கல்முனை மாநகர முதல்வரின் இணைப்புச் செயலாளர் இன்ஸாட்டின் வீட்டிக்கு கல் வீச்சு தாக்குதல்
கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபின் இணைப்புச் செயலாளர்; ஏ.எல்.எம்.இன்ஸாட்டின் வீட்டிக்கு நேற்று (04) இரவு 10 மணியளவில் இனம் தெரியாத நபர்களால் கல் வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேற்படி தாக்குதலில் வீட்டு ஜன்னல்கள் சேதமாக்கப்பட்டுள்ளது. இதன்போது வீட்டில் இருந்த எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.
இதுவிடயமாக சம்பந்தமாக இன்ஸாட் குறிப்பிடுகையில்,
எனக்கு தனிப்பட்ட விரோதிகள் எவரும் இல்லை என்றும் இந்த செயலை முதல்வரின் இணைப்புச் செயலாளர் நான் என்ற வகையில் முதல்வருடன் உள்ள அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக சில உள்ளுர் அரசியல்வாதிகளின் அடியாட்களே இவ்வாறு செய்திருக்கலாம் என சந்தேகிக்கின்றேன்.
முதல்வர் சார்ந்தவர்களை இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் அச்சுறுத்தி முதல்வரை தனிமைப்படுத்தி, அவரது பதவியை பறித்தெடுத்து அரசியலில் இருந்து ஓரம்கட்டும் திட்டத்தின் அடிப்படையில்தான் இந்த அடாவடித்தனங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை, சம்பவ நேரம் தனது மகள் கதறி அழுதுகொண்டு வந்ததாகவும், இந்த சம்பவத்தால் வீட்டிலிருந்தவர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இது விடயமாக கல்முனை பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து ஸ்தலத்திற்கு வந்த பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments
Post a Comment