பட்டதாரிகள் 52000 பேருக்கும் அடுத்த மாதம் நிரந்தர நியமனம்


அரசாங்கம் வாக்குறுதியளித்தபடி 52,000 பட்டதாரிகளுக்குமான நிரந்தர நியமனம் பெப்ரவரியில் வழங்கப்படுமென பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோன் செனவிரத்ன தெரிவித்தார்.


ஐ. தே. க. மற்றும் ஜே. வி.பியினரின் பொய்ப்பிரசாரங்கள் பயனற்றவை என தெரிவித்த அமைச்சர், கடந்த பெப்ரவரியில் ஆரம்பித்த பட்டதாரிகள் நிரந்தர நியமனத்திற்கான நடவடிக்கை கள் இந்த 2013 பெப்ரவரியுடன் முழுமையாக நிறைவுபெறும் எனவும் தெரிவித்தார்.

பயிற்சிப் பட்டதாரிகளான 52,000 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்குவதில் உறுதியான வேலைத்திட்டமொன்று அரசாங்கத்திடமில்லையென ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜே. வி. பி. எம்.பிக்கள் பல்வேறு விமர்சனங்களையம் குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்து வருகின்றனர்.
அண்மையில் சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்ற பட்டதாரிகள் சங்கத்தின் நிகழ்வையும் அவர்கள் விமர்சித்து வருகின்றனர். இது பற்றி கருத்துத் தெரிவித்த அமைச்சர் ஜோன் செனவிரத்ன அண்மையில் சுகததாச உள்ளரங்கில் நடைபெற்றபட்டதாரிகள் சங்க நிகழ்வில் ஜனாதிபதியினால் மூவருக்கு  நிரந்தர நியமனங்களுக்கான ஒரு அடையாளமாகவே இக்கடிதங்கள் வழங்கப்பட்டன.
ஏனைய அனைவருக்கும் எதிர்வரும் பெப்ரவரி மாத இறுதிக்குள்  நிரந்தர நியமனக்கடிதங்கள் வழங்கப்பட்டுவிடும்.பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டுமென்பது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சிந்தனையில் உதித்த திட்டமாகும்.

யார் எத்தகைய பிரசாரங்களை முன்னெடுத்த போதும் அரசாங்கம் அதனை நிறைவேற்றும் எனவும் அமைச்சர் தெரிவித்தார். 

அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அமைச்சர் மேற்படி தகவலைத் தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

தமிழ்த்தினப் போட்டியில் பாவோதலில் சுஷ்மிக்கா முதலிடம்