மூதூர் ரிஸானா நபீக் விரைவில் நாடு திரும்புவார்: சவூதி அரேபிய தூதுவர்

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை பணிப்பெண் ரிஸானா நபீக் விரைவில் நாடு திரும்பும் சாத்தியம் உள்ளது என இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் அப்துல் அஸீஸ் அல் ஜம்மாஸ் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நீதி அமைச்சில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது.

இதன்போதே இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டதாக நீதி அமைச்சின் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"பணிப்பெண் ரிஸானா நபீகின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சவூதி மன்னர் அப்துல்லாஹ் பின் அப்துல் அஸீஸ் அல் சவூதிற்கு அனுப்பி வைத்த கருணை மனு சாதகமான முறையில் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டுள்ளது.

இதனால், உயிரிழந்த குழந்தையின் பெற்றோருடனான சமாதான முயற்சிகள் பயனளிக்கும்.  இதன் காரணமாக ரிஸானா விரைவில் நாடு திரும்பும் சாத்தியம் உண்டு. மனிதாபிமான அடிப்படையிலான  ஜனாதிபதியின் கோரிக்கைக்கு சாதகமாக கொழும்பிலுள்ள சவூதி அரேபிய தூதுவராலயம் விஷேட குறிப்புகளை இணைத்து அனுப்பியது.

அத்துடன், சவூதி மன்னரின் வேண்டுகோளின்படி ரியாத் ஆளுநர் சல்மான் ஏற்கெனவே உயிரிழந்த குழந்தையின் குடும்பத்தினரோடு தொடர்பு கொண்டுள்ளார். ரிஸானா நபீக் பணிப்பெண்ணாக சென்றிருந்தார்.பாலூட்டும் கடமை பணிப்பெண்ணுக்கு உரியதல்ல. அது குழந்தை பராமரிப்பாளருக்கு உரியதாக இருப்பதும் விடுதலைக்கு சாதகமான காரணிகளாக அமையலாம' என சவூதி அரேபிய தூதுவர் தெரிவித்தார்.


ரிஸானா நபீக்கின் கடவுச்சீட்டிலும் பயண ஆவணங்களிலும் வயதைக் கூட்டிக் குறிப்பிட்டு மோசடியான முறையில் அவரை சவூதி அரேபியாவுக்கு அனுப்பிய பயண முகவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டதாக கூறிய அமைச்சர் ஹக்கீம் அதற்கான ஆவணங்கள் தற்பொழுது உள்ளதாகவும் தெரிவித்தார். 


Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்