ஊடகவியலாளர் எஸ்.எம்.எம்.றம்ஸானுக்கு தொலைபேசியில் அச்சுறுத்தல்

கல்முனையின் உள்ளுர் அரசியல் வாதி ஒருவரின் செயலாளா் எனக்கூறி 0772374735 எனும் தொலைபேசி மூலம் கல்முனையைச் சேர்ந்த ஊடகவியலாளர் எஸ்.எம்.எம்.றம்ஸானை அச்சுறுத்தியுள்ளார்.

அம்பாறை மாவட்டத்தில் தெடர்ச்சியாக பெய்து வரும் அடை மழையினால் கல்முனைக்குயின் வீதிகள் அனைத்தும் நீரில் மூழ்கியதோடு பல வீடுகளுக்குள்ளும் நீர் நிரம்பியதையடுத்து மக்கள் இடம் பொயர்ந்துள்ளனா். 

இவ் அவல நிலையை படம்பிடித்து செய்தி சேகரிக்க இன்று வெள்ளிக்கிழமை ஊடகவியலாளா் றம்ஸான் சென்றுள்ளார். 

அவ்வேளையில்  எந்த வீதியால் செல்வது என நின்று கொண்டிருந்த குறித்த அரசியல் வாதியின் ஆதரவாளரிடம் பாருங்கள் எமது ஊரி நிலையை. இன்னும் சிலகாலங்களில் நடப்பதற்குக் கூட கல்முனையில் வீதி இருக்குமோ தெரியாது. அருகில் உள்ள சாய்ந்தமருது மருதமுனை ஊர்களைப்பாருங்கள் என்ன அழகாக வீதிகளை அமைத்துள்ளார்கள் என்று கூறி இந்நிலைமை பாராளுமன்ற உறுப்பினரிடம் கூறுங்கள் என்றதுடன் அவா் சேகரித்த செய்தி புகைப்படங்களையும் அனுப்பிவிட்டார்.

அச்செய்தி இணையத்தளத்தில் பிரசுரமாகியும்விட்டது.

பிற்பகள் 5.50 மணியளவில் தொலைபேசியில் தான் குறித்த அரசியல்வாதியின் செயலாளா் எனக் கூறி அச்சுருத்தியதோடு தகாதவார்த்தைப்பிரயோகங்களால் திட்டியும் உள்ளார்.

இது தொடா்பாக குறித்த ஊடகவியலாளா் கல்முனைப் பொலிஸில் முறைப்பாடு செய்ததுடன் பொலிஸார் உடனடி விசாரனைகளை ஆரம்பித்து  மேற்கொண்டு வருகின்றனா்.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்