சர்வதேச வறுமை ஒழிப்பு தினம்

யூ.எம்.இஸ்ஹாக் 

சர்வதேச வறுமை ஒழிப்பு தினம்   கல்முனை பிரதேச செயலகத்திலும் அனுஸ்டிக்கப்பட்டது. சமுர்த்தி சமுக அபிவிருத்தி மன்றம் ஏற்பாடு செய்த இவ்வைபவம்  கல்முனை பிரதேச செயலகத்தில் இன்று காலை சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ் தலைமையில் நடை பெற்றது .
இந்த வைபவத்தில்  சமுர்த்தி திட்டத்தினால் வறுமையில் இருந்து மீட்சி பெற்ற  நற்பிட்டிமுனைஇ மருதமுனைஇ கல்முனை  பிரதேசத்தை சேர்ந்த 13 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தாங்களாகவே முன் வந்து வறுமை நிவாரண முத்திரையை மீள ஒப்படைத்துள்ளனர். அத்தோடு மேலும் வறுமையில் இருந்து மீழும் வகையில் 33 குடும்பங்களுக்கு 15இலட்சம் ரூபா நிதி ஜீவனோபாயக் கடனாக வழங்கி வைக்கும் நிகழ்வூம் இடம் பெற்றது.
இவ் விழாவில் அம்பாறை மாவட்ட பிரதி சமுர்த்தி பணிப்பாளர் யூ.பி.எஸ்.அனுருத்த பியதாச இகல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல் இமாவட்ட சமுர்த்தி இணைப்பாளர் ஐ.அலியார்இ ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
சமுர்த்தி திட்டத்தை சிறப்பாக நடைமுறைப்படுத்தும் உத்தியோகத்தர்கள் கௌரவிப்பும் அங்கு இடம் பெற்றது.
இலங்கை சமுர்த்தி அதிகார சபையினது  திரியபியச திட்டத்தின் கீழ் நற்பிட்டிமுனை 02ம் பிரிவில் வறிய குடும்பத்தை சேர்ந்த யூவதி ஒருவருக்கு  நிர்மாணிக்கப்பட்ட  வீடு கையளிக்கும் வைபவம் நேற்று  சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஜெமீல் தலைமையில் நடை பெற்றது.
அரச நிதியிலும் தனவந்தர்களின் பங்களிப்புடனும் 04இலட்சம் ருபா செலவில்  கல்முனை சமுர்த்தி சமுக அபிவிருத்தி மன்றத்தினால் நிர்மாணிக்கப்பட்ட இவ்வீடு கையளிப்பு விழாவில் அம்பாறை மாவட்ட பிரதி சமுர்த்தி பணிப்பாளர் யூ.பி.எஸ்.அனுருத்த பியதாச இகல்முனை பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல் இமாவட்ட சமுர்த்தி இணைப்பாளர் ஐ.அலியார்இ தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டு கையளித்தனர்.
 ஊர்பிரமுகர்கள் பலர் நிகழ்வில் கலந்து கொண்டனர். கையளிக்கப்பட்ட இவ்வீட்டில்  குறித்த யூவதிக்கு  ஓரிரு தினங்களில் திருமணம் நடை பெறவூள்ளமை குறிப்பிடத் தக்கது.













Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்