இளைஞர் நாடாளுமன்ற தேர்தல்; அம்பாறையில் 46 பேர் போட்டி
அம்பாறை மாவட்டத்தில் 20 இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவுக்காக 46 இளைஞர்கள் போட்டியிடுகின்றனர். இன்று நாடளாவிய ரீதியில் இடம்பெறும் 2ஆவது இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் அம்பாறை மாவட்டத்தில் உள்ள 12 பிரதேச செயலகங்களிலும் இடம்பெறுகின்றது.
அம்பாறை மாவட்டத்தில் 20 பிரதேசசெயலகங்களிலும் 20உறுப்பினர்களை தெரிவுசெய்ய வேண்டியிருந்தும் 8 பிரதேசங்களில் போட்டியின்றி தெரிவு இடம்பெற்றமையினால் 12 பிரதேச பிரிவுகளிலே இளைஞர் நாடாளுமன்ற தேர்தல் இடம்பெறுகின்றது.
இத்தேர்தலுக்கான இளைஞர் கழக அங்கத்தவர்களின் வாக்களிப்பு இன்று காலை 8 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு மாலை 4 மணிக்கு நிறைவடைய உள்ளது. இதற்கமைவாக கல்முனைப் பிரதேச இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினரை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு கல்முனை பிரதேச செயலகத்தில் இடம்பெறுகின்றது.
இளைஞர்கள் வாக்களிப்பில் ஈடுபடுவதனையும், இளைஞர் நாடாளுமன்ற கல்முனைப் பிரதேச தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியும், கல்முனைப் பிரதேச செயலாளருமான எம்.எம்.நௌபல் உட்பட பிரதேச செயலக அதிகாரிகள் சிலர் தேர்தல் பணிகளில் ஈடுபடுவதனையும் படங்களில் காணலாம்.
Comments
Post a Comment