Posts

விலைமாதுவாக நடிக்கிறார் ஸ்ரேயா

Image
புதுமுக நடிகைகளின் படையெடுப்பால் பழைய நடிகைகளான த்ரிஷா, ஸ்ரேயா போன்றவர்களுக்கு வாய்ப்பு குறைந்து வருகிறது. இதனால் புதுமுக நடிகைகளுக்கு இணையாக ஈடுகொடுக்க கடுமையாக போராடி வருகிறார்கள். சிலர் வித்தியாசமான கதாபாத்திரங்களில் ஏற்று நடிக்க தொடங்கியுள்ளனர். சிலர் கவர்ச்சி காட்ட துவங்கியுள்ளனர். இந்நிலையில் பீல்டு அவுட்டான நடிகைகளின் பட்டியலில் இருக்கும் நடிகை ஸ்ரேயா, அடுத்து ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இப்படத்தில் அவருக்கு கொடுக்கப்பட்டுள்ள கேரக்டர் விலைமாது கேரக்டர். விலைமாதுவாக நடிப்பது குறித்து நடிகை ஸ்ரேயாக கூறியுள்ளதாவது, படத்தின் கதை ரொம்ப பிடித்திருந்தது. அதனால் இந்த கேரக்டரில் நடிக்க ஒப்புக்கொண்டேன் என்று கூறியுள்ளார்.

சொறிக்கல்முனை பிரதேசத்தில் பெண்ணின் சடலம் மீட்பு

Image
சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சொறிக்கல்முனை கிராமத்தின் நாணல் காட்டு பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.  ஒரு மாதத்திற்கு முன்பு காணாமல் போன பெண்ணின் சடலமே மீட்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர். 38 வயதுடைய 3 பிள்ளைகளின் தாயாரின் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நல்லாட்சியை உறுதிப்படுத்த அரச உத்தியோகத்தர்கள் பொறுப்புடன் செயற்படவேண்டும்!

Image
  - ஜனாதிபதி கோரிக்கை- ‘ஜெனீவா- நியூயோர்க் அல்லது வொஷிங்டன் எங்கிருந்து எந்த அழுத்தம் கொடுக்கப்பட்டாலும் அவற்றை எதிர்கொள்ள அரசாங்கம் முழுத் தகைமையுடன் இருக்கும் நிலையில்- அரச உத்தியோகத்தர்களும்- திணைக்களத் தலைவர்களும் நாட்டின் நல்லாட்சியை உறுதிப்படுத்தி சர்வதேச ரீதியில் நாட்டின் நற்பெயரை உயர்த்த செயற்படவேண்டும்’ என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ  தெரிவித்தார். அலரிமாளிகையில் நேற்று நடைபெற்ற அரச உத்தியோகத்தர்கள்- அரச கூட்டுத்தாபனத் தலைவர்கள்- மாகாண மற்றும் உள்ளூராட்சி சபைகளின் தலைவர்களுடனான சந்திப்பில் உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார். ‘ஒரே நாடு’ எனும் அரசாங்கத்தின் கொள்கையை முன்கொண்டு செல்லும் நோக்கில் சர்வதேச ரீதியில் நாடு எதிர்கொண்டிருக்கும் சவால்களுக்கு முகம்கொடுத்தல் மற்றும் 2010ஆம் ஆண்டு ஏப்ரல் பொதுத் தேர்தலில் வெற்றிபெற்று அரசாங்கம் ஆட்சிக்கு வந்து 2 வருடங்கள் பூர்த்தியடைந்திருப்பதை முன்னிட்டு இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பல்வேறு திணைக்களங்கள் வருடாந்த அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை- கணக் காய்வாளர் திணைக்களத்தின் ஆலோசனை களை அரச திணைக்களங்கள் பின்பற்ற வில்ல

