ரிசானாவின் பெற்றோர் ஜனாதிபதியுடன் சந்திப்பு!
சவுதி அரேபியாவில் ஷரிஆ தண்டனை நிறைவேற்றப்பட்ட ரிஸானா நபீக்கின் பெற்றோர்களான முகம்மது நபீக் மற்றும் செய்யது பரீனா ஆகியோர் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் சந்தித்தனர்.
ஜனாதிபதியின் ஆலோசனையின் பேரில் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் சங்கத்தால் வழங்கப்பட்ட 10 லட்சம் ரூபாவுக்கான காசோலையை ஜனாதிபதி ரிசானாவின் பெற்றோர்களுக்கு கையளித்தார்.
அமைச்சர் டிலான் பெரேரா- கிழக்கு மாகாண முதலமைச்சர் அப்துல் மஜீத்- திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம். தௌபீக்- பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்
இதன்போது ரிசானா நபீக்கின் பெற்றோரிடம் 10 இலட்சம் ரூபா நிதியும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் கையளிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ரிசானா நபீக்கின் சகோதரருக்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் திருகோணமலை மாவட்ட அலுவகத்தில் தொழில் வாய்ப்புக்கான நியமன கடிதமும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் கையளிக்கப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது.
Comments
Post a Comment