2018 கல்வி ஆண்டிற்கு 4கோடி 10இலட்சம் பாடசாலை பாடப்புத்தகங்கள்
பாடப்புத்தகங்களை பிரசுரிப்பதற்கான விலைமனு கோரப்பட்டுள்ளது. எதிர்வரும் ஆண்டிற்காக 4 கோடி 10 இலட்சம் பாடப்புத்தகங்கள் அவசியமாகின்றன.
இதில் ஒரு கோடி பாடப்புத்தகங்கள் தற்சமயம் பயன்படுத்தப்படும் பாடப்புத்தகங்களின் ஊடாக பூர்த்தி செய்யப்படவுள்ளன. இது அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனத்தில் பிரசுரிக்கப்படவுள்ளது.
அடுத்த வருடம் பாடசாலைகளின் 3ம், 4ம் தரங்களுக்கு தேவையான பாடசாலை பாடப்புத்தகங்கள் புதிதாக பிரசுரிக்கப்படவுள்ளன.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 30ம் திகதிக்கு முன்னர் பாடசாலை பாடப்புத்தகங்களை விநியோகிப்பது இலக்காகும் என்றும் அவர் தெரிவித்தார்.
Comments
Post a Comment