மர்ஹும் எச். எல். ஜமால்தீன் ஞாபகார்த்த கிண்ணம்; மருதமுனை கல்பனா கழகம் சம்பியன்

Image
மர்ஹும் எஸ். பி. ஜமால்தீன் பவுண்டேசன் அனுசரணையுடன், மருதமுனை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையினரால் நடாத்தப்பட்டு வந்த, ஜமால்தீன் ஞாபகார்த்த கிரிக்கெட் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட் டியும் பரிசளிப்பு விழாவும், கடந்த வெள்ளிக்கிழமை மருதமுனை மஷ¤ர் மெளலானா விளையாட்டு மைதானத் தில் நடைபெற்றது. நாணயச் சுழற்சியில் வெற்றியீட்டிய மருதமுனை மிமா விளையாட்டுக் கழகத்தினர் முதலில் துடுப்பெடுத்தாடி மருதமுனை கல்பனா விளையாட்டுக் கழகத்தினர் பத்து ஓவர் முடிவில் அறுபத்திமூன்று ஓட்டங்களைப் பெற்று இரண்டு விக்கெட்டுக்க ளினால் வெற்றியீ ட்டி ஞாபகார்த்த கிண்ணத் தினை சுவீகரித்துக் கொண்டனர். தொடரின் சிறந்த வீரராக கல்பனா அணியின் சப்றாஸ் தெரிவானதுடன் பிரதம அதிதிகளாக கலந்து கொண்ட கல்முனை மாநகர முதல்வர் சிறாஸ் மீராசாஹிப், முன்னாள் மேன்முறை யீட்டு உயர்நீதிமன்ற ஆணையாளர் எம். எஸ். எம். ஜெமீல் ஆகியோர் பரிசில்களை வழங்கி வைத்தனர்.

29 ஆவது சாரணர் ஜம்போரியில் ஜனாதிபதி பிரதம அதிதி!

Image
தம்புள்ள கண்டளம டி.எஸ்.சேனாநாயக்க வித்தியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஆசிய- பசுபிக் மற்றும் இலங்கையில்  29 ஆவது  சாரணர் ஜம்போரியில் ஜனாதிபதி பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். பெரும் எண்ணிக்கையிலான சாரணர்கள் கலந்துகொண்ட இந்த ஜம்போரியில் ஜனாதிபதி உரை நிகழ்த்தினார். காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக பண்டாடர தென்னக்கோன்- சாரணர் பிரதான ஆணையாளர் சீ.படுவன்கல- சாரணர் சங்கத் தலைவர் லெஸ்லி ரூபசிங்க- சாரணர் இயக்க உலகத் தலைவர் சைமன் , ஆசியா பெசிபிக்- ஆகியோர் உட்பட முக்கியஸ்தர்கள் இந்த ஜம்போரியில் கலந்துகொண்டனர்.

கல்முனை வர்த்தக சம்மேளத்திற்கும் மாநகர முதல்வர் சிராஸ் மீராசாஹிபுக்குமிடையிலான விசேட சந்திப்பு

Image
கல்முனை வர்த்தக சம்மேளத்திற்கும் மாநகர முதல்வர் சிராஸ் மீராசாஹிபுக்குமிடையிலான விசேட சந்திப்பு (26.03.2012) முதல்வரின் வாஸஸ்தலத்தில் இடம்பெற்றது. ஆசியாமன்றத்தின் கிழக்கு மாகாண நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர் எம்.ஐ.எம். வலீதின் ஏற்பாட்டில் கல்முனை வர்த்தக சம்மேளத்தின் தவிசாளர் யூ.எல்.எம். பஸீர், பிரதித் தலைவர் பீ.எம். ஜமால்தீன் ஆகியோருடன் சம்மேளனத்தின் முக்கியஸ்தர்கள் பலரும் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர். இச்சந்திப்பின் போது கல்முனை நகர வர்த்தகர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் மற்றும் மாநகர அபிவிருத்தி தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. குறிப்பாக வியாபார ஸ்தலங்களுக்கான உறுதி, சோலை வரி, வியாபார உத்தரவுப் பத்திரம் என்பவற்றுடன் கல்முனை மாநகர இரவுநேர வர்த்தகம் தொடர்பாக பஸ்தரிப்பு நிலைய கடைகளை பகிர்ந்தளித்தல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. மேலும் கல்முனை நகர மண்டபத்தினை புனரமைத்து மக்கள் பாவனைக்கு வழங்குமாகும் வர்த்த சமூகம் கோரிக்கையினை முன்வைத்தது. வர்த்தக சமூகத்தின் தேவைகளை நன்கு கேட்டறிந்த மேயர் சிராஸ் மீராஸாஹிப் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றஊப் ஹக்கீம் அவர்களுடன் சம்மேளனப் பி

