Posts

மட்டக்களப்பு பாலாமீன் மடு ஆயுதம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

Image
விடுதலை புலிகளால் மறைத்து வைக்கப் பட்டதாக தெரிவிக்கப்படும்  ஒரு தொகுதி ஆயுதம்  மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று 17 கண்டெடுக்கப்பட்டுள்ளது . மட்டக்களப்பு பாலாமீன் மடு திரா மடு கிராமத்தில் பாழ் வீடொன்றில் மறித்து வைக்கப்படிருந்த ஆயுதங்களே மட்டக்களப்பு புலனாய்வு பிரிவினரால் நேற்று மாலை 3.00 மணிக்கு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலை அடுத்து குறித்த பிரதேசம் சுற்றிவளைக்கப் பட்டு  45 கைக்குண்டுகளும் ,11 மிதி வெடிகளும் கைப்பற்றப்பட்டிருபதாக மட்டக்களப்பு புலனாய்வு பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது தொடர்பாக புலன் விசாரணை நடத்தி வருவதாகவும் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார் 

கல்முனை வலயக்கல்வி அலுவலகசித்திரை புத்தாண்டு விழா

Image
கல்முனை வலயக்கல்வி அலுவலக நலன் புரி சங்கம்  ஏற்பாடு செய்த சித்திரை புத்தாண்டு விழா இன்று  ( 16) வலய கல்வி அலுவலக முற்றத்தில் இடம் பெற்றது  வலயக்கல்விப் பணிப்பாளர் யு.எல்.எம்.ஹாசீம் தலைமையில் நடை பெற்ற  இவ்விழாவில் கணக்காளர் நிருவாக உத்தி யோகதர்  பிரதிகல்வி பணிப்பாளர்கள்; உதவி கல்வி பணிப்பாளர்கள் ஆசிரிய ஆலோசகர்கள் கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உட்பட உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் கலந்து கொண்டனர்  காலை மாலை நிகழ்வுகளாக  விளையாட்டு நிகழ்வுகளும் மேடை நிகழ்வுகளும் நடை பெற்றது. இவ்விழாவில் வலய கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் பங்குபற்றும் பல போட்டி நிகழ்வுகள் ஒழுங்கு படுத்தப்பட்டு நடை பெற்று பரிசளிப்பு நிகழ்வும் இடம் பெற்றது    படங்கள் இணைக்கப்பட்டுள்ளது 

கல்முனை மாநகர சபையில் ஆசிய மன்றத்தின் செயற்பாடுகள் நீடிப்பு!

Image
கல்முனை மாநகர சபையில் ஆசிய மன்றம் நடைமுறைப்படுத்தி வரும் உள்ளுர் பொருளாதார ஆட்சி செயற்திட்டத்தினை மேலும் இரண்டு வருடங்களிற்கு தொடர்வதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையினை கைச்சாத்திடும் நிகழ்வு இன்று (14) முதல்வர் அலுவலகத்தில் நடைபெற்றது.  இதன்போது கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தம் முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபினால் ஆசிய மன்றத்தின் சிரேஷ்ட தொழில்நுட்ப ஆலோசகர் சுபாகரனிடம் கையளிக்கப்பட்டது. இதன் மூலம் 2015ம் ஆண்டு ஜூன் மாதம் வரை ஆசிய மன்றத்தின் இச்செயற்பாடு கல்முனை மாநகர சபையில் தொடரப்படவுள்ளது.  முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாநகர பொறியியலாளர் ஹலீம் ஜௌசி, கணக்காளர் எல்.ரீ.சாலிதீன், ஆசிய மன்றத்தின் சிரேஷ்ட தொழில்நுட்ப ஆலோசகர் சுபாகரன், திட்ட உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.வலீத், முதல்வரின் பிரத்தியேக செயலாளர் ஏ.எல்.எம்.இன்சாட் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மஹசென்" சூறாவளி விலகிச் செல்கின்றது!

Image
வங்காள விரிகுடாவில் மையம் கொண்டிருந்த மஹசென் சூறாவளி நாட்டிலிருந்து விலகிச் செல்வதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக நாட்டின் பல பகுதிகளிலும் பெய்துவரும் பலத்த மழையினால் மக்களின்  இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.   யாழ்ப்பாணம்- மட்டக்களப்பு- அம்பாறை- திருகோணமலை- மாத்தளை- கண்டி- நுவரெலியா- புத்தளம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் நேற்றிரவு முதல் பலத்த மழை பெய்துவருகின்றது. கடும் காற்றினால் வீதிகளில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதாகவும் வெள்ளநீர் தேங்கி நிற்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்முனை டொப்பாசஸ் அணியினர் சம்பியன்களாக தெரிவு

Image
கல்முனை கிறிக்கட் சம்மேளனம் கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதானத்தில் கடந்த சனிக்கிழமை (11) ஒழுங்கு செய்திருந்த கல்முனை பிரிமியர் லீக் 20 இற்கு 20 கடின பந்து கிறிக்கட் சுற்றுப் போட்டிக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட கல்முனை மாநகர மேயர் கலாநிதி ஸிராஸ் மீராசாஹிப் வீரர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கப்படுவதனையும் கல்முனை கிறிக்கட் சம்மேளனத்தின் தலைவர் எம்.எம்.ஜெஸ்மின் உடனிருப்பதனையும் சுற்றுப் போட்டியில் சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்ட கல்முனை டொப்பாசஸ் அணியினர் அதிதிகளுடன் தாம் பெற்ற கிண்ணத்துடன் நிற்பதனையும் நிகழ்வில் கலந்து கொண்டோரையும் படங்களில் காணலாம்.

சர்வதேச அன்னையர் தினம் இன்று

Image
உலகளாவிய ரீதியில் சர்வதேச அன்னையர் தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. உயிர்களை இவ்வுலகில் ஜனனிக்க செய்த பெண்மையின் ஓர் வடிவமான அன்னையை கெளரவித்து அவர்களை மகிழ்விக்க வேண்டும் என்பதே இந்த தினத்தின் நோக்கமாக அமைந்துள்ளது. 16 ஆம் நூற்றாண்டில் மேற்கு வேர்ஜினியாவில் அன்னையை போற்றும் வகையில் பிரபல சமூக சேவகியான அனா ஜார்விஸ்னால் கிராப்டன் நகரில் இந்த தினம் உருவாக்கப்பட்டது. இதன் பிரகாரம் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிறு 'மதறிங் சன்டே' என  அழைக்கப்பட்டது. அக்காலத்தில் அமெரிக்க உள்நாட்டு யுத்தத்தில் உயிரிழந்த வீரர்களின் குடும்பங்கள் நாலா பக்கமும் சிதறிப்போயிருந்தன. பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேரவும் அவர்களுடைய நல்வாழ்வு மற்றும் சமாதானத்திற்கு அயராது பாடுபட்ட ஜார்விஸை கௌரவிக்கும் பொருட்டே மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினமாக பிரகடனப்படுத்தப்பட்ட

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு பயிற்சி செயலமர்வு

Image
அம்பாறை மாவட்ட தமிழ் பேசும் ஊடகவியலாளர்களுக்கு செய்திகளை அறிக்கையிடல் மற்றும் பத்திரிகைத்துறை சார் ஒழுக்கக்கோவை பற்றிய பயிற்சி செயலமர்வு இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் அம்பாறை மொண்டி ஹோட்டலில் நேற்று நடைபெற்றது.  இச்செயலமர்வு இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவின் தமிழ் மொழிப் பிரிவு பொறுப்பதிகாரி அமீர் ஹூசைன் தலைமையில் நடைபெற்றது.  இச்செயலமர்வு காலை 8.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு மாலை 4.30 மணி வரை முழு நாள் செயலமர்வாக நடைபெற்றது. இதில் மட்டுப்படுத்தப்பட்ட 35 ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.  செயலமர்வின் முடிவில் ஊடகவியலாளர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

கல்முனை மாநகர முதல்வரின் இணைப்புச் செயலாளர் இன்ஸாட்டின் வீட்டிக்கு கல் வீச்சு தாக்குதல்

