கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியில் க.பொ.த.உயர்தரப் பிரிவில் கல்வி கற்பதற்கு 210 மாணவர்கள் தகுதி


2016 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையில்  9  மாணவர்கள்  9  பாடங்களிலும் ” ஏ ” சித்தி பெற்று  கல்லூரி வரலாற்றில் சாதனை படைத்துள்ளதுடன் தேசிய ரீதியில் முஸ்லிம் ஆண்கள் பாடசாலைகளுள் முதலாம் இடத்தையும் பெற்றுள்ளது.

( எம்.ஐ.எம்.அஸ்ஹர்)

அண்மையில் வெளியிடப்பட்ட க.பொ.த. சாதாரண தரப்பரீட்சையில் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியியைச் சேர்ந்த எம்.ஆர்.எம்.அல்பான் அஸ்பாக் ,ஐ.எல்.எம்.இன்ஸாப் ஹிஸ்னி  ,ஏ.ஆர்.எம்.றுசைட் , ரீ.முஹம்மட் ,எம்.எம்.எம்.சபீஹான்  ,எம்.ஏ.எம்.கைசான்  ,பீ.எம்.ஸஹ்ரி அபா  ,ஜே.யுஸ்ரி மபாத், ஏ.ஜி.எம்.இக்லாஸ் ஆகிய 9 மாணர்களும் சகல பாடங்களிலும் அதி திறமைச் சித்திகளையும் எம்.இஸட்.ஐ.ஏ.ஏ.சுஜாயிர் இப்றாஹிம்,  எப்.எம்.ஜாஹின் அப்ஸார்,  ஏ.எஸ்.ஏ.தஹ்லான்  , எம்.ஏ.எம்.அஸ்ஜத் றஸீஸ்  ,எம்.கே.அஸ்னம் சனாப் , எம்.எஸ்.அக்தர் பர்விஸ்  ,ஏ.ஜே.ஏ.ஸஹ்மி  ,எம்.ஆர்.மரீர் அஹமட் , எம்.ஜே.ஏ.அப்னான்  , ஜே.எம்.எம்.ஹன்ஸால் ஆகிய 10 மாணவர்களும் 8 பாடங்களிலும் அதி திறமைச் சித்திகளையும் எம்.பீ.எஸ்.ஆகில் அஹமட் ,ஏ.எஸ்.பியாஸ் முஹமட் , எப்.எஸ்.வஸீப் ,  எம்.எஸ்.எம்.சதீம் ,  எப்.பயாஸ் முஹமட்  , எப்.ஆர்.விஸாம் அஹமட்  , டபிள்யு.எம்.ஸகீ  , கே.மஸாரிக் அஹமட்  ,எம்.எம்.எம்.அன்ஸாப்  , என்.எம்.மின்ஹாஜ் , என்.எம்.இன்பாஸ்  ,ஏ.ஏ.சிஹாப்  ,எப்.ஹப்ஸான் அஹமட்  , ஜே.எம்.ஜர்ஸான் ஆகிய 14 மாணவர்களும் 7 பாடங்களிலும் அதி திறமைச் சித்திகளையும் 16 மாணவர்கள் 6 பாடங்களிலும் அதி திறமைச் சித்திகளையும் பெற்று மொத்தமாக  210 மாணவர்கள் க.பொ.த. உயர்தரப் பிரிவில் கல்வி கற்பதற்கான தகுதிகளையும் பெற்றுள்ளனர்.
இதனடிப்படையில் 110 மாணவர்கள் உயர்தர விஞ்ஞானப் பிரிவில் கல்வி கற்பதற்கும் ஏனைய  100 மாணவர்கள் உயர்தர தொழில்நுட்ப மற்றும்  கலை வர்த்தகப் பிரிவுகளிலும் கல்வி கற்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். ,
இது தவிர அம்பாறை மாவட்டத்திற்குட்பட்ட பல பிரதேசங்களிலிருந்தும் கல்லூரி விடுதியில் தங்கி கல்வி பயில்வதற்காக ஏனைய மாவட்டங்களிலிருந்தும் அதிக எண்ணிக்கையான மாணவர்கள் உயர்தப் பிரிவில்  இணைந்து கொள்வதற்காக விண்ணப்பித்துள்ளனர்.
இப்பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கும் கற்பித்த ஆசிரியர்களுக்கும் பகுதித் தலைவர் செயின்தம்பி ஸியாம் மற்றும் உதவி பகுதித் தலைவர் யு.கே.ஜெமீல் ஆகியோருக்கும் கல்லூரி அதிபர் எம்.எஸ்.முஹம்மட்  பிரதி அதிபர் ஏ.பி.முஜீன்  உதவி அதிபர்கள் ஆசிரியர்கள் மாணவர்கள்  கல்வி சாரா உத்தியோஸ்தர்கள் ஊழியர்கள்  பழைய மாணவர் சங்க பிரதி நிதிகள்   பாடசாலை அபிவிருத்திச் சங்க பிரதிநிதிகள் வாழ்த்துக்களையும்  பாராட்டுக்களையும் தெரிவிக்கின்றனர்.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்