அரச உத்தியோகத்தர்கள் தங்கள் சேவைக்காலத்தில் மக்களுக்கு சிறந்த சேவையாற்ற வேண்டும்


கல்முனை பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.கனி

(பி.எம்.எம்.ஏ.காதர்)
தங்கள் சேவைக்காலத்தில் பொது மக்களுக்கு சிறந்த சேவையை வழங்க வேண்டிய பொறுப்பும் கடமையும் ஒவ்வொரு அரச உத்தியோகத்தருக்கும்  இருக்கின்றது இதுதான் அரச சேவையின் நோக்கமுமாகும்.அவ்வாறு பொது மக்களுக்கு சிறந்த சேவையை வழங்கிமைக்காக ஏ.ஆர்.எம்.சாலிஹ் இன்று பாரட்டப்படுவதையிட்டு மனமகிழ்ச்சியடைகின்றேன் என கல்முனைப் பிரதேச செயலாளர் எம்.எச்.முகம்மட் கனி தெரிவித்தார்.  

மருதமுனை கலை இலக்கியப் பேரவையின் ஏற்பாட்டில் கல்முனை பிரதேச செயலக சமுர்த்திப் பிரிவின் சிரேஷ்ட தலைமைப் பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ் சமுர்த்திப் பயனாளிகளுக்கு ஆற்றிவரும் சேவையைப் பாராட்டி கௌரவித்த நிகழ்வு  அண்மையில் மருதமுனை கலாச்சார மத்திய நிலைய மண்டபத்தில் நடைபெற்றது.இங்கு விஷேட விருந்தினராக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பேரவையின் ஸ்தாபகர் பி.எம்.எம்.அப்துல் காதர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கௌரவ விருந்தினராக அம்பாறை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் சந்துருவன் அனுருத்த,சமூர்த்தி சங்கப் பணிப்பாளர் எஸ்.எஸ்.பரீரா ஆகியோரும்  கலந்து கொண்டனர்.

இங்கு பிரதேச செயலாளர் கனி மேலும் உரையாற்றுகையில் தெரிவித்தாவது :-மக்களுக்கு சேவையாற்றுகின்ற போது சந்தோசத்தைக்கைக் கொண்டாலும் இனம் புரியாத சில தடங்கள்களும், பிணக்குகளும் வந்து சேருவதைத் தடுக்க முடியாமல் போய்விடுகின்றன.
அவ்வாறான சந்தர்ப்பங்களில் அவற்றைப் பிணக்குகளாகவோ, தடங்கலாகவோ  நினைத்துக் கொள்ளாமல் எங்களுடைய மனநிலையை மாற்றிக் கொண்டு அதை சேவையாக மேற்கொள்கின்ற போதுதான் அதன் பயன் மக்களைச் சென்றடையும்.மாறாக பிணக்குகளையும், மனக்கசப்புக்களையும் நாங்கள் பெரிதுபடுத்துவோமாக இருந்தால் எந்த ஒரு சேவையையும் மக்கள் சேவையாக மேற்கொள்ள முடியாது.
பொது மக்களுக்கு நல்ல சேவை செய்கின்ற அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படுகின்ற இவ்வாறான பாராட்டுக்களும்  கெளரவிப்புக்களும்  சேவையில் ஏற்படுகின்ற களைப்பைப்போக்குகின்றனவாக அமைகின்றது.அந்த வகையிலே இன்று பாராட்ப்படுகின்ற எமது பிரதேச செயலக சமுர்த்திப் பிரிவின் சிரேஷ்ட தலைமைப் பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ் அவர்களை வாழ்த்துவதுடன் பாராட்டுகின்ற மருதமுனை கலை இலக்கியப் பேரவைக்கு நன்றிகளையும் தெரிவிக்கின்றேன் என்றார். 
பேரவையின் உறுப்பினர்கள் ஒன்றிணைந்து முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ்குக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்துப்பத்திரம் வாசித்து வழங்கி கௌரவித்தனர்.இங்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.






Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்