மக்தபுல் ஹுதாவின் 2 ஆம் ஆண்டு நிறைவு நிகழ்வும் பரிசளிப்பு விழாவும்
(யூ.கே.காலித்தீன், எம்.வை.அமீர்)
அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா சபையினால்
அறிமுகப்படுத்தப்பட்டு வரும் மக்தப் பாடத்திட்டமானது சாய்ந்தமருது
பிரதேசத்தில் முதன் முதலாக உருவாக்கப்பட்டு தற்போது 95 மாணவர்களுக்கு மேல்
மார்க்கக் கல்வி பயின்று வரும் மக்தபுல் ஹுதாவின் 2 ஆம் ஆண்டு நிறைவு
நிகழ்வும் பரிசளிப்பு விழாவும் மஸ்ஜிதுல் ஹுதா பள்ளிவாசலின் தலைவர்
ஏ.எல்.எம்.றசீட் (புர்க்கான்ஸ்) தலைமையில் (06) ஆம் திகதி சாய்ந்தமருது அல்
ஜலால் வித்தியாலய கூட்டமண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு கிழக்குமாகாண தலைமை மக்தப் மேற்பார்வையாளர் அஷ்செய்க் ஆர்.எல்.நிழாமுத்தீன் (நூரி) பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
ஹுதா பள்ளிவாசலின் தலைவர் ஏ.எல்.எம்.றசீட் (புர்க்கான்ஸ்)
தலைமையிலும், பெற்றோர்களின் சார்பில் தென்கிழக்குப் பல்கலைக்கழக பிரதிப்
பதிவாளர் எம்.ஐ.நௌபரின் நெறிப்படுத்தலிலும் நடைபெற்ற மேற்படி நிகழ்வுக்கு
கௌரவ அதிதியாக அஷ்செய்க் ஏ.வி.பர்ஹான் (தப்லீகி) அம்பாறை 3 ஆம் பிரிவு
மக்தப் மேற்பார்வையாளர் அவர்களும் கலந்து கொண்டார்.
மாணவர்களது பல்வேறு நிகழ்வுகள் அரங்கேறிய அதேவேளை நிகழ்வுக்கு
தலைமை வகித்த மஸ்ஜிதுல் ஹுதா பள்ளிவாசலின் தலைவர் ஏ.எல்.எம்.றசீட்
(புர்க்கான்ஸ்) அவர்கள் தனது உரையின்போது மார்க்கக் கல்வியின் ஆரம்ப
கட்டமான மக்தப் கல்வியின் அவசியம் பற்றியும் சாய்ந்தமருதில் மக்தப் கல்வி
நிலையங்களை நிறுவுவது தொடர்பில் தான் சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசல்
மரைக்காயர் சபையில் முன்வைத்த கோரிக்கை தொடர்பிலும் விளக்கமளித்தார்.
தங்களது செல்வங்களின் மார்க்கம் தொடர்பான நிகழ்வுகளைக்
கண்டுகளிப்பதற்காக பெரும் திரளான பெற்றோரும் பன்குகொண்டிருன்தது
குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment