மலேசிய உயர்ஸ்தானிகருடன் கல்முனை மாநகர முதல்வர் சிராஸ் கலந்துரையாடல்!
(அகமட் எஸ். முகைடீன்)
கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப்பின் அழைப்பின் பேரில் இலங்கைக்கான மலேசிய நாட்டு உயர் ஸ்தானிகர் அஸ்மி செய்னுடீனுடனான சினேகபூர்வ கலந்துரையாடல் முதல்வரின் கொழும்பு இல்லத்தில் நேற்று முன்தினம் (11.10.2013) நடைபெற்றது.
இதன்போது கல்முனை மாநகர சபையின் எதிர்கால திட்டம் மற்றும் அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் தொடர்பாக முதல்வரினால் விளக்கமளிக்கப்பட்டது. அத்தோடு கல்முனை மாநகர சபை தொடர்பான பல்வேறு பட்ட முக்கிய விடயங்கள் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
Comments
Post a Comment