கலாசார மண்டப திறப்பு விழா
சாய்ந்தமருது மல்ஹருஸ் ஷம்ஸ் மகளிர் மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட மைமுனா அஹமட் கலாச்சார மண்டபத்தினை நீதிபதி ஹாஜியானி மைமுனா அஹமட் திறந்து வைத்தார்.இத்திறப்பு விழா நிகழ்வு பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம்.ஐ.மதனி தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் யூ.எல்.ஏ.ஹாசீம், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலை வைத்திய அதிகாரி டாக்டர். என்.ஆரீப், சாய்ந்தமருது பிரதேச கல்விப் பணிப்பாளர் ஐ.எல்.ஏ.றகீம் மற்றும் ஆசிரியர்கள் என்போர் கலந்து கொண்டிருந்தனர்.
இக்கலாச்சார மண்டபத்தினை நீதிபதி ஹாஜியானி மைமுனா அஹமட் அவர்களின் செலவில் நிர்மாணித்துக் கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment