கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையின் வருடாந்த இல்லவிளையாட்டுப் போட்டியில் 688 புள்ளிகளைப் பெற்று வில்சன்இல்லம்(பச்சை) இவ்வருட சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையின் வருடாந்த இல்லவிளையாட்டுப் போட்டியில் 688 புள்ளிகளைப் பெற்று வில்சன்இல்லம்(பச்சை) இவ்வருட சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.
அதிபர் வீ. பிரபாகரன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி இல்லவிளையாட்டுப் போட்டியில் கல்முனை வலய கல்வி பணிப்பாளர்யு.எல்.எம்.ஹாஸிம் பிரதம அதிதியாகவும் , கல்முனை வலய பிரதி கல்விப்பணிப்பாளர் வீ.மயில்வாகனம் கௌரவ அதிதியாகவும் , கல்முனை தமிழ்கோட்ட கல்வி பணிப்பாளர் பீ. ஜெகநாதன் மற்றும் கிழக்கு மாகாணசபைஉறுப்பினர் பேராசிரியர் எம். இராஜேஸ்வரன் ஆகியோர் விசேடஅதிதிகளாகவும்கலந்து கொண்டதுடன் கல்முனை வலய உடற்கல்வி உதவிகல்விப் பணிப்பாளர் ஏ.ஏ.சத்தார் இல்ல விளையாட்டுப் போட்டிநிகழ்வுகளுக்கு முகாமையாளராக இருந்தததுடன் கல்முனை வலயஉடற்கல்வித்துறை ஆசிரிய ஆலோசகர் ஐ.எல்.எம்.இப்றாஹிம் ஒலிம்பிக்தீபத்திற்கான தீயினையும் ஏற்றி வைத்தனர்.
இவ் இல்ல விளையாட்டுப் போட்டியில் 688 புள்ளிகளைப் பெற்று வில்சன்இல்லம் ( பச்சை) முதலாம் இடத்தையும் , 628 புள்ளிகளைப் பெற்று யோகம்இல்லம் ( மஞ்சள்) இரண்டாம் இடத்தையும் , 612 புள்ளிகளைப் பெற்றுகிரேஸ் நல்லதம்பி இல்லம் ( நீலம் ) மூன்றாம் இடத்தையும் 494புள்ளிகளைப் பெற்று நல்லதம்பி இல்லம் ( சிவப்பு) நான்காம் இடத்தையும்பெற்றுக் கொண்டன.
Comments
Post a Comment