுவார் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் டப்ளியூ டீ வீரசிங்க
கேள்வியெழுப்பினார்.
நேற்று
இரவு (08.05.2017 ) அம்பாறையில் இடம்பெற்ற
ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே கிழக்கு மாகாண சபை
உறுப்பினர் டப்ளியூ டீ வீரங்க இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு
மேலும் உரையாற்றிய கிழக்கு மாகாண சபை உறுப்பினர் வீரசிங்க,
மாணிக்கமடு
விவகாரம் தொடர்பில் கிழக்கு மாகாண
சபையில் பிரேரணையொன்று கொண்டுவரப்பட்டு
அதனை நிறைவேற்றி கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் தலைமையில்
குழுவொன்றை அமைத்துள்ளார்கள்
,அந்தக்
குழுவினரே மாணிக்கமடுவில் விகாரை
அமைப்பதா இல்லையா எனத் தீர்மானிப்பதுடன்
இந்தப் பிரச்சினையை தீர்ப்பது தொடர்பான முடிவுகளை எடுக்கவுள்ளனர்,
குறித்த
பிரேரணையை மாகாண சபைக்கு கொண்டுவந்தது சட்டவிரோதமானது என்பதை கிழக்கு மாகாண சபை
உறுப்பினராக நான் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்,இந்த பிரேரணை அவசரப் பிரேரணையாக
கொண்டு வரப்பட்டுள்ளது,
குறித்த
விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சருக்குக் கூட தெரியாமல் அவரின் அனுமதியின்றி
இந்தப் பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளதுடன் அதை நிறைவேற்றி குழுவொன்றை அமைத்து இந்த
மாணிக்கமடு விகாரையை அமைப்பதா இல்லையா
என்பது தொடர்பில் தீர்மானிக்க கிழக்கு முதலமைச்சர் தலைமையில் குழுவொன்றும்
அமைக்கப்பட்டுள்ளது இதனை ஏற்றுக் கொள்ள முடியாது.
இந்த
நாட்டின் ஜனாதிபதி பௌத்த விஹாரைகளை அமைப்பதற்கு வழிவகைகளை செய்துள்ள நிலையில்
பௌத்தசாசன அமைச்சரும் இதற்குத் தேவையான உதவிகளை செய்து வருகையில் கிழக்கு
முதலமைச்சர் எவ்வாறு மாணிக்க மடுவில் விகாரை அமைப்பதை தடுக்க முடியும்,எவ்வாறு
விகாரை கட்டமுடியாது என உத்தரவிட முடியும்,
இந்த
நாட்டின் ஜனாதிபதி கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டா இல்லை ஜனாதிபதி
மைத்திரிபால சிறிசேனவா என்பதை கேட்க விரும்புகின்றோம்.
நாங்கள்
மகாநாயக்க தேரர்களிடம் ஒரு விடயத்தை தௌிவாக கேட்கவிரும்புகின்றோம்.நாங்கள்
கிழக்கில் விஹாரை அமைப்பதற்கு கிழக்கு
மாகாண முஸ்லிம் முதலமைச்சரிடமா நாம் அனுமதி கேட்க வேண்டும்,
,உங்களுக்கு
மேலால் அதிகாரத்தைப் பிரயோகித்து தீர்மானங்களை எடுக்கக் கூடிய முதலமைச்சரா கிழக்கில் உள்ளார் என ஜனாதிபதி மற்றும் மாகாநாயக்க
தேரர்களிடம் கேட்கின்றேன்.
மாணிக்கமடு
விஹாரை உட்பட விஹாரைகளை அமைப்பதில் இந்த முஸ்லிம் முதலமைச்சரின் அழுத்தங்கள்
மற்றும் எதிர்ப்புக்களுக்கு மத்தியில் அவற்றை அமைப்பதை நாம் கைவிட்டுள்ளோம்.
திகாமடுல்லை
மாவட்ட தேரர்கள் இன்று நிர்க்கதிக்குள்ளாகியுள்ளார்கள் ,இன்று முஸ்லிம் தலைவர்கள்
அரசியல் தீர்மானங்களை மேற்கொள்வதில் உறுதியாக இருப்பதை குறிப்பிட்ட வேண்டும் என்பதுடன் இந்தப்
பிரச்சினையில் எமது சிங்கள அரசியல்வாதிகள் ஒன்றிணையவில்லை என்பதையும்
சுட்டிக்காட்ட வேண்டும்.
ஆகவே
நாம் ஜனாதிபதியிடமும் மாகாநாயக்க தேரர்களிடம்
இந்தப் பிரச்சினையில் தலையீடு செய்யுமாறு கோருகின்றோம்,இல்லாவிட்டால் கிழக்கில் விஹாரைகளை அமைப்பதா இல்லையா என்பதை
தீர்மானிப்பது கிழக்கின் முஸ்லிம் முதலமைச்சரா எனக் கேட்க விரும்புகின்றேன் என
குறிப்பிட்டார்.
Comments
Post a Comment