Posts

செயலாளராக பரக்கத்துல்லாஹ் நியமனம்

Image
  அம்பாறை மாவட்ட மத்திய குழு கூட்டம் அட்டளைசேனையில் இடம்பெற்றது. இதில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராச்சி மன்ற தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களை கொண்ட மக்கள் பிரதிநிதிகள் குழு அமைக்கப்பட்டு அதற்கான செயலாளராக கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம். பரக்கத்துல்லாஹ்  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் நீதியமைச்சருமான ரஊப் ஹக்கீமினால் நியமனம் செய்யப்பட்டார் 

சர்வதேச வறுமை ஒழிப்பு தினம்

Image
யூ.எம்.இஸ்ஹாக்  சர்வதேச வறுமை ஒழிப்பு தினம்   கல்முனை பிரதேச செயலகத்திலும் அனுஸ்டிக்கப்பட்டது. சமுர்த்தி சமுக அபிவிருத்தி மன்றம் ஏற்பாடு செய்த இவ்வைபவம்  கல்முனை பிரதேச செயலகத்தில் இன்று காலை சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ் தலைமையில் நடை பெற்றது . இந்த வைபவத்தில்  சமுர்த்தி திட்டத்தினால் வறுமையில் இருந்து மீட்சி பெற்ற  நற்பிட்டிமுனைஇ மருதமுனைஇ கல்முனை  பிரதேசத்தை சேர்ந்த 13 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தாங்களாகவே முன் வந்து வறுமை நிவாரண முத்திரையை மீள ஒப்படைத்துள்ளனர். அத்தோடு மேலும் வறுமையில் இருந்து மீழும் வகையில் 33 குடும்பங்களுக்கு 15இலட்சம் ரூபா நிதி ஜீவனோபாயக் கடனாக வழங்கி வைக்கும் நிகழ்வூம் இடம் பெற்றது. இவ் விழாவில் அம்பாறை மாவட்ட பிரதி சமுர்த்தி பணிப்பாளர் யூ.பி.எஸ்.அனுருத்த பியதாச இகல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல் இமாவட்ட சமுர்த்தி இணைப்பாளர் ஐ.அலியார்இ ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். சமுர்த்தி திட்டத்தை சிறப்பாக நடைமுறைப்படுத்தும் உத்தியோகத்தர்கள் கௌரவிப்பும் அங்கு இடம் பெற்றது. இலங்கை சமுர்த்தி அதிகார சபையினது  திரியபியச

நாளை வியாழக்கிழமை முஸ்லிம் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை!

Image
புனித ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு நாடு பூராகவுமுள்ள 856 முஸ்லிம் பாடசாலைகளுக்கும் 17ஆம் திகதி வியாழக்கிழமை விடுமுறை வழங்கப்பட்டு, பதில் பாடசாலையை 26ஆம் திகதி நடத்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாகக் கல்வி அமைச்சின் முஸ்லிம் பாடசாலைகள் அபிவிருத்திப் பிரிவின் பணிப்பாளர் இஸட் தாஜுடீன் தெரிவித்தார். இன்று 16ஆம் திகதி புனித ஹஜ் பெருநாள் முஸ்லிம்களால் கொண்டாடப்படுகிறது. அத்துடன 18ஆம் திகதி போயா விடுமுறை தினமாகும்;. இந்நிலையில் 17ஆம் திகதி பாடசாலை நாளாக இருப்பினும் முஸ்லிம் மாணவர்களின் வரவு குறைவாகவிருக்கும் எனவும் இதனால் 17ஆம் திகதி முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குமாறு பல்வேறு தரப்புக்களிலிருந்து கோரிக்கைகள் கல்வி அமைச்சுக்கும் முஸ்லிம் பாடசாலைகள் அபிவிருத்திப் பரிவுக்கும் முன்வைக்கப்பட்டுள்ளன. இக்கோரிக்கைகளைக் கருத்திற் கொண்டு மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகப் பணிப்பாளர் தாஜுடீன் தெரிவித்தார். அத்துடன,; 17ஆம் திகதி விடுமுறை வழங்கப்படுகின்ற முஸ்லிம் பாடசாலைகளுக்கு பதில் பாடசாலை 26ஆம் திகதி கட்டாயம் நடத்தப்பட வேண்டுமென கல்வி அமைச்சு சகல முஸ்லிம் பாடசாலை அதிபர்களையும்

ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடும் அனைவருக்கும் எமது வாழ்த்துக்கள்

Image

நோயாளி ஒருவரின் பெருங்குடல் மலை பாம்பின் உருவத்தில்

Image
யு.எம்.இஸ்ஹாக்  நோயாளி ஒருவரின் பெருங்குடல்  மலை பாம்பின் உருவத்தில்  சுருண்டு  பெருக்கமடைந்த நிலையில்  சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஆதார  வைத்திய சாலையில் சத்திர சிகிச்சை செய்யப்பட்டு அகற்றப்பட்டுள்ளது.  பெருகுடல் அகற்றப் பட்ட நோயாளி இறைவன் உதவியால்  உயிர் பிழைத்துள்ள  சம்பவம்  சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஆதார  வைத்திய சாலையில் நிகழ்ந்துள்ளது. வளப் பற்றாக்குறை கொண்ட அன்வர் இஸ்மாயில் ஆதார  வைத்திய சாலையில் சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர்.ஏ.டபிள் யு எம்.சமீம்  04 மணித்தியால சத்திர சிகிச்சை செய்ததன்   பின்னர்  நோயாளியின்  சுருண்டு பெருக்கமடைந்த  பெருங்குடல் வெட்டி அகற்றப்பட்டுள்ளது .நோயாளி இப்போது நல்ல நிலைக்கு மீண்டுள்ளார். இது போன்றதொரு  சத்திர சிகிச்சை சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஆதார  வைத்திய சாலையில்  இடம் பெற்றது இதுவே முதல் தடவையாகும் என சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர்.ஏ.டபிள் யு எம்.சமீம்  தெரிவித்தார் 

றிஸானாவின் குடும்பத்திற்கு வீடு கையளிப்பு

Image
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட மூதூர் றிஸானா நபீக்கின் குடும்பத்தினருக்காக ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக சமூகம் மற்றும் இலங்கை இராணுவம் ஆகியன இணைந்து நிர்மாணித்த வீடு இன்று ஞாயிற்றுக்கிழமை உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. இந்த வீடு கையளிக்கும் நிகழ்வில் இராணுவ  தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரத்நாயக்க, மேஜர் ஜெனரல் லால் பெரேரா, கேணல் விகும் லியனகே, ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் கலாநிதி ரி.என்.எல்.கருணாரத்ன, சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி மெத கொட அபே திஸ்ஸ தேரர், வர்த்தக பொருளாதாரத துறைத் தலைவர் கலாநிதி அநுர குமார உதுமான்கே உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். றிஸானா நபீக்கிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதன் பின்னர் மிகவும் வறுமையில் வாழும் அவரது குடும்பத்தினருக்கு வீடொன்றை அமைத்துக் கொடுப்பதாக பலர் வாக்குறுதிகளை அள்ளி அள்ளி வளங்கினர் எனினும் எவரும் வீட்டை நிர்மாணித்துக்கொடுக்க முன்வராத நிலையில் ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக சமூகம் மற்றும் இலங்கை இராணுவம் ஆகியன இணைந்து வீடொன்றை அமைத்துக் கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மலேசிய உயர்ஸ்தானிகருடன் கல்முனை மாநகர முதல்வர் சிராஸ் கலந்துரையாடல்!

Image
(அகமட் எஸ். முகைடீன்)   கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப்பின் அழைப்பின் பேரில் இலங்கைக்கான மலேசிய நாட்டு உயர் ஸ்தானிகர் அஸ்மி செய்னுடீனுடனான சினேகபூர்வ கலந்துரையாடல் முதல்வரின் கொழும்பு இல்லத்தில் நேற்று முன்தினம் (11.10.2013) நடைபெற்றது. இதன்போது கல்முனை மாநகர சபையின் எதிர்கால திட்டம் மற்றும் அபிவிருத்தி வேலைத் திட்டங்கள்​ தொடர்பாக முதல்வரினால் விளக்கமளிக்கப்பட்டது. அத்தோடு கல்முனை மாநகர சபை தொடர்பான பல்வேறு பட்ட முக்கிய விடயங்கள் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

நாம் ஏன் பதவியேற்பு நிகழ்வை பகிஸ்கரித்தோம்? -PLOTE விளக்கம்!!

Image

சாய்ந்தமருது பிளையிங் ஹோர்ஸ் அணியினர் 17 ஓட்டங்களால் வெற்றி பெற்றனர்.

Image
யு.எம்.இஸ்ஹாக்    கல்முனை ஜிம்ஹானா  விளையாட்டு கழகத்தின் 25வது நிறைவை கொண்டாடும் வகையில்  ஏற்பாடு செய்யப்பட்ட  கிரிக்கட் சுற்றுப் போட்டியின் 5வது போட்டியில் கல்முனை லெஜென்ஸ்  விளையாட்டு கழகத்தை   எதிர்த்து சாய்ந்தமருது  பிளைங் ஹோர்ஸ் விளையாட்டு கழகம்   மோதின. நாணய சுழற்சிய்ல்  வெற்றிபெற்ற   சாய்ந்தமரு பிளைங் ஹோர்ஸ்  முதலில் துடுபெடுத்து  ஆடி 19 ஓவர்கள் முடிவில் 119 ஓட்டங்களை பெற்றனர் . இவ்வணியின் சார்பில் சுஜான்  25 ஓட்டங்களையும் ,ராஜுடீன்  17 ஓட்டங்களையும் ,இம்ரான் 13 ஓட்டங்களையும் பெற்றனர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கல்முனை லெஜன்ஸ்  அணியினர்  18.4 ஓவர்களில்  சகல  விக்கட்டுக்களையும் இழந்து 102 ஓட்டங்களை மட்டுமே  பெற்றனர். இவ்வணியின் சார்பில் அசீம் 13 ஓட்டங்களையும்   பாயிஸ்  12 ஓட்டங்களையும் ,ஜவாஸ் 11 ஓட்டங்களையும் பெற்றனர். இந்த போட்டியில் சாய்ந்தமருது  பிளையிங்  ஹோர்ஸ்  அணியினர் 17 ஓட்டங்களால் வெற்றி பெற்றனர்.  இந்த   போட்டியில் சாய்ந்தமருது பிளையிங்  ஹோர்ஸ்  அணியை சேர்ந்த வீரரான ஆசாத்  04 ஓவர் பந்து வீசி 13 ஓட்டங்ககளை    கொடுத்து  04

திவிநெகும வாழ்வின் எழுற்ச்சி 5ஆம்கட்ட அங்குராப்பண நிகழ்வுகள் இன்று

Image
திவிநெகும வாழ்வின் எழுற்ச்சி 5ஆம்கட்ட அங்குராப்பண நிகழ்வுகள் இன்று தேசிய ரீதியாக இடம் பெற்றது  இதற்கமைவாக கல்முனைப் பிரதேச செயலகத்தினால் ஒழுங்குசெய்யப்பட்ட நிகழ்வுகள் இன்று காலை 10.11மணிக்கு இடம்பெற்றது. பிரதேசசெயலாளர்  எம்.எம்.நௌபல் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதி திட்டமிடல் பணிப்பாளா;  மோகனகுமர்  தலைமைப்பீட  சமுர்த்தி முகாமையாளர்களான ஏ.ஆர்.எம். சாலிஹ்  வலய வங்கி முகாமையாளர்  ஏ.சீ. அன்வா; உட்பட பிரதேசசெயலகத்தில் கடமையாற்றும் கள உத்தியோகத்தர்கள் சமூகப் பிரதிநிதிகள் எனப்பலரும் கலந்துகொண்டனா;.

