அவதூறுகளால் கிழக்கு முதல்வரின் சேவைகளை நிறுத்த எண்ணுவது பகற்கனவே கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எச் எம் லாஹிர் முழக்கம்

அவதூறுகளலாளும் ஆதாரமற்ற போலிக்குற்றச்சாட்டுக்களாலும் முதலமைச்சரின் சேவைகளை நிறுத்தி விடலாம் என எண்ணுவது சிறுபிள்ளைத் தனமான எண்ணமாகும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி எச் எம் லாஹிர் தெரிவித்துள்ளார்.

தாம் பதவியிலிருக்கும் காலப் பகுதிகளில் மக்களுக்கு எவ்வித சேவைகளையும் செய்யாது கட்சியை சிதைத்து விட்டு இன்று  மக்களுக்கு சேவை  செய்பவர்களினால் தமது எதிர்ப்பு  அரசியல் சூனியமாகிவிடும் என்ற அச்சத்தினால் சில கத்துக்குட்டி அரசியல்வாதிகள் முதலமைச்சர் குறித்து விமர்சனங்களை  முன்வைக்க முனைவதாகவும் சட்டத்தரணி லாஹிர் தெரிவித்தார்,

மூதூரில்   ​இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து  கொண்டு  அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் அன்சில் முதலமைச்சர் குறித்து தெரிவித்த கருத்துக்களுக்கு பதிலளித்து கருத்து தெரிவிக்கையிலேயே கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி லாஹிர்  இவ்வாறு கூறினார்.

 அங்கு  தொடர்ந்தும் கருத்து தெரிவித்த  கிழக்கு மாகாண சபை உறுப்பினர் லாஹிர்,

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் மீது இதற்கு முன்னர் போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து எழுதப்பட்டிருந்த  தாருஸ்ஸலாம் மறைக்கப்பட்ட உண்மைகள் என்ற புத்தகத்தை மக்களும் முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளும் புறக்கணித்திருந்தனர் என்பதை  அன்சில் அவர்களே  தமது  கருத்துக்களினூடாக  ஏற்றுக் கொண்டிருந்தார்

எவ்வாறாயினும்  நாம்  இது குறித்த  விடயங்களை   மக்கள் முன்வைத்திருந்தோம் என்ற அன்சிலின் கூற்றின் ஊடாக அவரும்   இந்த  முகவரியற்ற புத்தகத்தின் பின்னாலுள்ள கும்பலோடு உள்ளார் என்பது இப்போது வெட்ட வௌிச்சமாகியுள்ளது,இதைத் தான் தவளை தன் வாயால் கெடும் என்பார்கள்,

ஏற்கனவே தாருஸ்ஸலாம் மறைக்கப்பட்ட உண்மைகள் தொடர்பில் கொழும்பு குற்றவியல் தடுப்புப் பிரிவினர் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் தவிசாளர் பஷீர் சேகுதாவூத்திடம் விசாரணைகளை நடத்தியுள்ள நிலையில் அன்சிலின் இந்தக் கருத்துடன்  அவரும் விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றோம்,

அது மாத்திரமன்றி கிழக்கு முதலமைச்சர் மீது  எவ்வித ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்படாமல் செய்யப்பட்டிருக்கும் முறைப்பாட்டை செய்த துவான் நசீர் என்பவர் பஷீர் சேகுதாவூத்தின் ஊடக செயலாளராக முன்னர் பணியாற்றியவர் என்பதன் ஊடாக இந்த முறைப்பாட்டின் பின்னால் உள்ளவர்கள் யார் என்பதையும் நாம் விளங்கிக் கொள்ள முடியும்,

மக்களிடம் போலி  குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அவை எடுபடாது ஏமாந்து   போன நிலையில் இன்று  எவ்வித  ஆதாரங்களுமின்றி  முறைப்பாடொன்றை  பதிவு  செய்து  நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ள நிலையில் நீதிமன்றம் தற்போது அதற்கான  ஆதாரங்களை கோரியுள்ளது,
அது மாத்திரமன்றி எவ்வித  வழக்கொன்றும் பதிவு செய்யப்படாத நிலையில் நீதிமன்றத்தின் கீழ் விசாரணைக்குட்படுத்தப்படும் ஒரு விடயத்தில் கிழக்கு முதலமைச்சரை குற்றவாளியாக்கி தவறான தோற்றப்பாட்டை உருவாக்க முயல்வது எத்தகைய பாரிய குற்றம் என்பதை சட்டம் கற்றுள்ளதாக கூறுகின்ற  அன்சில் அறிந்திருப்பார் என நம்புகின்றேன்,

அது மாத்திரமன்றி இதுவரை  விசாரணைக்குட்படுத்தப்படாத ஒரு வழக்கின்  உரிய ஆதாரங்களோ சாட்சிகளோ முன்வைக்கப்படாத நிலையில்  அன்சிலே நீதிபதியாகி கிழக்கு முதலமைச்சரை குற்றவாளியாக்கி அவர் தேர்தலில்  போட்டியிட முடியுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளதன் மூலம் அடுத்த  தேர்தலில் முதலமைச்சரின் வருகை எதிர்க்கூட்டணியை கதிகலங்கச் செய்துள்ளது  என்பதை தௌிவாக புலப்படுத்துகின்றது,

ஆனால்  ஆதாரங்கள் இன்றி அவதூறு  கூறும் அன்சில் மீது வழக்கொன்று பதியப்படுமானால் அடுத்த தேர்தல் அல்ல எந்த தேர்தலிலும் போட்டியிட முடியாதளவு நீதித்துறை நடவடிக்கை எடுக்கும் என்பதை ஒரு சட்டத்தரணியாக உறுதியாக கூற முடியும்,

மக்கள் உங்கள் குற்றச்சாட்டுக்களை  ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை நீங்களே ஏற்றுக் கொண்டுள்ளீர்கள்,ஆகவே நாங்கள் உங்களை நம்பி வாக்கு கேட்கவில்லை மக்களை நம்பியே வாக்கு கேட்கின்றோம்,நீங்கள் கூட்டம் போட்டு எமது கட்சியின் மீதும் தலைவர் மற்றும் முதலமைச்சர் மீது அவதூறு கூறுகின்ற ஒரு மணி நேரத்தில் நாங்கள் பத்து அபிவிருத்தித் திட்டங்களை மக்களுக்கு முன்னெடுக்கின்றோம்,நீங்கள் நல்லாட்சி மீது குறைகளை  கூறி அறிக்கை விட்டு அமர்ந்திருக்கும் போது நாம் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம்.

ஆகவே மேடை போட்டு நீங்கள் கூறும் அவதூறுகளை நம்பி ஏமாறுவதற்கு மக்கள் ஏமாளிகலள்ளர்,மக்களை தவறாக எடை போடும் நீங்கள் தான் ஏமாளிகள் என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்,நீங்களோ உங்கள் முன்னாள் தவிசாளரோ பெயர் சொல்லும் படி மக்களுக்கு செய்த சேவை என்னவென்று கூற முடியுமா?ஆனால் முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் முதலமைச்சரும்  செய்த  சேவையை பட்டியலிட்டு கூறுவதற்கு நாம் தயார்,அதை மக்களும் அறிந்து வைத்துள்ளார்கள்,வெறுமனே மேடைபோட்டு கூவித் திரியும் உங்களைப் போன்றவர்களால்  இந்த சமூகம் எதையும் அடையப் போவதில்லை என்பதை மக்கள் நன்குணர்ந்துள்ளார்கள்,

தலைவர் அஷ்ரப் காட்டித் தந்த  நாகரீகமான அரசியல் கலாசாரத்தை விடுத்து ஏனைய சமூகங்கள் எம்மை ஏளனமாக பார்க்கும் அவதூறுகள் கூறி முன்னெடுக்கும்   கேவலமான அரசியல் கலாசாரத்தை முஸ்லிங்களின் அரசியலில் புகுத்தி நம் அரசியல் கலாசாரத்தை கொச்சைப்படுத்தி இலங்கை  முஸ்லிம் சமூகத்தையே ஏனைய சமூகங்கள் கேலி செய்யும் நிலையை உருவாக்கும் விதமான கேவலமான அரசியலை   செய்ய வேண்டாமென சட்டம் கற்றுள்ளதாக கூறும்  அன்சிலிடம்   கேட்டுக் கொள்கின்றேன்,

இதுவரை  எந்தவொரு  வழக்கிலும் ஆஜராகாத  அன்சிலுக்கு  நீதித்துறையுடன் விளையாடினால் என்ன நடக்கும் என்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை ,அதன் விளைவுகள் விபரீதமாக அமையும் என்பதை ஒரு சட்டத்தரணியாக அன்சிலுக்கு குறித்த விடயத்தை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்,

எனவே அவதூறுகளாலும் போலிக்குற்றச்சாட்டுக்களாலும்  முதலமைச்சரின் அரசியல் பயணத்தை நிறுத்த முடியும் என நீங்கள் நினைப்பது பகற்கனவே,முடிந்தால் மக்கள் பணிகளால் போட்டியிட்டு முதலமைச்சருடன் வென்று காட்டுங்கள் என தாம் சவால் விடுப்பதாக   கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எச் எம் லாஹிர் தெரிவித்தார்

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது