உடன் அமுலுக்கு வரும்வகையில் பிரதம நீதியரசர் நீக்கம்!
பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவை அப்பதவியிலிருந்து உடன் அமுலுக்கு வரும் வரையில் நீக்குவதற்கான தீர்மானத்தில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை கைச்சாத்திட்டார்.
அரசியலமைப்பின் 107(2) பிரிவின் பிரகாரமே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டளையை பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திற்கு ஜனாதிபதி செயலகத்தைச்சேர்ந்த சிரேஷ்ட உதவிச்செயலாளர் மற்றும் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள் எடுத்துச்சென்று கையளித்தனர்.
பிரதம நீதியரசரை நீக்குமாறு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையில் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு தானும் இணங்குவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment