கல்முனை வர்த்தக சம்மேளத்திற்கும் மாநகர முதல்வர் சிராஸ் மீராசாஹிபுக்குமிடையிலான விசேட சந்திப்பு
கல்முனை வர்த்தக சம்மேளத்திற்கும் மாநகர முதல்வர் சிராஸ் மீராசாஹிபுக்குமிடையிலான விசேட சந்திப்பு (26.03.2012) முதல்வரின் வாஸஸ்தலத்தில் இடம்பெற்றது. ஆசியாமன்றத்தின் கிழக்கு மாகாண நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர் எம்.ஐ.எம். வலீதின் ஏற்பாட்டில் கல்முனை வர்த்தக சம்மேளத்தின் தவிசாளர் யூ.எல்.எம். பஸீர், பிரதித் தலைவர் பீ.எம். ஜமால்தீன் ஆகியோருடன் சம்மேளனத்தின் முக்கியஸ்தர்கள் பலரும் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர். இச்சந்திப்பின் போது கல்முனை நகர வர்த்தகர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் மற்றும் மாநகர அபிவிருத்தி தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
குறிப்பாக வியாபார ஸ்தலங்களுக்கான உறுதி, சோலை வரி, வியாபார உத்தரவுப் பத்திரம் என்பவற்றுடன் கல்முனை மாநகர இரவுநேர வர்த்தகம் தொடர்பாக பஸ்தரிப்பு நிலைய கடைகளை பகிர்ந்தளித்தல் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. மேலும் கல்முனை நகர மண்டபத்தினை புனரமைத்து மக்கள் பாவனைக்கு வழங்குமாகும் வர்த்த சமூகம் கோரிக்கையினை முன்வைத்தது.
வர்த்தக சமூகத்தின் தேவைகளை நன்கு கேட்டறிந்த மேயர் சிராஸ் மீராஸாஹிப் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றஊப் ஹக்கீம் அவர்களுடன் சம்மேளனப் பிரதிநிதிகளை சந்திப்பதங்குரிய ஏற்பாடுகளை செய்து தருவதாக உறுதியளித்ததோடு வர்த்தக சமூகத்தின் கோரிக்கைகளினை இயன்றவரை இலகுவாக தீர்த்துத் தருவதாகவும் வாக்குறுதியளித்தார்.
வர்த்தக சமூகத்தில் கோரிக்கைகள் அடங்கிய மஹஜர் மாநகர முதல்வரிடம் கையளிக்கப்பட்டது.

Comments
Post a Comment