துருவம் ஊடக வலையமைப்பின் இருநாள் செயலமர்வு!
துருவம் ஊடக வலையமைப்பு, சிம்ஸ் கெம்பஸ் உடன் இணைந்து நடாத்திய பிரதேசத்தின் மாணவர்கள் மற்றும் ஊடகத்துறை சார்ந்தோருக்கான இருநாள் ஊடக செயலமர்வு கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. இச்செயலமர்வில் பல்வேறு தலைப்புக்களில் தலைசிறந்த வளவாளர்களால் விரிவுரைகளும் பயிற்சிகளும் நடாத்தப்பட்டது. முதல்நாள் அமர்வில் நேர்காணல் என்ற தலைப்பில் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன சிரேஷ்ட அறிவிப்பாளர் ஏ.எம். தாஜ், பத்திரிகை செய்திக் கட்டமைப்பு என்ற தலைப்பில் விடிவெள்ளி பிரதம ஆசிரியர் எம்.பி.எம். பைறூஸ், பத்தி எழுத்து என்ற தலைப்பில் ஊடகவியலாளர் ஜெஸ்மி எம். மூஸா, செய்தி, அறிவிப்புக்கலை நுணுக்கங்கள் என்ற தலைப்புக்களில் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன சிரேஷ்ட ஒலிபரப்பாளர் சனுஸ் முஹம்மது பெறோஸ் ஆகியோர் விரிவுரைகளை நிகழ்த்தினார்கள். இரண்டாம் நாள் செயலமர்வில் சமூக வலையமைப்பும், ஊடகத் தொழில்நுட்பமும் என்ற தலைப்பில் சிம்ஸ் கெம்பஸ் பணிப்பாளர் அன்வர் எம். முஸ்தபா, ஊடகத்தில் தமிழ்மொழி என்ற தலைப்பில் கொழும்பு தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் வீ.எஸ். இந்திரகுமார், அச்சு ஊடகத்துறையும் சட்டமும் என்ற தலைப்பில்...