நோயாளி ஒருவரின் பெருங்குடல் மலை பாம்பின் உருவத்தில்

யு.எம்.இஸ்ஹாக் 


நோயாளி ஒருவரின் பெருங்குடல்  மலை பாம்பின் உருவத்தில்  சுருண்டு  பெருக்கமடைந்த நிலையில்  சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஆதார  வைத்திய சாலையில் சத்திர சிகிச்சை செய்யப்பட்டு அகற்றப்பட்டுள்ளது. 

பெருகுடல் அகற்றப் பட்ட நோயாளி இறைவன் உதவியால்  உயிர் பிழைத்துள்ள  சம்பவம்  சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஆதார  வைத்திய சாலையில் நிகழ்ந்துள்ளது.

வளப் பற்றாக்குறை கொண்ட அன்வர் இஸ்மாயில் ஆதார  வைத்திய சாலையில் சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர்.ஏ.டபிள் யு எம்.சமீம்  04 மணித்தியால சத்திர சிகிச்சை செய்ததன்   பின்னர்  நோயாளியின்  சுருண்டு பெருக்கமடைந்த  பெருங்குடல் வெட்டி அகற்றப்பட்டுள்ளது .நோயாளி இப்போது நல்ல நிலைக்கு மீண்டுள்ளார்.





இது போன்றதொரு  சத்திர சிகிச்சை சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஆதார  வைத்திய சாலையில்  இடம் பெற்றது இதுவே முதல் தடவையாகும் என சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர்.ஏ.டபிள் யு எம்.சமீம்  தெரிவித்தார் 

Comments

Popular posts from this blog

மறிச்சிக்கட்டி மக்களோடு விளையாடும் முஸ்லீம் அரசியல் இயலாமிகள்

300000பேர் சட்டவிரோதமான முறையில் சமுர்தியை பெற்றுக் கொண்டுள்ளனர் -சமுர்த்தி ஆணையாளர்