கல்முனை மாநகர சபையில் 16 ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்

Image
கல்முனை மாநகர சபையில் நீண்ட காலமாக கடமையாற்றிய 16 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு நேற்று  கல்முனை மாநகர சபையில் இடம்பெற்றது. கல்முனை மாநகர முதல்வர் சிராஸ் மீராசாஹிப் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் மாநகர ஆணையாளர் ஜே.லியாக்கத் அலி, மாநகர சபை பொறியியலாளர் ஏ.ஜே.ஜௌசி, மாநகர சபை கணக்காளர் எல்.ரீ .சாலித்தீன்,  மாநகர சபை உறுப்பினர்களான ஏ.எம்.பறக்கத்துள்ளா, ஏ.எம்.பிர்தௌவ்ஸ், ஏ.ஆர் அமீர் உட்பட மாநகர சபை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். இதன்போது, 16 ஊழியர்களுக்கு நிரந்தர  நியமனம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கல்முனை குடியை சேர்ந்த சர்வதேச ஆய்வாளரான பேராசிரியர் அப்துல் கபூர்காலமானார்

Image
சர்வதேச ஆய்வாளரான பேராசிரியர் ஏ.எல்.எம்.அப்துல் கபூர் இலங்கை நேரப்படி நேற்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நெதர்லாந்தில் காலமானார்.  கல்முனையை சேர்ந்த இவர், கொழும்பு மார்கா ஆய்வு நிறுவனத்தின் முன்னாள் சிரேஸ்ட அதிகாரியும் நெதர்லாந்து துறைசார் தொழில்நுட்ப மன்றத்தின் தலைவரும், நெதர்லாந்து பல்கலைக்கழகமொன்றின் விரிவுரையாளருமாக கடமையாற்றியுள்ளார். நெதர்லாந்து - கல்முனை நட்புறவு அமைப்பின் தலைவராகவும் கல்முனை கல்வி மற்றும் கலாசார மேம்பாட்டு ஸ்தாபனத்தின் சிரேஸ்ட ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார். கொழும்பு பல்கலைக்கழகத்தின் புள்ளிவிபரவியல் துறையில் பட்டம் பெற்றது முதல் விரிவுரையாளராக தனது பணியை ஆரம்பித்த இவர் இத்துறையில் பல நூல்களையும் எழுதியுள்ளார். இவரின் ஜனாஸா நல்லடக்கம் இலங்கை நேரப்படி நாளை வியாழக்கிழமை காலை நெதர்லாந்தில் நல்லடக்கம் செய்யப்படும் 

கல்முனை மாநகர சபையில் உள்ள வெற்றிடங்களுக்கு இன்று நேர்முகப் பரீட்சை

Image
கல்முனை மாநகர சபையில் உள்ள பதினாறு வெற்றிடங்களுக்கு இன்று நேர்முகப்  பரீட்சை நடைபெற்றது .

கல்முனை பள்ளி வீதி புனரமைப்பு ஆரம்ப நிகழ்வு!

Image
அரசாங்கத்தின் கமநெகும எனும் ஒரு கிராமத்திற்கு ஒரு வேலைத் திட்டத்தின் கீழ் கல்முனை பள்ளி வீதியை கொங்கிறீட் பாதையாக அபிவிருத்தி செய்யும் வேலைத் திட்ட ஆரம்ப நிகழ்வு நேற்று முன்தினம் நடைபெற்றது. திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கல்முனை முஸ்லிம் பிரதேச செயலகப் பிரிவு அபிவிருத்திக் குழுத் தலைவருமான எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களது வேண்டுகோளுக்கிணங்க இவ்வீதி புனரமைக்கப்படுகிறது. ந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ், கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல், கல்முனைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டீ.யி.ஜே.பி. நாணயக்கார மற்றும் கல்முனைக்குடி ஜூம்ஆ பள்ளிவாசல் தலைவர் டாக்டர் எம்.அஸீஸ் உட்பட பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

காத்தான்குடி பிரதானவீதியில் பாரிய விபத்து

Image
மட்டக்களப்பு- கல்முனை பிரதான வீதியில் காத்தான்குடி அந்நாஸர் வித்தியாலயத்திற்கு முன்னால் இடம் பெற்ற பாரிய வீதி விபத்துச் சம்பவத்தில் கணவன் மனைவி குழந்தை ஆகியோர்  படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை 7.25 மணியளவில் இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது. பிரதான வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாரிய கனரக லொறியொன்றின் பின்னால் மோதியபோதே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பிலிருந்து கல்முனை நோக்கிச்சென்ற காரே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.  குறித்த காரின் சாரதி தூக்கத்திலிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. காத்தான்குடி பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.(நன்றி :காத்தான்குடி இன்போ )

ஜெனீவா தீர்மானம் குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை!

Image
அமைச்சர் மஹிந்த சமரசிங்க. கண்ணாடி வீட்டிற்குள் இருந்து கல்லெறிய வேண்டாமென இந்தப் பிரேரணையை முன்வைத்த நாடுகளுக்கே கூறினேன். சர்வதேச சமூகம் சில நாடுகள் விடயத்தில் இரட்டை வேடம் பூணுகிறது. மனித உரிமை பேரவையின் வருடாந்த மீளாய்வு கூட்டம் ஒக்டோபரில் நடைபெற உள்ளது. இதில் எமது நல்லிணக்க செயற்பாட்டின் முன்னேற்றம் குறித்து நாமாக தெளிவுபடுத்துவோம். இது புதிய விடயமல்ல. இதற்கு முன்னரும் நாம் எமது செயற்பாடுகளின் முன்னேற்றத்தை விளக்கியுள்ளோம். அமைச்சர் ரவூப் ஹக்கீம். ஒரு சில அமைச்சர்கள் தெரிவிக்கும் கருத்து அரசாங்கத்தின் நிலைப்பாடாகாது. நல்லிணக்கம் ஏற்படுத்தும் செயற்பாட்டில் சர்வதேச சமூகம் தேவையற்ற தலையீடு செய்துள்ளது. நல்லிணக்கம் ஏற்படுத்த தேவையான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதிலுள்ள குறைபாடுகள் குறித்து நாம் அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளோம். அமைச்சர் ரிசாத் பதியுதீன் . அமெரிக்காவின் பிரேரணைக்கு எதிரான நிலைப்பாட்டை 23 நாடுகள் கொண்டிருந்தன. 30 வருட யுத்தத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து நிம்மதியாக வாழும் சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனை அநேக நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளன. இலங

கல்முனை மாநகர சபை வெற்றிடத்துக்கு நாளை நேர்முக பரீட்சை

Image
கல்முனை மாநகர சபையில் உள்ள பதினாறு வெற்றிடங்களுக்கு நாளை நேர்முகப்  பரீட்சை நடை பெறவுள்ளது.  இந்த பதினாறு வெற்றிடதுக்கும் நூற்றி ஏழு விண்ணப்பதாரிகள் விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப் படுகிறது. இதில் காரியாலய கரிய சகாயர்,சந்தை மேற்ப்பார்வையாளர்,சாரதி,தொழிலாளர் பதவி என்பன அடங்குகின்றன . இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு கடந்த வாரம் மாநகர சபையினால் அறிவித்தல் விடுக்கப் பட்டது.

