நற்பிட்டிமுனை ஆயுள்வேத வைத்திய சாலை அதன் சொந்தக் கட்டிடத்தில் இயங்க கோரி ஆர்ப்பாட்டம்
கல்முனை, நற்பிட்டிமுனை ஆயுர்வேத வைத்தியசாலையை அதற்குரிய நிரந்தர கட்டிடத்தில் மீண்டும் திறக்குமாறு கோரி மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய காரியாலயத்திற்கு முன்னால் இன்று திங்கட்கிழமை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அல்கரீம் நெசவாளர் மற்றும் கைத்தொழில் சமூக அபிவிருத்தி அமைப்பின் ஏற்பாட்டில் அதன் தலைவர் சி.எம்.ஹலீம் தலைமையில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கோஷங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளுடன் இளைஞர்கள் பலர் பங்கேற்றிருந்தனர். இதன்போது மேற்படி அமைப்பின் தலைவர் சி.எம்.ஹலீம் கருத்து தெரிவிக்கையில்; “கடந்த 2014 ஆம் ஆண்டு தெயட்ட கிருள்ள திட்டத்தின் கீழ் நற்பிட்டிமுனையில் இருபது இலட்சம் ரூபா நிதியொதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட கட்டிடத்தில் மிகவும் சிறப்பாக இயங்கி வந்த ஆயுர்வேத வைத்தியசாலை கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருக்கிறது. தற்போது அவ்வைத்தியசாலை எங்கு இயங்குகிறது என்பது கூட பொது மக்களுக்கு அறிவிக்கப்படவில்லை. இது தொடர்பில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர், மாகாண ஆயுர்வேத வைத்திய ஆணையாளர் மற்றும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் ப...