Image
கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபின் இணைப்புச் செயலாளர்; ஏ.எல்.எம்.இன்ஸாட்டின் வீட்டிக்கு நேற்று (04) இரவு 10 மணியளவில் இனம் தெரியாத நபர்களால் கல் வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  மேற்படி தாக்குதலில் வீட்டு ஜன்னல்கள் சேதமாக்கப்பட்டுள்ளது. இதன்போது வீட்டில் இருந்த எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.  இதுவிடயமாக சம்பந்தமாக இன்ஸாட் குறிப்பிடுகையில்,  எனக்கு தனிப்பட்ட விரோதிகள் எவரும் இல்லை என்றும் இந்த செயலை முதல்வரின் இணைப்புச் செயலாளர் நான் என்ற வகையில் முதல்வருடன் உள்ள அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக சில உள்ளுர் அரசியல்வாதிகளின் அடியாட்களே இவ்வாறு செய்திருக்கலாம் என சந்தேகிக்கின்றேன்.  முதல்வர் சார்ந்தவர்களை இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் அச்சுறுத்தி முதல்வரை தனிமைப்படுத்தி, அவரது பதவியை பறித்தெடுத்து அரசியலில் இருந்து ஓரம்கட்டும் திட்டத்தின் அடிப்படையில்தான் இந்த அடாவடித்தனங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்தார்.  இதேவேளை, சம்பவ நேரம் தனது மகள் கதறி அழுதுகொண்டு வந்ததாகவும், இந்த சம்பவத்தால் வீட்டிலிருந்தவர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என

கல்முனை கல்வி வலயத்தில் 13 பாடசாலைகள் அபிவிருத்தி

Image
கல்முனை கல்வி வலயத்திற்கு உட்பட்ட 13 பாடசாலைகள் அபிவிருத்தி செய்வதற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளன.பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நாடளாவிய ரீதியிலான ஐயாயிரம் ஆரம்பப் பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் இந்த பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் யூ.எல்.எம். காசிம் தெரிவித்துள்ளார் . தெரிவு செய்யப்பட்டிருக்கும் பாடசாலைகளின் அபிவிருத்திக்காக 65 இலட்சம் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார் .

கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையின் வருடாந்த இல்லவிளையாட்டுப் போட்டியில் 688 புள்ளிகளைப் பெற்று வில்சன்இல்லம்(பச்சை) இவ்வருட சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

Image
கல்முனை   உவெஸ்லி   உயர்தர   பாடசாலையின்   வருடாந்த   இல்ல விளையாட்டுப்   போட்டியில்  688  புள்ளிகளைப்   பெற்று   வில்சன் இல்லம் ( பச்சை )  இவ்வருட   சம்பியன்களாக   தெரிவு   செய்யப்பட்டுள்ளது . அதிபர்   வீ .  பிரபாகரன்   தலைமையில்   இடம்பெற்ற   மேற்படி   இல்ல விளையாட்டுப்   போட்டியில்   கல்முனை   வலய   கல்வி   பணிப்பாளர் யு . எல் . எம் . ஹாஸிம்   பிரதம   அதிதியாகவும்  ,  கல்முனை   வலய   பிரதி   கல்விப் பணிப்பாளர்   வீ . மயில்வாகனம்   கௌரவ   அதிதியாகவும்  ,  கல்முனை   தமிழ் கோட்ட   கல்வி   பணிப்பாளர்   பீ .  ஜெகநாதன்   மற்றும்   கிழக்கு   மாகாணசபை உறுப்பினர்   பேராசிரியர்   எம் .  இராஜேஸ்வரன்    ஆகியோர்   விசேட அதிதிகளாகவும்கலந்து   கொண்டதுடன்   கல்முனை   வலய   உடற்கல்வி   உதவி கல்விப்   பணிப்பாளர்   ஏ . ஏ . சத்தார்   இல்ல   விளையாட்டுப்   போட்டி நிகழ்வுகளுக்கு   முகாமையாளராக   இருந்தததுடன்   கல்முனை   வலய உடற்கல்வித்துறை   ஆசிரிய   ஆலோசகர்   ஐ . எல் . எம் . இப்றாஹிம்   ஒலிம்பிக் தீபத்திற்கான   தீயினையும்   ஏற்றி   வைத்தனர் . இவ்   இல்

