'கல்முனையின் எழுச்சிக்கான ஆய்வரங்கம் - 2017'
எஸ் .எல். அப்துல் அஸீஸ்)
'கல்முனையின் எழுச்சிக்கான ஆய்வரங்கம் - 2017' நிகழ்வு எதிர்வரும் 20ஆம் திகதி சனிக்கிழமை காலை 9மணி தொடக்கம் மலை 4.30மணி வரை கல்முனை ஆசாத் பிளாஸா மண்டபத்தில் கல்முனையன்ஸ் போரத்தினால் நடாத்தப்படவுள்ளது.
சமகால கல்முனையை எடைபோட்டுக் காட்டும் கல்முனையின் கல்வி, சமூக, பொருளாதார தகவல் திரட்டு - 2016 இன் முடிவுகளை ஆய்வு செய்யும் ஆய்வரங்கமாக இது அமையவுள்ளது.
இவ் ஆய்வரங்கத்தில் 'அரசியலுக்கும் அப்பால் கல்முனையின் உரிமையும், அபிவிருத்தியும்- நடந்தது, நிகழ்வது தொடர்பான முன்னோக்கு' மற்றும் 'கல்முனையின் எதிர்காலத்தில் சிவில் சமூகத்தின் வகிபாகம்' ஆகிய தலைப்பிலான கருத்துரைகள் இடம்பெறவுள்ளதுடன் கல்முனைக்கான தனி நபர் தகவல் களஞ்சிய செயலியை ஆரம்பித்துவைக்கும் நிகழ்வும் இடம்பெறவுள்ளது.
ஆய்வரங்கம் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ள விரும்புவோர்கள் 0767171951, 0778547627 ஆகிய இலக்கம்களுடன் தொடர்பு கொள்ள முடியும்.
Comments
Post a Comment