மட்டக்களப்பு பாலாமீன் மடு ஆயுதம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
விடுதலை புலிகளால் மறைத்து வைக்கப் பட்டதாக தெரிவிக்கப்படும் ஒரு தொகுதி ஆயுதம் மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று 17 கண்டெடுக்கப்பட்டுள்ளது .
மட்டக்களப்பு பாலாமீன் மடு திரா மடு கிராமத்தில் பாழ் வீடொன்றில் மறித்து வைக்கப்படிருந்த ஆயுதங்களே மட்டக்களப்பு புலனாய்வு பிரிவினரால் நேற்று மாலை 3.00 மணிக்கு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலை அடுத்து குறித்த பிரதேசம் சுற்றிவளைக்கப் பட்டு 45 கைக்குண்டுகளும் ,11 மிதி வெடிகளும் கைப்பற்றப்பட்டிருபதாக மட்டக்களப்பு புலனாய்வு பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக புலன் விசாரணை நடத்தி வருவதாகவும் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்
Comments
Post a Comment