இளைஞர் நாடாளுமன்ற தேர்தல்; அம்பாறையில் 46 பேர் போட்டி

Image
  அம்பாறை மாவட்டத்தில் 20 இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவுக்காக 46 இளைஞர்கள் போட்டியிடுகின்றனர். இன்று நாடளாவிய ரீதியில் இடம்பெறும் 2ஆவது இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் அம்பாறை மாவட்டத்தில் உள்ள 12 பிரதேச செயலகங்களிலும் இடம்பெறுகின்றது. அம்பாறை மாவட்டத்தில் 20 பிரதேசசெயலகங்களிலும் 20உறுப்பினர்களை தெரிவுசெய்ய வேண்டியிருந்தும் 8 பிரதேசங்களில் போட்டியின்றி தெரிவு இடம்பெற்றமையினால் 12 பிரதேச பிரிவுகளிலே இளைஞர் நாடாளுமன்ற தேர்தல் இடம்பெறுகின்றது. இத்தேர்தலுக்கான இளைஞர் கழக அங்கத்தவர்களின் வாக்களிப்பு இன்று காலை 8 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு மாலை 4 மணிக்கு நிறைவடைய உள்ளது. இதற்கமைவாக கல்முனைப் பிரதேச இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு கல்முனை பிரதேச செயலகத்தில் இடம்பெறுகின்றது. இளைஞர்கள் வாக்களிப்பில் ஈடுபடுவதனையும், இளைஞர் நாடாளுமன்ற  கல்முனைப் பிரதேச தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியும், கல்முனைப் பிரதேச செயலாளருமான எம்.எம்.நௌபல் உட்பட பிரதேச செயலக அதிகாரிகள் சிலர் தேர்தல் பணிகளில் ஈடுபடுவதனையும் படங்களில் காணலாம்.

மத்திய முகாமில் கல்முனை பற்றிமாக் கல்லுரி மாணவன் நீரில் மூழ்கி பலி!

Image
அம்பாறை மாவட்டத்திலுள்ள மத்திய முகாம் பாரிய வாய்க்காலில் நீராடிய பாண்டிருப்பு மாணவன் தர்மலிங்கம் விஜய் (வயது 17) நீரில் மூழ்கி பலி யாகியுள்ளார். கல்முனை கர்மேல் பற்றிமாக் கல்லுரியில் க.பொ.த. உயர்தரம் கணிதப் பிரிவில் கற்கும் விஜய் தனது 3 நண்பர்களுடன் இன்று காலை பாண்டிருப்பிலிருந்து மத்திய முகாமிற்கு நீராடச் சென்றபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மோசமான நிலையில் மத்திய முகாம்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த விஜய சிகிச்சை பலனளிக்காத நிலையில் மரணமானார். பிரேத பரிசோதனைக்காக வேறு வைத்தியசாலைக்கு பிரேதம் கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண சபையின் அமைச்சரவைத் தீர்மானங்கள்

Image
கிழக்கு   மாகாணசபையின்   அமைச்சரவைக்   கூட்டம்   சென்ற 22.04.2013 ம்   திகதி   கிழக்கு   மாகாண   முதலமைச்சர்   நஜீப் அப்துல்   மஜீட்   அவர்களின்   தலமையில்   நடைபெற்ற அமைச்சரவைக்   கூட்டத்தின்   போது   எடுக்கப்பட்ட தீர்மானங்களை   கிழக்கு   மாகாண   அமைச்சரவையின் பேச்சாளரும் ,  வீதி   அபிவிருத்தி   அமைச்சருமான எம் . எஸ் . உதுமாலெப்பை   அவர்கள் பத்திரிகையாளர்   மகாநாட்டில்   வெளியிட்டார் . அத்தீர்மானங்கள்   பின்வருமாறு . 01.  அக்கரைப்பற்று   கல்வி   வலயத்தில்   தொடர்ச்சியாக   நிலவிவரும்   ஆசிரிய   வெற்றிடங்களை நிரப்புதல் .  அக்கரைப்பற்று   வலயத்திற்குட்பட்ட   பொத்துவில்   பிரதேச   கல்விக்   காரியாலய   பாடசாலைகளில்   97  ஆசிரிய   வெற்றிடங்களும் ;,  அட்டாளைச்சேனை   பிரதேச   கல்விக்   காரியாலய   பாடசாலைகளில் 31  ஆசிரிய   வெற்றிடங்களும் ,  அக்கரைப்பற்று   பிரதேச   கல்விக்   காரியாலய   பாடசாலைகளில்  5 ஆசிரிய   வெற்றிடங்களும் ;  மொத்தமாக   அக்கரைப்பற்று   கல்வி   வலயத்தில்  133  ஆசிரிய வெற்றிடங்கள்   நீண்ட   காலமாக   நிலவி   வருவதால்   பல   பாடசாலைகளின்   கல்வி   வளர்ச்சி பாதிப்படை