சர்வதேச முதியோர் தின நிகழ்வு முதியோர்களுக்கு குடைகள் வழங்கி கொளரவிக்கும் நிகழ்வும்

Image
யு.எம்.இஸ்ஹாக்  கல்முனை பிரதேச செயலகத்தினால் 2013.10.11ம் திகதி வெள்ளிக் கிழமை பி.ப. 3.00 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சர்வதேச முதியோர் தின நிகழ்வு  நடை பெறவுள்ளது  முதியோர்களை கௌரவிக்கும் முகமாக மருதமுனை தலைமையகமாக  கொண்டு இயங்கும் ஆகாஸ்  அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட திட்டத்திற்கு அமைவாக முதியோர்களுக்கு  குடைகள் வழங்கி கொளரவிக்கும் பொருட்டு ஒரு தொகுதி குடைகள் பிரதேச செயலாளர் M.M. நௌபல் அவர்களிடம் அமைப்பின் தலைவர் Dr.S.S. ஜெமீல் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.  இதன் போது அமைப்பின் செயலாளர் A.L.M.பாறுக்,அமைப்பின் அங்கத்தவர் A.A. கமால் மற்றும் கல்முனை பிரதேச செயலக சமூக சேவை பிரிவு அபிவிருத்தி உத்தியோகத்தர்  M.I. கபீபா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

புதிய பிரதி அமைச்சர்களாக ஒன்பது பேர் இன்று ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்!

Image
பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்பது பேர் புதிய பிரதி அமைச்சர்களாக  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் இன்று (10ம் திகதி) பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர். இந்தப்  பதவிப்பிரமாண நிகழ்வு இன்று முற்பகல்  ஜனாதிபதி செயலகத்தில்  நடைபெற்றது. தபால் சேவைகள் பிரதியமைச்சராக சனத் ஜயசூரியவும்  கைத்தொழில் மற்றும் வர்த்தக பிரதியமைச்சராக லக்க்ஷ்மன் வசந்த பெரேரா பதவி பிரமாணம் செய்தனர். அவ்வாறே, தொழில் பிரதியமைச்சராக சரத் வீரசேகரவும், விவசாய பிரதியமைச்சராக வை.ஜீ.பத்மசிறியும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக பிரதியமைச்சராக ஹேமால் குணசேகரவும், தெங்கு அபிவிருத்தி மற்றும் மக்கள் தோட்ட அபிவிருத்தி பிரதியமைச்சராக விக்டர் பெரேராவும் பிரதி கல்வியமைச்சராக மொஹான் லால் கிரேருவும், சிறு ஏற்றுமதி பயிர் ஊக்குவிப்பு பிரதியமைச்சராக நிஷாந்த முத்துஹெட்டிகமவும், புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு பிரதி அமைச்சராக சரத் முத்துகுமாரனவும் பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டனர்.

கவிஞ்சர் அபாருடனான இலக்கிய நேர்காணல்

Image
1990களின் பிற் பகுதியில் கிழக்கு மண்ணில் இருந்து புதுமை தன்மையுடன்  கவிதை எழுதி வரும்  "இடி விழுந்த வம்மி" கவிதை தொகுதியின் ஆசிரியருமான  கவிஞ்சர்  அபாருடனான  இலக்கிய நேர்காணல் ஓன்று சனிக்கிழமை வசந்தம் தொலைக்காட்சியின் தூவானம்  நிகழ்ச்சியில் காலை 10.15க்கு  ஒளிபரப்பு  செய்யப் படவுள்ளது. இந்த நேர்காணலை சிரேஷ்ட அறிவிப்பாளர் நாகபூசணி நிகழ்த்தவுள்ளார் .

கல்முனையில் வாகன விபத்தொன்று இடம் பெற்றது .

Image
யு.எம்.இஸ்ஹாக்  இன்று(09.10.2012) இரவு 9.30 யளவில்  கல்முனையில் வாகன விபத்தொன்று இடம் பெற்றது .  கல்முனை  மதுபான  சாலை ஒன்றில் இருந்து  மது போத்தல்களுடன்  வீரமுனை தமிழ் கிராமத்தை நோக்கி மோட்டார் பைசிகளில்  வேகமாக  சென்ற வேளை  எதிரே வந்த  கார் ஒன்றுடன் மோதி  பாரிய விபத்து நடந்தது.  மோட்டார் பைசிகளில் எடுத்து சென்ற  மது பானப்  போத்தல்கள்  உடைந்ததால் மோட்டார் பைசிகளில் சென்ற இருவரும் பலத்த வெட்டு காயங்களுடன்  கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.மோட்டார் பைசிகள்  பலத்த சேதமாகி காணப் படுகிறது . இதே வேளை  மோதுண்ட காரும்  சேதமாகி உள்ளதுடன் காரில் இருந்த இருவரும் காயங்களுடன்  அதே வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர் . சம்பவம் தொடர்பாக  கல்முனை பொலிசார் விசாரணை செய்கின்றனர் 

பொத்துவிலில் மினி சூராவளி – வீடு கடைகள் சேதம்

Image
பொத்துவில் பகுதியில் இன்று (08) மாலை வீசிய கடும் காற்றினால் பல வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. இச்சுழல் காற்று மாலை 3.30 தொடக்கம் வீசியதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார். எனினும் சேத விபரங்கள் இதுவரை கணிக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டார். இந்நிலையில் சுழல் காற்றினால் 50ற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கல்முனையில் கடல் கொள்ளை

Image
யு.எம்.இஸ்ஹாக்  கல்முனை சாய்ந்தமருது பிரதேச முஸ்லிம் மீனவர்களின் வலை,மற்றும் மீன்கள்  நடுக்கடலில்  களவெடுக்கப் படுவதாக கல்முனை பொலிசில்  முறைப்பாடு செய்யப் பட்டுள்ளது . கடற்படையினரின் உதவியுடன்  இதனை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுப்பதாக  மீனவர்களுக்கு கல்முனை பொலிஸ்  நிலைய பொறுப்பதிகாரி  தெரிவித்துள்ளார் . இச்சம்பவம்  தொடர்பாக தெரிய வருவதாவது  கல்முனை ,சாய்ந்தமருது பிரதேசத்தை  சேர்ந்த  ஆழ் கடல் மீனவர்கள் இரவு நேரத்தில் மீன் பிடிக்க வலையை கடலில் போட்டுவிட்டு  கண்விழித்துக் காத்திருக்கும்  சமயத்தில்   தங்கள் வலையில் பிடிபட்டு கிடக்கின்ற  மீன்களை களவில் எடுத்து செல்வதாகவும்  சில வேளை  வலையை வெட்டி செல்வதாகவும்  மீனவர்கள் தெரிவிக்கின்றனர் . மட்டக்களப்பு  மாவட்டத்தின்  களுவாஞ்சிகுடி  பிரதேசத்தை சேர்ந்தவர்களும் ,அம்பாறை மாவட்டத்தின்  காரைதீவை சேர்ந்தவர்களுமே தங்கள் மீனையும் ,வலையையும் களவெடுப்பதாக  பொலிசில் மீனவர் சங்கங்களினால்  முறைப்பாடு செய்ப்பட்டுள்ளது.  இந்த விடயம் தொடர்பாக  பொலீசாருக்கும் ,மீன்பிடி திணைக்களத்துக்கும்  அறிவித்தும்  நடவடிக்கை எடுக்கப் படாமையால்  இதன

ஜனாதிபதி மகிந்தவுடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் பேச்சு

Image
இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சந்தித்து பேசினார். இன்று காலை இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் அமைச்சர்களான ஜி.எல்.பீரிஸ், டக்ளஸ் தேவானந்தா உட்பட பலரும் பங்குகொண்டிருந்தார்கள். இதனைத் தொடர்ந்து விஷேட விமானத்தில் யாழ்ப்பாணம் செல்லும் இந்திய அமைச்சர் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனையும் சல்மான் குர்ஷித் இன்று மாலை சந்திக்கிறார்.