கல்முனை வலயத்துக்குட்பட்ட 72 ஆசிரியர்களுக்கு கெளரவிக்கப்பு
தரம் 05 புலமைப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கற்பித்த ஆசிரியர்களை கெளரவிக்க கல்முனை வலயக் கல்வி அலுவலகம் ஏற்பாடு செய்துள்ளது. கல்முனை வலயத்துக்குட்பட்ட 72 ஆசிரியர்கள் கெளரவிக்கப் படவுள்ளனர் .
கல்முனை வலயக் கல்வி அலுவலகத்துக்குட்பட்ட பாடசாலைகளில் வெட்டுப் புள்ளிக்கு மேல் ஒரு மாணவரேனும் சித்தி பெற்றிருந்தாலும் அம்மாணவருக்கு கற்பித்த ஆசிரியர் இத்திட்ட்துக்குள் உள் வாங்கப் பட்டு கெளரவம் பெறவுள்ளார் . குறித்த 72 ஆசிரியர்களும் பொன்னாடை போர்த்தி நினைவு சின்னம் வழங்கி கெளரவிக்கப் படவுள்ளதாக வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் தெரிவித்தார்
இந்த கெளரவிப்பு விழா நாளை வெள்ளிக்கிழமை (19) மாலை நிந்தவூர் அல் -மஷ்ஹர் பெண்கள் உயர்தர பாடசாலை மண்டபத்தில் நடை பெறவுள்ளது . கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் தலைமையில் நடை பெறவுள்ள வைபவத்தில் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ.நிஸாம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு கெளரவிக்கவுள்ளார்
Comments
Post a Comment