ஜனாதிபதி சட்டத்தரணியாக நியமிக்கப்பட்டுள்ள சட்டமுதுமாணி எம்.நிஸாம் காரியப்பரை பாராட்டி கௌரவிக்கும் வைபவம்
சட்டத்துறையில் புலமைத் தேர்ச்சிக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஜனாதிபதி சட்டத்தரணியாக நியமிக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதிச் செயலாளர் நாயகமும் கல்முனை மாநகர முன்னாள் முதல்வருமான சட்டமுதுமாணி எம்.நிஸாம் காரியப்பரை பாராட்டி கௌரவிக்கும் வைபவம் நாளை மறுதினம் சனிக்கிழமை பிற்பகல் 4.30 மணி தொடக்கம் கல்முனை ஆசாத் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
"மண்ணுக்கு பெருமை சேர்த்த மகனுக்கு சொந்த மண் வழங்கும் கௌரவம்" எனும் தொனிப்பொருளில் கல்முனை முகைதீன் ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் டொக்டர் எஸ்.எம்.ஏ.அஸீஸ் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட பணிப்பாளர் ஏ.எல்.ஏ.அஸீஸ் சிறப்புப் பேச்சாளராக கலந்து கொள்ளவிருக்கிறார்.
Comments
Post a Comment