தந்திச்சேவை இடைநிறுத்தப்பட மாட்டாது
தபால் சேவைகள் அமைச்சர் தகவல்!
தந்திச்சேவையை (Telegrams) இடைநிறுத்துவது பற்றி இதுவரை எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை என தபால் சேவைகள் அமைச்சர் ஜீவன் குமாரதுங்க தெரிவித்தார்.
தந்திச்சேவைக்கான நாடுமுழுவதிலும் 1018 ஊழியர்கள் சேவையில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். இவர்களில் சிலர் தற்சமயம் தபால் விநியோக நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
தந்திச்சேவையில் மாற்றங்கள் இடம் பெறுமா? என்பது குறித்து நேற்று தபால் அமைச்சில் நடத்திய செய்தியாளர் மாநாட்டின் போதே அமைச்சர் ஜீவன் குமாரதுங்க இத்தகவலைத் தெரிவித்தார்.
Comments
Post a Comment