ரிசானா நபீக் நாடு திரும்பவில்லை மண் மறைந்தார்

மரண தண்டனைக்கு உள்ளான இலங்கை பணிப்பெண் ரிசானா நபீக்கின் சடலம் சவூதி அரேபியாவில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

ரிசானா நபீக்கின் சடலத்தை கையளிக்குமாறு இலங்கை அரசாங்கம் சவூதி அரேபிய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது என வெளிநாட்டு அமைச்சின் ஊடக பேச்சாளராக சரத் திசாநாயக்க தெரிவித்தார்.

எனினும் ரிசானா நபீக்கின் சடலம் சவூதி அரேபியாவில் அடக்கம் செய்யப்பட்டு விட்டது என சவூதி அரேபிய அரசாங்கம் அறிவித்தாக அவர் மேலும் தெரிவித்தார்.

குழந்தையொன்றை கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ரிசானா நபீக்கிற்கு நேற்று புதன்கிழமை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமை குறிப்பிட்டத்தக்கது. 
ரிசானாவின் கழுத்து வெட்டப்பட்ட கொடுரக்காட்சி இணைக்கப்பட்டுள்ளது. பார்க்க தைரியமற்றவர்கள் தயவு செய்து வீடியோவை கிளிக் செய்யவேண்டாம். 

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்