அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு பயிற்சி செயலமர்வு
அம்பாறை மாவட்ட தமிழ் பேசும் ஊடகவியலாளர்களுக்கு செய்திகளை அறிக்கையிடல் மற்றும் பத்திரிகைத்துறை சார் ஒழுக்கக்கோவை பற்றிய பயிற்சி செயலமர்வு இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் அம்பாறை மொண்டி ஹோட்டலில் நேற்று நடைபெற்றது.
இச்செயலமர்வு இலங்கை பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவின் தமிழ் மொழிப் பிரிவு பொறுப்பதிகாரி அமீர் ஹூசைன் தலைமையில் நடைபெற்றது.
இச்செயலமர்வு காலை 8.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு மாலை 4.30 மணி வரை முழு நாள் செயலமர்வாக நடைபெற்றது. இதில் மட்டுப்படுத்தப்பட்ட 35 ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.
செயலமர்வின் முடிவில் ஊடகவியலாளர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
Comments
Post a Comment