இலங்கைக்குஅமெரிக்க புதிய தூதுவராகமிஷேல் சிஸன்

Image
இலங்கைக்கும் மாலைதீவுக்குமான புதிய தூதுவராக வெளிநாட்டுச் சேவையைச் சேர்ந்த இராஜதந்திரியான மிஷேல் சிஸன் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவினால் நியமிக்கப்பட்டுள்ளார். வெளிநாட்டுச் சேவையில் சிரேஷ்ட நிலையிலுள்ள இவர்- பக்தாத்தில் சட்ட அமுலாக்கம் மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கான தூதுக்குழுவின் உதவித் தலைவராக இதுவரை கடமையாற்றியவர் ஆவார். இலங்கைக்கான தூதுவராக சிஸன் ஈராக்கிற்கான தூதுவராக பிரெட் மக்கேக் ஆகியோரின் நியமனங்களை அறிவித்த அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா- 'தமது புதிய பதவிகளில் இவர்கள் வழங்கவுள்ள நிபுணத்துவ சேவையினால் எமது நாடு பெரும் நன்மையடையும்' என கூறினார்

மக்கள் பிரதிநிதிகளுக்கு உலமா சபை பாராட்டு

Image
சாய்ந்தமருது மற்றும் மாளிகைக்காடு ஆகிய பிரதேசங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்ளை கௌரவிக்கும் நிகழ்வு சாய்ந்தமருது - மாளிகைக்காடு உலமா சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சாய்ந்தமருது - மாளிகைக்கா உலமா சபையின் தலைவர் சட்டத்தரணி அஷ்ஷெய்க் என்.எம்.ஏ.முஜீப் தலைமையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்ஹரீஸ், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப், சாய்ந்தமருது பிரதேசத்திலிருந்து கல்முனை மாநகர சபைக்கு உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்ட ஏ.ஏம்.பசீர், ஏ.எம்.பிர்தௌஸ், ஏ.நசார்டீன் மற்றும் காரைதீவு பிரதேச சபைக்கு உறுப்பினராக மாளிகைகாடு பிரதேசத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட ஏ.பாயிஸ் ஆகியோர் இதன்போது கௌரவிக்கப்பட்டனர். 

சம்பத் வங்கி 25 ஆண்டு விழா கல்முனையிலும் நிகழ்வு

Image
சம்பத் வங்கி 25 ஆண்டு விழா நிகழ்வுகள்  கல்முனை கிளையிலும் முகாமையாளர் திரு .டேவிட் நிதர்சன் தலைமையில் நடை பெற்றது .வாடிக்கையாளர்கள் மங்கள விளக்கேற்றி ஆண்டு விழா வை ஆரம்பித்து வைத்து முகாமையாளருக்கு நினைவு சின்னமும் வழங்கி வைத்தனர் . படங்கள்- கல்முனை செய்தியாளர் யு.எம்.இஸ்ஹாக்

உஸ்ணத்தை தாங்கும் வெள்ளரி

Image
கல்முனை பகுதியில் வெள்ளரிப் பழ விற்பனை அதிகரித்துள்ளது உஷ்ணம் காரணமாக மக்கள் பழங்களில் நாட்டத்தை காட்டுகின்றனர் கூடுதலாக வெள்ளரிப்பழம் விற்பனை செயப்படுகிறது .

கிராமத்துக்கு ஒரு வேலை திட்டம் கல்முனையில்

Image
mjpNkjF [dhjpgjp k`pe;j uh[gf;\ mtu;fspd; vz;zg;gb 'fkneFk' Ntiyj;jpl;lj;Jld; ,ize;J nghUshjhu mgptpUj;jp mikr;ru; g\py; uh[gf;\ mtu;fspd; topfhl;lypy; fy;Kid khefu rig cWg;gpdu; V.vk;. gwf;fj;Js;sh`;thy; ,d;W Muk;gpf;fg;gl;lJ. ,e;epfo;tpy; fy;Kid khefu rig cWg;gpdu; V.vk;. gwf;fj;Js;sh`; gpujk mjpjpahf fye;Jnfhz;L Ntiyj;jpl;lj;jpid Muk;gpj;J itj;jhu;. ,jpy; Fwpj;j gpuNjrj;J fpuhk Nrtfu;fSk;> rKu;j;jp cj;jpNahfj;ju;fSk; rkaj;jiytu;fs;> Kf;fpa gpuKfu;fs; kw;Wk; gpuNjrthrpfSk; fye;J rpwg;gpj;jdu;.